இன்று பல பெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம் காணும் ஒரு பெரிய பிரச்சனை, ஒன்று அதி வேகமாகவும், சுட்டித்தனத்தோடும், துருதுருவென்று இருப்பது, அல்லது, எப்போது மிக மெதுவாகவும், எந்த ஒரு செயலிலும் வேகமே இல்லாமல், ஏனோ பிறந்தோம், ஏனோ இருகின்றோம் என்பது போல எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது எனபதுவாகும். இந்த இரண்டு வகை செயல்பாட்டிற்கும் பல காரணங்கள் இருக்கலாம். எனினும், மிக வேகமாக இருக்கும் குழந்தையை விட, வேகம் குறைந்து, அதிக சோம்பலோடு காணப்படும் குழந்தையே பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவாலாகி விடுகின்றனர். இதனை அப்படியே விட்டு விடவும் முடியாது.
குழந்தை பருவத்தில், தக்க சமயத்திலும், சரியான வயதிலும் ஒரு விடயத்தை மாற்றவில்லையென்றால், அது அவர்களது எதிர் காலத்தையே பாதித்து விடக் கூடும். அதனால், இத்தகைய குழந்தையின் செயல்திறன் குறித்த மாற்றங்களை உண்டாக்க (child care), விரைவாக பெற்றோர்கள் செயல்பட வேண்டும் (parenting tips).
உங்கள் குழந்தை மிக மெதுவாக, எதிலும் வேகம் இல்லாமல் இருக்கின்றான் என்றால், இங்கே உங்களுக்காக சில பயனுள்ள குறிப்புகள். இதனை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் ஒரு நல்ல முன்னேற்றத்தை நீங்கள் உணரலாம்;
1. நேர அட்டவணை
Pixabay
உங்கள் குழந்தைக்கு ஒரு தினசரி செய்ய வேண்டிய வேலைகளுக்கு, ஒரு அட்டவனையை போடுங்கள். அதன் படி அவன் தினமும், குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுக்கும் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று கூறுங்கள். அப்படி செய்து முடித்தாள், அவனை ஊக்கவிக்கும் வகையிலும், பாராட்டும் வகையிலும் அவனுக்கு பிடித்ததை நீங்கள் செய்து தருவதாக நம்பிக்கை கொடுங்கள். இது அவன் ஓரளவிற்காவது, விரைவாக வேலையை முடிக்க ஊக்கத்தை தரும்.
2. பிடித்ததை ஊக்கவிப்பது
உங்கள் குழந்தைக்கு என்ன பிடிக்கின்றதோ அதனை ஊக்கவியுங்கள். எந்த காரணம் கொண்டும் இது வேண்டாம், அது வேண்டாம் என்று அவனை கட்டுப்படுத்தாதீர்கள். அது அவனை பின் தள்ளுவது போலாகிவிடும். மேலும் அவனுக்கு எந்த ஒரு புது விடயத்தையும் சிந்தித்து தானாக செய்ய வேண்டும் என்றும் தோணாமல் போகலாம்.
3. எப்போதும் ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்திக் கொண்டே இருங்கள்
Pixabay
ஓய்வு என்று அதிகம் நாள் பொழுதில் கொடுக்காமல், ஏதாவது ஒரு விடயத்தில் அவனை ஈடுபடுத்திக் கொண்டே இருங்கள். முதலில் அவன் அதனை மெதுவாக செய்தாலும், அல்லது செய்ய ஆர்வம் காட்டாமல் போனாலும், நாளடைவில், வேறு வழி இல்லை என்றாவது, ஏதாவது ஒரு காரியத்தில் அவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தொடங்குவான். இதனால் அவன் சோம்பலும் குறையும்.
4. உற்சாகத்தையும், ஆர்வத்தையும் உண்டாக்குங்கள்
உங்கள் குழந்தையை ஏதாவது ஒரு செயலில் கற்றுக்கொள்ளவோ அல்லது அவனாக செய்யவோ ஈடுபடுத்துவதோடு, அவனுக்கு (ஊக்குவிக்க) ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அந்த விடயத்தில் உண்டாக்குங்கள். இப்படி செய்யும் போது அவன் சோர்வடையாமல், சுறுசுறுப்பாக இருக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும், மேலும் அவன் ஆர்வமும், ஈடுபாடும் அந்த விடயத்தில் அதிகமாகும்.
5. பெற்றோர் மற்றும் குழந்தை, இருவரும் சேர்ந்து செயல்படுவது
Pixabay
நீங்கள் உங்கள் குழந்தை சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும். இப்படி இருவரும் சேர்ந்து ஒரு செயலை செய்யும் போது, உங்கள் குழந்தை கூக்கமடைவதோடு, நீங்கள் அவனை வேகமாக செய்யவும் உறசாகப்படுத்தலாம். இதனால் நாளடைவில் அவன் வேகம் அதிகரிக்கும்.
6. மூளைத் திறனை வளர்க்கும் விளையாட்டு
ஒரு குழந்தையின் மூளைத் திறனை வளர்க்கும் வகையில் பல பாரம்பரிய விளையாட்டுகள் நம் தமிழ்நாட்டில் உள்ளன. குறிப்பாக, பாண்டி ஆட்டம், பல்லாங்குழி, சதுரங்கம், தாயம் என்று மேலும் பல உள்ளன. இவை நிச்சயம் உங்கள் குழந்தையின் ஆர்வத்தை அதிகப்படுத்துவதோடு, மூளைத் திறனையும் அதிகரிக்கும். எனினும், எந்த காரணத்தை கொண்டும் கணினியிலும், கைபேசியிலும் கேம்ஸ் விளையாட விட்டு விடாதீர்கள். பின் நீங்கள் வருந்த வேண்டிய சூழல் வந்துவிடலாம்.
7. ஒரே வயதில் இருக்கும் பிற குழந்தைகளுடன் அதிகம் விளையாட்டில் ஈடுபடுத்துவது
Pixabay
இன்றைய அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை முறையில், பக்கத்து வீட்டுகாரர்கள் யார் என்றே யாருக்கும் தெரியாத சூழலில், உங்கள் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவது என்பது ஒரு கனவாகவே போய் விடும். ஆனால் எப்படியாவது உங்கள் குழந்தை வாரம் இரண்டு நாட்களாவது, தனது வயதுடைய மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாட நீங்கள் ஒரு சூழலை உருவாக்க வேண்டும். இது அவனை உற்சாகப்படுத்துவதோடு, அவன் மனதிற்கு புதுனற்சியைத் தந்து, நம்பிக்கையையும் தரும். இது அவன் வேகத்தையும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க – “ஹெலிகாப்டர் பெற்றோர்” – உலகின் மிக நீண்ட தொப்புள் கொடி பற்றி அறிந்ததுண்டா ?
மேலும் படிக்க – குழந்தைகளின் மனநலம் பற்றி பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!