இன்று உலக நீரழிவு நோய் தினம் : உலக அளவில் நோய் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இந்தியா!

இன்று உலக நீரழிவு நோய் தினம் : உலக அளவில் நோய் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இந்தியா!

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே அதிகம் பேசப்படும் ஒரு நோயாக நீரிழிவு நோய் உள்ளது. 

இந்நிலையில் நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கான இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்  பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

இது குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச நீரிழிவு நோய் அமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. உலக அளவில் நீரிழிவு நோய் (diabetes) பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 

twitter

இந்திய அளவில் தமிழகம், நீரிழிவு நோய் பாதிப்புகளில் முதலிடத்தில் உள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த நோயால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

முந்தைய காலத்தில் 50 வயதை கடந்த பெரும்பாலானோர் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் தற்போது அதன் நிலை மாற்றமடைந்துவிட்டது. அதாவது 50 வயது என்ற அளவுகோள் 40, 30 என்று குறைந்து கொண்டே வருகிறது. 

இன்றைய தலைமுறையில் வயது வித்தியாசம் என தயவு தாட்சண்யம் பார்க்காமல் அனைத்து தரப்பினரும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பெற்றோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் 80% பிள்ளைகளுக்கும் இந்த நோய் வரும் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

pixabay

முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், இந்த நீரிழிவு (diabetes) வியாதியை கட்டுப்பாட்டில் சம்பந்தப்பட்டவர் வைத்திருக்க முடியும். நமது உடலில் மாவுப்பொருட்கள், கொழுப்பு, புரதம் ஆகியவை இருக்கின்றன. மாவு பொருளைப் பொறுத்தவரையில் உடலில் ஜீரணமான பின்னரே ரத்தத்தில் சேரும். 

நமது உடல் அதை பயன்படுத்த வேண்டும். இந்த செயல் நடக்க உடலில் இன்சுலின் சுரக்க வேண்டும். இன்சுலின் இருந்தும் அது உபயோகிக்கப்படவில்லை என்றாலோ, நம் உடலில் இன்சுலின் குறைவாக இருந்தாலோ ரத்தத்தில் சர்க்கரையாக தேங்கி இந்த நோய் ஏற்படும். 

அதாவது இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. பொதுவாக நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டால் சுமார் 5 வருடங்களுக்கு பின்னரே அதன் பாதிப்பு  முழுமையாக தெரிய வரும்.

அறிகுறிகள்

 • அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகமாக தண்ணீர் தாகம், காரணமில்லாமல் எடை குறைதல், பாதங்கள் மரத்து போதல், மங்கலான பார்வை போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகள்.  
 • ஆரம்பத்திலேயே கவனிக்கவில்லை என்றால் முக்கியமான உடல் உறுப்புகளும் அதன் செயல்பாடுகளும் நீரிழிவு நோயால்  பாதித்துவிடும். 
 • குறிப்பாக இதய நோய், சிறுநீரக கோளாறு, பக்கவாதம், பார்வை பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்கள் இன்சுலின் ஊசி, மாத்திரைகளை சரியாக எடுத்து கொள்ள வேண்டும். 
pixabay

நீரழிவு நோய் - தடுப்பது எப்படி

 • நீரிழிவு நோய் (diabetes) பாதிப்பிலிருந்து விடுபட இயற்கை உணவு, தினமும் நடைபயிற்சி ஆகியவை மிகவும் முக்கியம். 
 • நோயாளிகள் மாவு பொருள் உணவுகளை தவிர்த்து கீரைகள், காய்கறிகளை அதிகளவு எடுத்து கொள்ள வேண்டும். 
 • நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை  கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்
 • தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும்.
 • ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும்.
 • அதிக நார்சத்து உடைய உணவு வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். நார்சத்துமிக்க காய்கறிகள் உடல் செரிமானத்தை அதிகரிக்கும், ரத்தத்தில் சர்க்கரை கலப்பதை தடுக்கும்.
pixabay

 • பிரட், பாஸ்தா உணவு வகைகளில் அதிகளவில் மாவுசத்து உள்ளது. நீரிழிவு நோயை தடுப்பதற்கு இந்தவகை மாவுசத்து உணவு வகைகளை தவிர்த்து விடுவது நல்லது. 
 • புரத சத்துக்கான மீன், முட்டை,பயறு வகை உணவினை எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் மீன் வறுத்து உண்பதை தவிர்க்க வேண்டும்.
 • நீர்சத்து உடலில் எப்போதும் இருப்பதுபோல பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • தயிர் வகைகளில் சர்க்கரை நிறைந்துள்ளது. இதனால் தயிரை தவிர்த்து அதற்கு பதிலாக யோகர்ட் சேர்த்து கொள்ளலாம்.  
 • நீரழிவு நோய் வராமல் தடுக்க உடற்பயிற்சி மிகவும் நல்லது. இது உடல் எடையை கட்டுக்குள் வைப்பதுடன் ரத்தத்தில் சக்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
 • உங்கள் மன அழுத்தம் உங்களுக்கு சர்க்கரை நோயையும் கொண்டு வந்து விடும். எனவே முதலில் உங்களை அமைதியாக்குங்கள். யோகா, தியானம் போன்றவற்றை செய்து மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் கார்டிசோல் மன அழுத்த ஹார்மோனும் குறைந்து நீரிழிவு இல்லாமல் நீண்ட காலம் நாம் வாழலாம். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                       

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!