நடிகர் விக்ரமிற்கு என்றே பல 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் உண்டு. இன்றளவும் தலைமுறைகள் தாண்டிய நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகர் விக்ரம்.
இப்போது தன்னுடைய மகனை நாயகனாக களமிறக்குகிறார். நாம் மிகவும் கொண்டாடிய தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டியின் தமிழக்கத்தில் நாயகனாக அறிமுகம் ஆகிறான் நடிகர் விக்ரமின் மகன் நடிகர் த்ருவ் (dhruv).
இதே திரைப்படம் சமீபத்தில் ஹிந்தியில் கபீர் சிங் (kabeer singh) என்கிற பெயரில் ரிமேக் செய்யப்பட்டது. அந்த திரைப்படமும் கோடிகளில் வசூலித்து நாயகனுக்கு பெயர் எடுத்து கொடுத்திருக்கிறது. ஆகவே அர்ஜுன் ரெட்டியின் தமிழாக்கமான ஆதித்ய வர்மாவிற்கும் (adithya varma) எதிர்பார்ப்புகள் கூடி இருக்கின்றன.
இந்த திரைப்படக்குழுவினர் தற்போது விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கூடி இருக்கின்றனர், ஆகவே அடிக்கடி த்ருவ் பற்றிய விஷயங்கள் வெளியாகியபடியே இருக்கின்றன. ஆதித்யவர்மாவில் த்ருவ் தரும் அந்த முத்தம் இப்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒரு பேட்டியின் போது தன்னுடைய அம்மா அப்பா விக்ரம் (vikram) நடிப்பதை நிறுத்தி விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாக குடும்ப ரகசியத்தை வெளியில் அம்பலப்படுத்தி இருக்கிறார் த்ருவ்.
சேது திரைப்படம் வருவதற்கு முன்பாக அப்பா சினிமா துறையில் முன்னேற மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயங்களில் அம்மா அப்பா நடிப்பதை நிறுத்தி விட வேண்டும் சினிமாவை கைவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தார்.
ஆனால் சேது திரைப்படம் வந்த பிறகு அப்பாவின் திறமையை பார்த்து அவருடன் இன்று வரைக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் நடிகர் த்ருவ்.
கிட்டத்தட்ட த்ருவ் இந்த திரைப்படத்தில் வெற்றி பெற வேண்டும் என நடிகர் விக்ரம் இணைஇயக்குனர் போல வேலை செய்திருக்கிறார். அப்பாவின் கடின உழைப்பை உணர்ந்த நடிகர் த்ருவ் தானும் நடிப்பிற்கான பிரத்யேக செயல்களை செய்து வெற்றி பெற வாழ்த்துகிறது POPxo.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!