சிறுநீர் பாதையில் எரிச்சலா? இதோ, இதன் காரணங்களும் உடனடி தீர்வுகளும் !!

 சிறுநீர் பாதையில் எரிச்சலா? இதோ, இதன் காரணங்களும் உடனடி தீர்வுகளும் !!

சிறுநீரக குழாய்களில் (urinary tract) ஏற்படும் தொற்று காரணமாக சிறுநீரகத்தில் எரிச்சல் ஏற்படும். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இந்த தொல்லை உண்டாகும். ஏன்னெனில் பெண்களுக்கு சிறுநீரக பையும், பெண் உறுப்பும் அருகாமையில் அமைந்துள்ளது. மேலும், சிறுநீரகம் சம்மந்தமாக நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அவர்களுக்கு ஏற்படும் தொல்லை எதனால் என்று அவர்களால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. பெரும்பாலானோர் அதை வெளியில்  சொல்ல சங்கடப்பட்டு தெரிவிக்காமல் விட்டுவிடுவதால் தீவிர பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்லாது, சிறுநீக்கத்தில் கல் இருந்தால், வலி ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாயின்போது வலி ஏற்படுவதால், அவர்களால் கல் இருப்பதால் பிரச்சனை என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. இதைப் பற்றிய தெளிவான அறிகுறிகளும், வீட்டுத் தீர்வுகளைப்  (home remedies) பற்றியும் பார்க்கலாம். 

சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட காரணங்கள்

சிறுநீரகம், மற்றும் அது சார்ந்த பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு(infections) என்ன காரணம் என்று பார்க்கலாம்.

1. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது

பெண்களுக்கு இயற்கையாகவே சிறுநீர்ப்பையின் அளவு பெரியதாக இருக்கும். அதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தேவை இல்லை. ஆனால்,  அதற்காக நீண்ட நேரம், வெளியில் சென்றால் ஒரு நாள் முழுவதும் சிறுநீர் கழிக்காமல் இருப்பது மிகவும் தவறு. அப்படி வெகு நேரம் சிறுநீர் பையில் சிறுநீர் தேங்கி இருப்பதால், நோய்த் தொற்றை உண்டாக்கும். ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டும்.

2. ஹார்மோன் அளவுகளில் மாற்றம்

சரியான வாழ்க்கை முறை இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவது, சரியான நேரத்திற்கு உறங்காமல் இருப்பது, ஒரே இடத்தில் வெகுநேரம் அமர்ந்து வேலை செய்வது, உடலுக்கு நல்ல பயிற்சி இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களினால் ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டும். அதன் விளைவாக சிறுநீரக பிரச்சனையும் வந்து சேரும். 

3. தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது

Pexels

ஒருவரது எடையைப் பொறுத்து தண்ணீர் பருக வேண்டும். 20 கிலோ எடை உள்ள ஒருவருக்கு ஒரு நாளிற்கு குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், அவர் அதிகம் உழைத்தாலோ, வெயிலில் வேலை செய்தாலோ இந்த அளவு கூட வேண்டும். உங்களை நீரோட்டமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான், சிறுநீரகம் உடலில் சேரும் மாசுவை தேங்க விடாமல் வெளியேற்றும்.

4. அளவுக்கு அதிகமாக தேநீர்/ காபி குடிப்பது, குளிர்பானங்கள் பருகுவது

இவைகள் திரவ உணவுதானே என்று இருந்துவிடாமல், இவை பருகுவதால் உடலில் மேலும் கெட்ட பொருட்கள் சேருகிறது. அதனால், கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும். பெரும்பாலானோர், தண்ணீர் தாகம் இருக்கும்போது தேநீர் அருந்தும் வழக்கத்தை கொண்டிருப்பார்கள். உடலே உங்களை தண்ணீர் பருக ஒரு அறிகுறி ஏற்படுத்தினால், அதற்கு எதிராக தேநீர் பருகி கட்டுப்படுத்தினால், அப்போதைக்கு உங்கள் நாக்கிற்கு நன்றாக இருக்கும். ஆனால், நாளடைவில் சிறுநீரகத் தொல்லையில்தான் முடியும். 

5. பயணத்திற்குப் பிறகு

பொது கழிப்பறையை பயன்படுத்துவதனால்தான் சிறுநீரகத்தில் தோற்று ஏற்பட்டிருக்கிறது என்று பொதுவாக கருதப்படுகிறது(காரணங்கள்). அதுமட்டுமல்ல, பயணத்தின்போது எட்டுமணி நேரம் முதல், பத்துமணி நேரம் வரைகூட சிறுநீர் கழிக்காமல் இருப்பதனால் நிச்சயம் சிறுநீரக தொல்லை ஏற்படும். 

6. மெனோபாஸ் ஆன பெண்களுக்கு

Pexels

மாதவிடாய் முடியும்போது, மேலும் மகப்பேறின் போதும், மெனோபாஸ் ஆன பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், எளிதில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள்.

சிறுநீரக தொற்று அறிகுறிகள்

உங்களுக்கு நோய்த் தொற்று அல்லது நீர்கடுப்பு இருந்தால், கீழ்காணும் அறிகுறிகள் ஏதாவது இருக்கும். 

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படும்
அடி வயிறில் வலி உண்டாகும்
பின் முதுகில் வலி ஏற்படும்
கிராம்ப்(cramp) இழுத்துப் பிடிப்பதுபோன்ற ஒரு உணர்வு
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உந்துதல்
குளிரும், ஜுரம் உண்டாகலாம்
தானாகவே சிறுநீர் கசிவு ஏற்படுதல்
தூங்கும்போது நீங்கள் உணராமலேயே சிறுநீர் கழித்து விடுதல்

சிறுநீரகத் தொற்று பிரச்சனை வந்துவிட்டால் முதலில், எந்த பாக்டீரியாவால் வருகிறது என்று பார்க்க வேண்டும். அதற்குத் தகுந்த ஆன்டி-பையோடிக் சாப்பிட வேண்டும்.மற்றவர்களுக்கு பரிந்துரைத்த மருந்தை நீங்களும் மருத்துவரை ஆலோசிக்காமலேயே வாங்கி சாப்பிடக் கூடாது.

மேலும் படிக்க -  அந்த' இடத்தில் இருக்கும் கருமையால் கவலையா ! இரண்டே வாரங்களில் அதனை போக்கும் சில எளிய தீர்வுகள் !

சிறுநீர் தொற்று நீங்க இயற்கை மருத்துவம்

Pexels

 1. வெது வெதுப்பான தண்ணீரில் உங்கள் உறுப்பை சுத்தம் செய்து கொள்வது. மேலும், கல் உப்பு கலந்து அந்த தண்ணீரைப் பயன்படுத்தியும் சுத்தம் செய்து கொள்ளலாம்.
 2. பார்லி அரிசியில் கஞ்சி செய்து அதில் சுக்குப்பொடி சேர்த்து ஆறவிட்டு, மோருடன் கலந்து பருகி வந்தால் நோய்த் தொற்று காணாமல் போய்விடும். 
 3. தட்டைப்பயிறு சுண்டல் செய்து சாப்பிடலாம்
 4. கொள்ளுப்பருப்பை பயன்படுத்தி துவையல், ரசம் செய்து சாப்பிடலாம்.
 5. சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பூசணிக்காய் ஆகிய நீர் காய்கள் சாப்பிட்டால் சிறுநீர் நன்றாக போகும்
 6. வெள்ளரி விதையை பாலில் சேர்த்து காய்ச்சிக் குடிக்கலாம்
 7. உருகிய நெய்யை உணவில் சேர்த்துக்கொண்டால் அதுவும்  மருந்தாக பயன்படும்
 8. கற்றாழையை சுத்தம் செய்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும். சிறுநீர் போவதில் சிரமம் இருக்காது
 9. இளநீரில் சிறிது ஜீரகத்தை சேர்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் அந்த தண்ணீரை பருகுங்கள், உடனடி தீர்வு கிடைக்கும்
 10. வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஊறவைத்து சாப்பிடலாம். 

சிறுநீரகத்தில் எரிச்சல் அல்லது பிரெச்சனைகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

Pexels

 1. சரியான உணவு அவசியம் 
 2. சரியான பானங்களை உட்கொள்ளுதல்
 3. போதுமான தண்ணீர் பருகுவது
 4. மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை கழிப்பறையை பயன்படுத்துவது

சிறுநீரக நோய் பெரிய சிரமத்தை ஆரம்பத்தில் தராது. ஆனால் நிச்சயம் மேலே சொன்ன சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். அப்போதே அலட்சியம் செய்யாமல், தகுந்த சிகிச்சை பெற்று, இயற்கை முறைகளை பின்பற்றினால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம். கூச்சப்பட்டு வெளியில் சொல்லாமல் தொடர்ந்தால், பெரிய நோய்களுக்கு ஆளாவீர்கள். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுங்கள். என்றும் சந்தோசமாக வாழலாம்!

மேலும் படிக்க - யோனி ஆரோக்கியத்திற்கான 10 எளிய வழிகள் !

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!