காதலின் பெயரால் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்பதை சொல்லும் 7 அறிகுறிகள்..

காதலின் பெயரால்  நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்பதை சொல்லும் 7 அறிகுறிகள்..

இப்போதைய உறவுகளில் நம்பிக்கைத் தன்மை என்பது நிச்சயம் சந்தேகத்துக்கு உரியதுதான். முகமூடி அணிகின்ற உலகில் அதற்குரிய உண்மை முகங்களை கண்டறிவதற்கு நம்முடைய வாழ்க்கையைத்தான் பணயம் வைக்க வேண்டி வருகிறது.

ஒரு தவறான காதலை தவறானது என்று நாம் முழுமையாக உணர்வதற்கே (சந்தேகத்துக்கு இடமின்றி) குறைந்த பட்சம் 2 வருடங்கள் ஆகின்றது. அதற்குள் நாம் அவர்களோடு மிக நெருங்கி இருப்போம். அவர்களின் ஆளுமைகளுக்கு ஆட்படுத்தப் பட்டிருப்போம். அதையெல்லாம் தாண்டி அவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை நாம் நிரூபணங்களோடு நிரூபிக்க முற்படுகையில் கிடைப்பதென்னவோ அவர்களின் வீண்பழியான சந்தேகப்பிராணி எனும் சொல் தான்.

ஒரு தவறான எண்ணங்களை கொண்ட காதலுக்காக நமது வாழ்வில் இத்தனை வருடங்களை இழக்கத்தான் வேண்டுமா? அப்படி அது தவறானது என்பதை நாம் கண்டுபிடிக்கும்போது அந்த நபர் இன்னொரு பெண்ணுடன் சமைத்து சாப்பிட்டு குடும்பம் நடத்திக் கொண்டிருப்பார். நமது இழப்பென்பது அவர்களுக்கு எந்த வலியையும் தராத அளவுக்கு அவர்கள் புத்திசாலியாக செயல்படுகிறார்கள்.

நாம் மட்டும் ஏன் இன்னமும் முட்டாளாக அன்பின் பெயரால் காதலின் பெயரால் வருமானத்தை இழந்து அறிவை இழந்து நமது திறமையை இழந்து அவர்களின் பயிற்றுவிக்கப்பட்ட பிராணியாக முடங்கி கிடக்க வேண்டும்? உங்கள் காதல் (love) ஏமாற்றத்தில் முடியப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் இதோ. இதில் ஒன்று இருந்தாலும் உஷார் ஆகுங்கள்.

Youtube

கடந்த உறவுகள் பற்றிய உண்மைகள்

உங்கள் காதலர் உங்களிடம் தன்னுடைய கடந்த கால உறவுகளை (relationship) பற்றி பேச மாட்டார். காரணம் கேட்டால் உங்கள் மீதான காதலை அதிகரிக்க வேண்டுமே தவிர பழைய காதலை நினைக்க வேண்டாம் பேச வேண்டாம் என்கிற வேதாந்தங்கள் வரும். உண்மையில் அந்தக் காதலில் அவரது உண்மைத்தன்மை கேள்விக்குறி ஆனதால்தான் அது விலகி இருக்கலாம். உங்களிடமும் அதே பொய்கள் மேலும் செதுக்கப்பட்டு அழகியல் பொய்களாகவே தொடரும். கவிதையைப் போல நீங்களும் அதனை ரசித்துக் கொண்டிருக்காதீர்கள்.

Pinterest

தீர்க்கதரிசிகளாக தெரிவார்கள்

ஒரு விஷயம் நடக்கும் முன்பே அதைப் பற்றி சொல்வது இவர்கள் வழக்கம். ஒரு ஆண் உங்களிடம் பேசினால் பொறாமை (possesiveness) கொள்வார்கள். காரணம் மற்ற பெண்களுடன் இவர் பழகும்போது மற்ற பெண்களை எந்த கண் கொண்டு இவர் பார்ப்பாரோ அப்படிதான் ஒவ்வொரு ஆணும் உங்களை பார்ப்பதாக சொல்வார். ஒரு பெண்ணைக் கையாளும் வித்தையை நன்கு கற்ற அவர்கள் அதையே அந்த ஆண்களும் செய்யப்போவதாக சொல்லி உங்களை பயமுறுத்துவார்கள்.

Youtube

வெளியே அழைத்து செல்ல மறுப்பார்கள்

உங்களை ஒரு ஊறுகாய் போல பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஆண்கள் உங்களை வெளியே விருந்துகளுக்கு அழைத்து செல்ல மறுப்பார்கள். ஆரம்ப கால காதல் வளர்ந்த இடமே சினிமா தியேட்டராக இருக்கலாம். ஆனால் இப்போது அதே தியேட்டருக்கு உங்களை அழைத்து செல்ல ஆயிரம் காரணங்களை வைத்திருப்பார்கள். உண்மையாக உங்களை நேசிக்கும் ஆண்கள் உங்களை விட்டு விலகி இருக்க விரும்ப மாட்டார்கள்.

Pinterest

அர்ப்பணிப்பு இருக்காது

அவர் உங்களுடன் இருக்கும்போது நீங்கள் அந்நியமாக உணர்கிறீர்கள் என்றால் அவரிடம் காதலுக்கான அர்ப்பணிப்பு இல்லை என்பதுதான் பொருள். விட்டேத்தியான விதமாகவே அவர்களது காதல் இருக்கலாம். அவர்களுக்கு தோன்றும் போது மட்டுமே உங்கள் சந்திப்புகள் நிகழும். இப்படி செல்கிறது என்றாலே நீங்கள் உங்கள் காதலின் பெயரால் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

 

Youtube

ப்ரைவஸி பிரச்னைகள்

உங்களை ஏமாற்ற முடிவு செய்த ஆணுக்கு அவனுடைய பிரைவசி எப்போதும் முக்கியமானது. அவருடைய மொபைல் எப்போதும் அவருடனே இருக்கும். அவரது அன்றாடங்களை முழுமையாக பகிர்ந்து கொள்ள மாட்டார். அவர் உங்களுடன் இல்லாத நேரங்களில் அவர் எங்கிருக்கிறார் என்கிற தகவல்களை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. உங்கள் அருகில் இருக்கும்போதே கோட் முறையில் புதிய காதலியுடன் சன்னமான குரலில் அவர் பேசிக்கொண்டிருப்பார்.

அதில் அந்தக் காதலி அவருக்கு என்ன சமைப்பது என்பது பற்றி கேட்டுக் கொண்டிருக்க கூடும். நீங்கள் அருகில் வரும்போது எதையாவது செய்து வை என்று போனைக் கட் செய்வார். நீங்கள் கேட்டால் அவரது உயரதிகாரியுடன் பேசியதாக சொல்வார். எந்த உயர் அதிகாரி சமைப்பது பற்றி கேட்பார் என்று அறிவுபூர்வமாக நீங்கள் கேள்வி எழுப்பினால் உங்கள் உறவு அன்றோடு முடிந்தது.

Youtube

தன்னலம்

காதலின் பெயரால் ஏமாற்ற நினைப்பவர்களுக்கு தன்னலத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. அவருடைய ஆசைகள் அவருடைய தேவைகள் அவருடைய உணர்ச்சிகள் இதுதான் முக்கியமே தவிர வேறெதுவும் இருக்காது. எந்த பொறுப்பையும் எடுத்துக் கொள்ள விரும்பாத அவர்களிடம் நீங்கள் ஏமாற்றத்தை தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

Youtube

பொய்களே உரமாக

பொய்கள்தான் இந்த வகையான ஏமாற்றும் காதலுக்கு ஆதாரம். அவர் பேசுவது பொய்கள் என்பது உங்களுக்கு தெரிந்து விட்டால் அவர்கள் எப்படியும் ஒப்புக்கொள்ள மறுப்பார்கள். கடுமையாக கத்துவார்கள். குற்ற உணர்ச்சியால் கையில் இருப்பதை உடைப்பார்கள். உங்களிடம் உண்மையாக இல்லாத போது உங்களை வாயடைக்க செய்ய அதிரடியாக ஏதாவது செய்வார்கள். இதுதான் இறுதி அறிகுறி.

இதற்கு மேலும் உங்கள் காதலை நீங்கள் நம்பிக் கொண்டிருந்தால் அல்லது சமாதானம் பேசிக் கொண்டிருந்தால் உங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு வாழ்க்கையின் சில காலங்களை இருள வைக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!