இன்று திங்கள் கிழமை பஞ்சமி திதி ஆயில்ய நட்சத்திரம் கார்த்திகை மாதம் 30ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை அறிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
பெரியவர்கள் ஆலோசனை பெற்றுக்கொண்டு எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும். உயர் அதிகாரியுடன் ஏற்பட்ட மனசங்கடங்கள் விலகும். வாழ்க்கைத்துணை ஆதரவு பெருகும். உற்சாகம் மேலோங்கும்.
ரிஷபம்
வேலைப்பளு அதிகரிக்கலாம். ஆனாலும் கொடுத்த பணிகளை குறைவில்லாமல் முடித்துக் கொடுப்பீர்கள். உறவினர்கள் வருவார்கள். மகிழ்ச்சி பெருகும். தொழில் முயற்சிகள் நன்மையில் முடியும். வாகனப்பயணங்கள் லாபம் கொண்டு வரும்.
மிதுனம்
நினைத்தது நிறைவேற நேரம் எடுக்கலாம். விவாதங்களில் நிதானம் வேண்டும். சொத்து விவகாரங்கள் உங்களுக்கு நன்மையில் முடியும். தாம்பத்ய சுகம் மேலோங்கும். பயணங்களில் கவனம் தேவை.அலுவலகம் உற்சாகம் தரும்.
கடகம்
சொந்த ஊருக்கு சென்று வருவதால் மேன்மை உண்டாகும். தொழில் தடைகள் இருந்தாலும் அதனைத் தாண்டி சாதனைகள் படைப்பீர்கள். தொழிலில் புது சிந்தனைகளை செயப்படுத்தலாம். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும்.
சிம்மம்
புது தொழில் வியாபார முயற்சிகள் வெற்றி தரும். புதுவேலைகளுக்கு இன்று விண்ணப்பிக்கலாம். திருமணப் பேச்சு வார்த்தைகள் சுபமாக முடியலாம். சொத்து விஷயங்கள் பொறுமையாக செல்லும். எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும்.
கன்னி
பணவரவு எதிர்பார்த்தபடி இருப்பதால் திருப்தியாக இருக்கும். அலுவலகத்தில் ஆதரவு பெருகும். உயர் அதிகாரிகள் உதவி செய்வார்கள். சொத்து பிரச்னைகள் மனவருத்தத்தில் சென்று முடியலாம். வெளிவட்டாரங்களில் மதிப்பு உயரும்.
துலாம்
மனக்குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். எதிர்பாராமல் உதவி கிடைக்கும். லாபம் பெருகும். சகபணியாளர்கள் ஆதரவு அலுவலகத்தில் கிடைக்கும். வாகனபழுதுகள் நீங்கும். உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
வேலையில் இருந்த தடங்கல்கள் அகலும். புத்திரர்கள் சிக்கலுக்குள்ளாவார்கள். பொறுமையை கடைபிடியுங்கள். உண்ணும் உணவில் கவனம் தேவை. உடலில் சிக்கல் உண்டாகலாம்.
தனுசு
புதிய தொழில் முயற்சி நலமாக முடியும். தங்க நகை சேர்க்கும் யோகம் வரும். புது நபர்களின் அறிமுகம் நன்மையைக் கொண்டு வரும். ஆசைப்பட்ட பொருள்களை வாங்கும் யோகம் உருவாகும். பழைய நண்பர்களை பார்த்து மகிழ்வீர்கள்.
மகரம்
இறக்குமதி தொழில் லாபம் தரும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றலாம். பெரியோரிடத்தில் நன்மதிப்பு பெருகும். வாழ்க்கைத்துணை உதவி செய்வார்கள். குடும்ப ஆதரவு இருக்கும். தொழில் சந்திப்புகள் சில சிக்கல்களை உருவாக்கலாம்.
கும்பம்
நிலுவைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டி வரும். சகபணியாளர்கள் உதவி செய்வார்கள். முயற்சிகள் வெற்றியில் முடிவதால் தன்னம்பிக்கை பெருகும். உறவினர்கள் வருகை உற்சாகத்தை தரும்.
மீனம்
வீண் செலவுகளை குறைக்க வேண்டிய நாள். சேமிப்பு அதிகரிக்க வேண்டும். உயர் அதிகாரிகள் அனுகூலம் காட்டுவார்கள். கடல்வழி பயணங்கள் வெற்றியை தரும். குணமாற்றங்கள் ஏற்படும். தாம்பத்ய சுகம் அதிகரிக்கும்.
Predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!