logo
ADVERTISEMENT
home / Astrology
நெருக்கமானவர்கள் தந்து வந்த துன்பங்கள் நீங்கும் – எந்த ராசிக்கு இந்த பலன்

நெருக்கமானவர்கள் தந்து வந்த துன்பங்கள் நீங்கும் – எந்த ராசிக்கு இந்த பலன்

இன்று சனிக்கிழமை தசமி திதி சித்திரை நட்சத்திரம். மார்கழி மாதம் ஐந்தாம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

மேஷம்

சக பணியாளர்கள் உங்களை சங்கடப்படுத்துவார்கள். அதனால் வந்த இடையூறுகள் சரியாகி விடும். சகோதர வகையில் மனஸ்தாபம் உண்டு. கணவன் மனைவி நடுவே விவாதங்கள் ஏற்படக்கூடும். ஆகமொத்தம் நாக்கை கட்டுப்படுத்தினால் நலமாக இருக்கலாம். மிதமான பலன் கொண்ட நாள்

ரிஷபம்

ADVERTISEMENT

அம்மா வழியில் உதவிகள் கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். வேலை சம்பந்தமான தேர்வுகள் எல்லாம் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.மிதமான பலன் கொண்ட நாள்

மிதுனம்

வியாபார தடைகளை கடப்பீர்கள். பிள்ளைகள் செலவு வைப்பார்கள். குடும்ப உறவுகளை அனுசரிக்க வேண்டியது அவசியம். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் மந்தமாக காணப்படும்.மிதமான பலன் கொண்ட நாள் 

கடகம்

ADVERTISEMENT

உயர்பதவியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். மனதில் இருப்பதை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள நேரிடும். எதிர்ப்புகள் தாண்டி வெற்றி பெறுவீர்கள். சகோதர வழி ஆதாயம் உண்டு. எதிர்பாராத பணவரவுகள் இருக்கும். அம்மாவிடம் கேட்ட உதவி கிடைக்கும்.பொருள் சேர்க்கை உண்டாகும்

சிம்மம்

நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு சாதகமாகவே முடியும். இடமாற்றங்களால் பணியில் சில மாற்றங்கள் இருக்கும். பெரியவர் அனுமதியுடன் ஆலோசனையுடன் எதனையும் செய்ய வேண்டும். 

கன்னி

ADVERTISEMENT

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் நன்மை உண்டாகும். பணவரவுகள் எதிர்பார்த்த வண்ணம் இருக்காது. பெற்றோர் விருப்பத்தை பூர்த்தி செய்வது நன்மை தரும். பயணங்களின் போதும் வாகனங்களை இயக்கும்போதும் கவனம் தேவை.மிதமான பலன் கொண்ட நாள் 

துலாம்

மனதிற்கு நெருக்கமானவர்கள் தந்த துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். ஒற்றுமை கூடும்.பிள்ளைகள் சந்தோஷம் தருவார்கள். உடல்நிலை ஆரோக்கியம் மேம்படும். கடன் வாங்கும் முன்னர் பலமுறை யோசிக்கவேண்டும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்

ADVERTISEMENT

எதிர்பாலினர் உதவி செய்வதால் சாதகமான பலன்கள் உண்டாகும். எடுத்த காரியம் வெற்றியாக முடியும். தைரியமாக இறங்கவும். இணையதள முதலீடுகள் வெற்றி தரும். புதிய வீடு வாங்க வாகனம் வாங்க யோகம் உண்டு.முயற்சி செய்தால் முன்னேற்றம்தான்.மிதமான பலன் கொண்ட நாள் 

தனுசு

புது நண்பர்கள் அறிமுகம் வாழ்க்கைக்கு ஒளியேற்றும். தொழில் வியாபாரங்களில் பொறுப்பு அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். அலுவலகத்தில் பதவி உயர்வுக்கான பேச்சு நடைபெறும். லாபகரமான நாள்.

மகரம்

ADVERTISEMENT

பணியில் இருப்பவர்கள் அடுத்தவர்களை சகபணியாளர்களை விமர்சிக்காமல் இருப்பது நல்லது. வேலைப்பளு கூடுதலாக இருக்கலாம். எந்த முயற்சி எடுப்பதற்கு முன்னரும் இரண்டு முறை யோசித்து அதன்பின்னர் செயல்படுத்தவும்.மிதமான பலன் கொண்ட நாள் 

கும்பம்

தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நன்மை உண்டு. வேலை செய்யும் இடத்தில் நிதானம் தேவைப்படும். வேலை பற்றி வருத்தங்களை யாருடனும் பகிர வேண்டாம். புதிய சிந்தனைகள் மூலம் பாராட்டுக்கள் பெறுவீர்கள்.

மீனம்

ADVERTISEMENT

புது இலக்கு நிர்ணயிப்பீர்கள். செல்வாக்கு புகழ் அதிகரிக்கும். பணிபுரியும் போது பதட்டம் இல்லாமல் நிதானமாக இருக்கவும். குடும்ப உறவுகளிடம் அமைதியாக பேச வேண்டும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி தேடி வரும்.பொருள் சேர்க்கை உண்டாகும்

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
20 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT