இன்று ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி ஸ்வாதி நட்சத்திரம். மார்கழி மாதம் ஆறாம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
மேஷம்
நற்செயல்களால் பேரும், புகழும் கிடைக்கும். விவகாரங்களில் சுமூக தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். மனைவி உங்களுக்கு பெருமை தேடி தருவார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சில மாற்றம் செய்வீர்கள்.
ரிஷபம்
பயணத்தில் இனிய அனுபவம் கிடைக்கும். மனைவியின் கருத்தும், உதவியும் ஆறுதலாக இருக்கும்.உறவினர் எதிர்பார்ப்புடன் அணுகுவர். தாராள பண செலவில் குடும்ப தேவையை நிறைவேற்றுவீர்கள். புத்திரரின் அன்பு, பாசம் மகிழ்ச்சியை தரும்.
மிதுனம்
மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து வளர வாய்ப்பு வரும். பணியாளர் இனிய அணுகுமுறையால் சலுகையை எளிதில் பெறுவர். பாராட்டு, வெகுமதி கிடைக்கும். வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.
கடகம்
குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பணியாளர்கள் பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர்.உறவினர்களின் உதவி கிடைக்கும்
சிம்மம்
உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவியின் செயல்களில் குடும்ப நலன் பற்றிய அக்கறை மிகுந்திருக்கும். கிடைக்கின்ற வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துங்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிகள் நிறைவேற தனி கவனம் வேண்டும்.
கன்னி
பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பண வரவும் கூடும். புத்திரர் உங்களிடம் அதிக அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில் வியாபாரம் செழித்து ஆதாய பணவரவு கிடைக்கும். புத்தாடை, நகை வாங்க அனுகூலம் உண்டு
துலாம்
வெற்றி பாதை உருவாகும்.பண செலவுகளில் தாராளம் இருக்கும். தொழிலில் இடையூறு விலகி பண வரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்
இஷ்ட தெய்வ வழிபாடு சில நன்மையை தரும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் சீராகும். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். மனைவியின் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். பெண்கள் வீட்டு உபயோக பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
தனுசு
சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. தெய்வப் பணிகளில் ஈடுபட்டால் மனத் தெளிவும், நிம்மதியும் உண்டாக தடை இருக்காது. விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர்.
மகரம்
பணவரத்து அதிகரிக்கும்.பெரியோர்களின் ஆசியைப் பெற்றால் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். தனி கவனம் வேண்டும்
கும்பம்
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்ப்புகள் விலகும்.வாழ்க்கை துணை அன்பை தருவார்கள். பணிச்சுமை கூடுதலாக இருப்பதால் அழுத்தங்கள் இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும்
மீனம்
இன்று உங்கள் சாதனைகளைச் செய்வதற்கு உகந்த நாள். சோம்பலை மட்டும் விட்டு விட்டால் வெற்றிகளை அடையலாம். உங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!