சொத்துக்களை ஏமாற்றிய கணவர்.. அன்பற்ற வாழ்க்கை.. நடிகை ஸ்ரீவித்யாவின் சோக முடிவு...

சொத்துக்களை ஏமாற்றிய கணவர்.. அன்பற்ற வாழ்க்கை.. நடிகை ஸ்ரீவித்யாவின் சோக முடிவு...

நடிகை ஸ்ரீவித்யாவை மறக்க முடியுமா.. கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இருந்து டிஜிட்டல் திரைப்படங்கள் வரை அவரின் நடிப்பு பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. பக்குவப்பட்ட அவரது நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய் இருந்தது.

கர்நாடக சங்கீத பாடகியான எம் எல் வசந்தகுமாரியின் மகள் தான் ஸ்ரீவித்யா (srividhya). கர்நாடக சங்கீதம் , நாட்டியம் என இரண்டு கலைகளையும் கற்றவர் ஸ்ரீவித்யா. ஆனால் 23 வயதிலேயே அம்மாவாகவும் நடித்து இருக்கிறார். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகை ஜெயசுதாவிற்கு அம்மாவாக நடித்தவர் ஸ்ரீவித்யா.

 

Youtube

ஸ்ரீவித்யா சிறு வயதாக இருந்தபோது அப்பா அம்மாவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனநிம்மதி இன்றி இருந்த ஸ்ரீ வித்யா விற்கு தாத்தா அய்யாசாமி அய்யர்தான் ஆறுதல். தாத்தா சங்கீதம் சொல்லி கொடுக்க 10 வயதிலேயே கச்சேரி செய்யும் அளவிற்கு கர்னாடக சங்கீதத்தை கரைத்துக் குடித்தவர் ஸ்ரீவித்யா.

ஆனால் ஸ்ரீவித்யாவுக்கு சங்கீதத்தை விடவும் நாட்டியத்தில்தான் ஈடுபாடு அதிகம் இருந்தது. அதன் பின்னர் ரகசிய போலீஸ் 115 திரைப்படத்தில் எம்ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மேக்கப் டெஸ்டின் போது இவரைப் பார்த்த எம்ஜிஆர் ஸ்ரீவித்யாவை பார்த்து மிகவும் சிறுபெண்ணாக இருப்பதால் இன்னும் சில வருடங்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம்.

Youtube

ஏமாற்றத்துடன் திரும்பிய ஸ்ரீவித்யா விடாமுயற்சியால் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பின்னனர் கே பாலச்சந்தர் கையில் கிடைத்தார். அதன் பின்னர் அவரை அழகான திறமையான நடிகையாக வளர்த்து விட்டார் இயக்குனர்கே பாலச்சந்தர்.

70களின் இரண்டாம் பாகத்தில் அத்தனை பெரிய ஹீரோக்களுடனும் இணைந்து தன்னுடைய திறமையை காட்டியவர் ஸ்ரீவித்யா. தன்னுடைய சினிமா வாழ்க்கை அற்புதமாக இருக்கும்போதே திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தார் ஸ்ரீவித்யா. எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் அந்த இயல்பான ஏக்கமாக குடும்ப பெண்ணாக வாழ விரும்பியே அந்த முடிவெடுத்தார் ஸ்ரீவித்யா.

Youtube

ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். திருமணமான அடுத்த ஒன்பது ஆண்டுகளில் அவர் ஒரு ஆண்டு கூட நிம்மதியாக இல்லை. ஸ்ரீவித்யா இவரைத் திருமணம் செய்து கொள்வதாக சொன்னதுமே ஸ்ரீவித்யாவின் அம்மா மற்றும் நண்பர்கள் இருவருமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதனாலேயே தன்னுடைய சொந்த தேர்வு தவறானதுமே அதைப்பற்றி யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார்.

ஸ்ரீவித்யா சிரமப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் அனைத்தையும் தன்னுடைய உல்லாசத்திற்காக ஜார்ஜ் பயன்படுத்திக் கொண்டார். நிறைய கடன்களையும் உருவாக்கி அதற்கு ஸ்ரீவித்யாவை பொறுப்பாக்கினார். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஸ்ரீவித்யாவிற்கு ஜார்ஜ் இன்னொரு பெண்ணுடன் தவறான உறவில் இருப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விவாகரத்து பெற்றார்.

Youtube

தன்னுடைய வீட்டையும் கணவர் அபகரித்துக் கொள்ள அதனை கோர்ட்டில் பல வருடம் போராடித்தான் திரும்ப பெற்றார்.சென்னை மீது கசப்பாக திருவனந்தபுரம் சென்றவர் பின்னர் அங்கேயே தங்கிவிட்டார். ஸ்ரீவித்யாவின் இந்த தவறான கணவர் தேர்விற்கு அவரது இளம்பிராயம் காரணமாக இருந்தது. அப்பாவின் அன்பென்பதை அவர் அறிந்ததே இல்லை. அம்மாவின் மடியில் படுத்த சுகம் அறிய 34 வயது ஆனது. என்று ஸ்ரீவித்யா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அதனை வைத்து பார்க்கும்போது அவர் அன்புக்காக ஏங்கியவர் என்கிற பின்னணி நமக்கு புரிய வருகிறது. 70களில் நடிகர் கமல்ஹாசனும் ஐவரும் காதலிப்பதாகவே கூறப்பட்ட போது அந்த அன்பும் சில காலங்களில் நட்பாகவே முடிந்ததால் திரையுலகில் ஒரு ஆணின் பாதுகாப்பை நாடி அவசரமாக ஜார்ஜை திருமணம் முடித்திருக்கிறார் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

Youtube

அதன் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அம்மா அக்கா வேடங்களில் நடித்து வந்தவர் புற்றுநோய்க்கு ஆளாகி யாரையும் சந்திக்க விரும்பாமல் கேரளாவில் தங்கிவிட்டார். இறுதிக்காலங்கள் சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தார். கீமோதெரபி சமயங்களில் தன்னை மிகவும் ஒடுக்கிக்கொண்டார்.

அப்போதும் அவரை சந்திக்க அவரது நண்பரான கமல்ஹாசனுக்கு மட்டுமே வாய்ப்பிருந்தது. அதன்பின் சில நாட்களில் ஸ்ரீவித்யா மரணம் அடைந்துவிட்டார். கேரளா அரசு ஸ்ரீவித்யாவை தன்னுடைய சொத்தாகவே பாவித்தது. தமிழகத்தில் பிறந்திருந்தாலும் கேரளாவின் மகளாக இறந்திருக்கிறார் என்று அப்போதைய முதல் அச்சுதானந்தன் கூறியிருக்கிறார். 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஒரு தமிழ் நடிகைக்கு கேரளா அரசு ஸ்ரீவித்யாவை சகல மரியாதையுடன் தகனம் செய்தது.

ஒரு நடிகையாக இருந்தாலும் வாழ்வில் சிறு வயதில் இருந்தே பல துன்பங்களை சுமந்தவர் ஸ்ரீவித்யா. அப்பா அம்மாவின் பிரிவால் அந்த அடிப்படை அன்பு கூட இல்லாமல் தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். ஆசையாக நம்பி செய்த திருமணமும் பொய்த்து போக ஸ்ரீவித்யா மிகவும் நொறுங்கித்தான் போனார். ஆனாலும் தன்னுடைய நடிப்பை தனக்கு புற்று நோய் என்று உறுதியாகும் வரை அவர் விடவே இல்லை. அதனாலேயே அவருக்கு அப்படி ஒரு மரியாதையான தகனம் நடந்தது.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!