2020ல் கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகும் 6 ராசிகள் இவைதான் ! உங்கள் ராசி இருக்கிறதா !

2020ல் கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகும் 6 ராசிகள் இவைதான் ! உங்கள் ராசி இருக்கிறதா !

மஹாலக்ஷ்மி அனுக்ரகம் இல்லாதவர்கள் மனம் வருந்துவது என்பது இயல்பான ஒன்றுதான். எல்லா லட்சுமிகளும் உடன் இருப்பவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது. அதே சமயம் மஹாலக்ஷ்மி யோகம் கிடைக்காதவர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் போகும் வழி தெரியாது.

பிறக்கும்போது ஏழையாக இருக்கலாம். ஆனால் போகும்போது கோடீஸ்வரனாக போக வேண்டும் என்பதுதான் எல்லோருடைய முயற்சியாகவும் இருக்கிறது. எல்லோருக்கும் அப்படியான கோடீஸ்வர யோகம் கிடைக்காது. ஆனால் இந்த வருடம் ஆறு ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் காத்திருக்கிறது.

அவர்கள் எந்த ராசிக்காரர்கள் (lucky zodiac) என்பதை பாருங்கள். நிச்சயம் நீங்களோ உங்கள் குடும்பத்தில் ஒருவரோ இருக்கலாம். ஆகவே 2020ஐ மகிழ்வோடு வரவேற்க தயார் ஆகுங்கள்.

மேஷம்

2020 ஆம் ஆண்டு ராசிகளில் முதல்வனான மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகத்தை கொடுக்கப்போகிறது. குரு பகவான் பாக்கிய ஸ்தானத்து கேதுவுடன் இணைகிறார். வராத பாக்கியங்கள் வரும். எதிர்பாராத யோகங்கள் நடக்க ஆரம்பிக்கும். கடனாளியாக இருந்த உங்கள் கடன்களை தீர்க்கும் அளவிற்கு வருமானங்கள் வந்து சேரும். சுகமான வாழ்க்கை லாபகரமான தொழில் ஆகியவை சனிபகவான் பார்வையால் நல்ல விதமாக நடக்கும். சனி பகவான் பத்தாம் வீட்டில் அமர்வதால் சசமஹாயோகம் நடக்கப்போகிறது. உங்கள் பிறந்த ஜாதகமும் தசாபுத்தியும் சமமாக இருந்தால் கோடி கோடியாக பணம் வந்து சேரும்.

ரிஷபம்

சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து போகும் அளவிற்கு நன்மைகள் நடக்க போகிறது. எப்போதும் உங்களுக்கு குரு நன்மை செய்ய மாட்டார். அவர் இப்போது எட்டாம் வீட்டில் மறைவது உங்களுக்கு பல யோகங்களை தர போகிறது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் எனும் சொல்லிற்கு ஏற்ப உங்களுக்கு நன்மைகள் யோகங்கள் பெருக போகிறது. சனி பகவானும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வதால் கோடிகளில் புரள போகிறீர்கள். பிறந்த ஜாதகமும் தசாபுத்தியும் சரியாக இருந்தால் அரசியலிலும் ஒரு கை பார்ப்பீர்கள்.

மிதுனம்

இதுநாள் வரை கண்டத்தில் இருந்து தொல்லை தந்த சனிபகவான் அஷ்டமத்தில் அமர போகிறார் என்று பயப்படவே வேண்டாம். எட்டாம் வீட்டுக்கு அதிபதியான சனிபகவான் எட்டில் ஆட்சி பெறுவது விபரீத ராஜயோகம் ஆகும். அதனால் பணவரவுகள் பெருகும். இதுநாள் வரை அமைதியாக இருந்த ராகு மீது குருவின் பார்வை விழுகிறது. ஆகவே ராகுவும் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார். பணவரவு அற்புதமாக இருக்கும். சேமித்து வைக்கவும். பிறந்த ஜாதகம் தசாபுத்தி இரண்டும் யோகங்கள் நிறைந்திருந்தால் பணவரவு அதிகரிக்கும்.

 

Youtube

சிம்மம்

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த 2020ம் வருடம் அற்புதமான பலன்களைத் தேடித் தரப்போகிறது. ஆறாம் வீட்டில் சனி பகவான் அமர்ந்து தீராத யோகங்களை தரப்போகிறார். விபரீத ராஜயோகம், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் இரண்டுமே உங்கள் ராசிக்கு நடக்க இருக்கிறது. நோய்கள் நீக்கும். கடன்களை தீர்க்கும். அசையா சொத்துக்கள் வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமைவதால் லாபங்கள் அதிகரிக்கும். சுகங்கள் செல்வம் செல்வாக்கு எல்லாம் நிலையாக நிற்கும். பிறந்த ஜாதக பலன்கள் இதற்கு பொருத்தமாக இருந்தால் 2020 உங்களுக்கு தான்.

விருச்சிகம்

கால புருஷனுக்கு எட்டாவது ராசியான விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2020 மிக அதிர்ஷ்டகரமான வருடமாக இருக்கப்போகிறது. எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் இனி நிம்மதி அடைய போகிறீர்கள். வராத பணம் தேடி வரும். குருபகவான் கேது உடன் அமைத்த கூட்டணி காரணமாக கொடுத்த கடன்கள் வசூல் ஆகும். சனி பகவான் மூன்றாவது வீட்டில் மறைவதால் மனநிம்மதி ஏற்படும். நஷ்டங்களை ஏற்படுத்திய சனி பகவான் நன்மைகளை தருவார். உடல்நலம் மேம்படும். பணக்கார யோகம் வந்து விட்டது. உங்கள் தசாபுத்தி உடன் துணை புரிந்தால் 2020 கோடீஸ்வரர் நீங்கள்தான்.

கும்பம்

சனிபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் அமர்கிறார் என்று கவலை கொள்ள வேண்டாம். அவர் அங்கே அமர்வதால்தான் உங்களுக்கு விபரீத ராஜ யோகம் கிடைக்க இருக்கிறது. முதல் இரண்டரை வருடங்களில் பணத்தை நீங்கள் சேமிக்காமல் சொத்தாக மாற்றி கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
காரணம் சம்பாதித்த பணத்தை நீங்கள் செலவு செய்தாக வேண்டிய காலம் இது. செலவுகளை விட வரவுகள் அதிகமிருக்கும். லாபகுரு உங்கள் தொழிலில் லாபங்கள் கொழிக்க செய்வார். சனிதசை உங்கள் தசாபுத்தியாகி இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நீங்கள் கோடீஸ்வரர் தான்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!