உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்க – பெண்களுக்கான சிறப்பு குறிப்புகள்

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்க – பெண்களுக்கான சிறப்பு குறிப்புகள்

ஏன் பெண்கள் தங்கள் உடல் நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்?

அனைவரும் சற்று சிந்தித்து பார்த்தால், ஒரு வீட்டில், இருக்கும் பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டால், அந்த குடும்பமே, சில நாட்களுக்கு அதிக இன்னல்களை சந்திக்க நேர்ந்திடும். வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து சற்று மாறி, அனைவரும் அவதிப்படுவார்கள். இது ஒன்றே சான்று, பெண்களின் உடல் நலம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர.

இருப்பினும், அனைத்துப் பெண்களும் தங்கள் உடல் நலத்தின் மீது அக்கறை காட்டுகின்றனரா என்று பார்த்தால், இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு பெண்ணும்(women), குழந்தைகள், கணவன் மற்றும் வீட்டில் இருக்கும் முதியவர்களை கவனிப்பதிலேயே தங்கள் வாழ்நாளை களித்துவிடாமல், தங்கள் உடல் நலத்தின் மீதும் போதிய அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக, இளம் வயதிலேயே உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால், விரைவாக வயதாகும் காலம் தொடங்கியவுடனே பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.

உங்கள் உடல் மற்றும் மனதை எப்படி ஆரோக்கியமாக (health) வைத்துக் கொள்வது என்பதை பற்றி பார்க்க, இங்கே சில குறிப்புகள், உங்களுக்காக:

1. இருதயத்திற்கு ஆரோக்கியம் தரும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்

பெண்கள் எப்போதும், தங்கள் இருதய நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இருதயம் ஆரோக்கியமாக இருந்தால், உடலுக்குத் தேவையான இரத்த ஓட்டம் கிடைத்து, நல்ல உடல் நலத்தோடு இருக்கலாம். இதற்கு நீங்கள் அதிக காய் மற்றும் பல வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முளைகட்டிய பயிர் வகைகள், கைகுத்தல் அரிசி, சாமை அரிசி, குதிரைவாலி அரிசி, மீன், போன்ற ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும், சிவப்பு இறைச்சி, வெள்ளை சர்க்கரை, பாக்ட் பால், கொழுப்பு நிறைந்த உணவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

2. யோகா / உடற் பயிற்சி

Pexels

தினமும் அரை மணி நேரமாவது யோகா அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு, நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும். மேலும் நோய் தாக்குதல் இல்லாமல், உங்கள் உடலை பலமாக வைத்துக் கொள்ள உதவும்.

3. மூச்சு பயிற்சி

இதற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மூச்சு பயிற்சி செய்யும் போது, உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் பெறுகின்றது. சுவாச அமைப்பு நல்ல சுத்தமான பிரனவாயுவைப் பெறுகின்றது. இதனால் உங்கள் ஆரோக்கியம் அதிகரிகின்றது. மேலும் மனமும் ஒருநிலைப் பெறுகின்றது.

4. த்யானம்

Pexels

த்யானம் செய்வதால், உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்ம ஒரு நிலைப் பெறுகின்றது. மேலும் தொடர்ந்து த்யானம் செய்து வரும் போது, கவனம் அதிகரித்து, நினைவாற்றலும் அதிகரிகின்றது. மனம் தெளிவு பெறுகின்றது. உங்களது சிந்திக்கும் திறனும் அதிகரிகின்றது. எந்த ஒரு விடயமானாலும், உங்களால் தெளிவோடு ஒரு நல்ல தீர்வைப் பெரும் திறனும் அதிகரிகின்றது.

5. சீரான உடல் எடை

பல பெண்கள் திருமணதிற்கு பின், அதிலும் குறிப்பாக ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பிறந்த பின் தங்கள் உடல் எடை மீது கவனம் செலுத்துவதே இல்லை. இதனால், உடல் எடை அதிகரித்து, பல பிரச்சனைகளை உண்டாக்கி விடுகின்றது. குறிப்பாக நீரழிவு நோய், இருதய நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உங்கள் உயிருக்கும், ஆரோக்கியத்திற்கும் சவால் விடுகின்றது. அதனால், நீங்கள் உங்கள் உடல் எடையை சீரான அளவு வைத்திருக்க முயற்சிகளை எடுக்க வேண்டும்.

6. மகிழ்ச்சியாக இருங்கள்

Pexels

இது சற்று கடினம் தான் என்றாலும், உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க இதுவும் ஒரு முக்கியமான பயிற்சி என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எப்போதும், எந்த சூழலிலும், எதையும் எளிதில் சமாளித்து விடலாம் என்கின்ற உங்களது தன்னம்பிக்கை உங்களை மகிழ்ச்சியோடு இருக்க உதவும். அதனால் எந்த சூழலிலும் உங்கள் மனதை தளர விடாமல், துணிவோடும், நிதாநத்தோடும் மற்றும் தெளிவோடும் சிந்தித்து செயல்பட்டாலே, பல பிரச்சனைகளை நீங்கள் இல்லாமல் செய்து விடலாம். மேலும் என்றும் மகிழ்ச்சியோடும் இருக்கலாம். இது உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பல மடங்கு அதிகரிக்க உதவும்.

7. உங்களுக்கென்று நேரத்தை ஒதுக்குங்கள்

எப்போதும் உங்கள் குடும்ப உருபினர்களுக்காகவே ஓடிக் கொண்டிருக்காமல், உங்களுக்கும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு ஒரு சுதந்திர உணர்வு ஏற்படுவதோடு, மனதில் இருக்கும் அழுத்தம், கவலை போன்றவையும் அகலும். இது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். 

 

மேலும் படிக்க - உங்கள் வாழ்க்கையில் ஊக்கத்தோடு இருப்பது எவ்வளவு முக்கியம்? இங்கே உங்களுக்காக சில வரிகள்!

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!