திட்டங்கள் போடுவதால் வெற்றிக்கனி பறிக்கப்போகும் அந்த அறிவான ராசிக்காரர் நீங்கள் தானா !

திட்டங்கள் போடுவதால் வெற்றிக்கனி பறிக்கப்போகும் அந்த அறிவான ராசிக்காரர் நீங்கள் தானா !

இன்று செவ்வாய்க்கிழமை சஷ்டி திதி மக நட்சத்திரம் மார்கழி மாதம் முதல் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை சரிபாருங்கள்.

மேஷம்                                                                                  

இன்று ஆற்றலை குறைவாக பயன்படுத்துவீர்கள். சோர்வு மேலோங்கும் த்யானம் மற்றும் ஆன்மீக ஈடுபாடு நன்மை தரும். விவாதங்கள் வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை.

ரிஷபம்                                  

பொறுமையும் நிதானமும் கடைபிடிக்க வேண்டிய நாள். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.

மிதுனம்

கஷ்டப்பட்டு உழைத்தால் வாழ்க்கையின் தரம் உயரும். உங்கள் மனம் கவர்ந்தவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்கள். அதுதான் உங்கள் சந்தோஷத்திற்கான அடிப்படையாக இருக்கும்.

கடகம்

கொஞ்சம் கவலை தரும் நாளாக இது அமையலாம். கடைசி நொடியில் நல்ல வாய்ப்புக்களை நீங்கள் இழக்க நேரிடலாம். முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டாம். அதிர்ஷ்டம் குறைவான நாள்.

சிம்மம்

மனது அமைதியில்லாமல் அலைபாயலாம். தொழிலில் பல தடைகள் ஏற்படுவதால் விரக்தி மேலோங்கும். தடைகள் நீங்கும் வரை காத்திருக்க வேண்டும். பொறுமை முக்கியம்.

கன்னி

பொறுமையாக இருப்பதால் நாள் உங்களுடையதாக இருக்கும். சௌகர்ய குறைபாடுகள் ஏற்படலாம். சரியான திட்டங்கள் தீட்டுவதன் மூலமே உங்கள் நாளை சிறப்பாக மாற்ற முடியும்.

துலாம்

இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை. யதார்த்தமாக நாளை எதிர்கொள்ளுங்கள். உங்கள் பலவீனங்களை உங்கள் பலமாக மாற்றிக் கொள்ள பழகி விடுங்கள். எல்லாம் இனிதாகும்.

விருச்சிகம்

இன்று சிறப்பாக செயல்படுவீர்கள். அதனால் நாள் அற்புதமாக தொடங்கி முடியும். புதிய தொடர்புகள் புது நபர் அறிமுகங்கள் உங்கள் வாழ்வை மேம்படுத்தும். விரைந்து பணியை முடிப்பீர்கள்.

தனுசு

உங்களுக்கு நிதானம் தேவை. பதட்டம் அடையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். பிரார்த்தனைகள் தியானங்கள் உங்களை அமைதியாக்கும். நெருக்கமானவர்களிடம் கூட கவனமாக பேசுங்கள்.

மகரம்

பொறுமை சோதிக்கப்படலாம். எது நடந்தாலும் நிதானமாக இருப்பதே நன்மை தரும். ஆன்மீக ஈடுபாடு கோயில் செல்தல் மனநிம்மதி தரும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

கும்பம்

உங்கள் திட்டங்கள் அற்புதமாக இருப்பதால் எல்லாம் வெற்றி அடையும். உங்கள் வாக்கு ஆளுமை செய்வதால் அனைவர் மனதையும் கவருவீர்கள். பேச்சு சாமர்த்தியத்தால் பிழைப்பை நடத்திக் கொள்வீர்கள்.

மீனம்

மற்றவர் மனதில் இருப்பதை அறிந்து நடப்பீர்கள். பலவீனமானவர்களை நோகடிப்பது உங்கள் பாபகர்மாவை அதிகரிக்கும். முடிந்தவரை மௌனமாக இருப்பது உங்களுக்கு நன்மை தரும்.

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!