இந்த ராசிக்காரருக்கு எதிர்பாராத பணவரவு இருக்கிறது ! உங்கள் ராசியை சரிபாருங்கள் !

இந்த ராசிக்காரருக்கு எதிர்பாராத பணவரவு இருக்கிறது ! உங்கள் ராசியை சரிபாருங்கள் !

இன்று செவ்வாய்க்கிழமை சப்தமி திதி அவிட்ட நட்சத்திரம் கார்த்திகை மாதம் 17ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

வீண் செலவுகள் ஏற்படலாம். திறமைகள் தன்னம்பிக்கை வெளியாகும் நாள். சக பணியாளர்கள் ஆதரவு தருவார்கள். பழைய நினைவுகளால் சந்தோஷமும் துக்கமும் வந்து போகும்.

ரிஷபம்

வழக்கு வெற்றியில் முடியும்.தாய்வழி உறவினர்கள் உதவி கிடைக்கும்.கணவன் மனைவி அன்யோன்யம் அதிகமாகும். வியாபாரம் லாபகமரமாக இருக்கும்.

மிதுனம்

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்ப்புகள் விலகும்.வாழ்க்கை துணை அன்பை தருவார்கள். பணிச்சுமை கூடுதலாக இருப்பதால் அழுத்தங்கள் இருக்கும்.

கடகம்

புதிய ஆடை ஆபரணம் வாங்க நேரலாம். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். உயர் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சுப செய்தி வரலாம்.

சிம்மம்

பயணங்கள் வெற்றியை தரும். குடும்பத்தினர் மனதில் உள்ள குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யுங்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். செலவு அதிகரிக்கலாம்.

கன்னி

மனதில் அமைதி இல்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருப்பீர்கள். வீண் பழி ஏற்படும். பணவரவுகள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காது. பணியில் இடையூறுகள் விலகும்.

துலாம்

தடங்கல்கள் விலகும். சிறப்பான நாளாக இது அமையும். சொத்து சிக்கல்களை சுமுகமாக தீர்க்க வழி உண்டாகும். தெய்வ அனுகூலம் இருக்கும். புதிய ஆடை வாங்குவீர்கள்.

விருச்சிகம்

முயற்சிகள் வெற்றியாகும். சேமிக்க மனம் விரும்பும். தேவைக்கேற்ற பணம் இருந்தாலும் திடீர் செலவுகள் ஏற்படலாம். தாய் உடல்நலம் பாதிக்கும்.கவனம்.

தனுசு                        

குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம். வாகனப்பயணங்கள் நிதானத்துடன் இருக்க வேண்டும். வழக்குகள் வெற்றி தரும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்                                

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உறவினர் வருகையால் கலகம் ஏற்படலாம். அனால் சரியாகி விடும். பங்குதாரரை மாற்றுவதால் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்துடன் அனுசரித்து செல்லவும்.

கும்பம்                                                 

தொழிலை விஸ்தரிக்க விரும்புபவர்கள் அதனை செய்யலாம். தேவையற்ற வாதங்களை தவிர்க்க வேண்டும். நண்பர்கள் உதவி கிடைக்கும். பணவரவு எதிர்பாராமல் வந்து சேரலாம்.

மீனம்                                                                    

பயணங்களை தவிர்க்க வேண்டும். உறவினர்கள் மனஸ்தாபம் ஏற்படலாம். நண்பர்கள் ஆதாயம் உண்டு. உங்கள் பணியில் கூடுதல் கவனம் வேண்டும். விற்பனை மிதமாகவே இருக்கும்.

predicted by astro asha shah

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!