ஐம்பது வயதுக்கு மேல் ஆரோக்கியமாகவும், தன்னம்பிக்கையோடும் வாழ ஒரு தொகுப்பு!

ஐம்பது வயதுக்கு மேல் ஆரோக்கியமாகவும், தன்னம்பிக்கையோடும் வாழ ஒரு தொகுப்பு!

ஐம்பது வயதை கடந்த பெண்கள், தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான கடமைகளை முடித்து இருப்பார்கள். குறிப்பாக குழந்தைகளின் கல்வி, திருமணம் என்று ஓரளவிர்க்காயினும் தங்கள் கடமைகளை முடித்து விட்டு, தனது ஓய்வு நாட்களை எதிர் நோக்கி இருப்பார்கள். ஆனால், இத்தனை ஆண்டு காலம், தன் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் ஓடிக் கொண்டிருந்தவர்கள், தங்களுக்கென்று ஒரு ஓய்வு காலம் வரும் போது, ஆரோகியத்தோடு இருப்பார்களா?

இது ஒரு கேள்விக்குறியே!

நம் நாட்டில் வாழும் பெரும்பாலான பெண்கள் (women), தங்கள் ஆரோக்கியம், உடல் நலம், தங்கள் எதிர்காலம், மற்றும் ஓய்வு காலம் என்று எதைப் பற்றியும் வாழும் நாட்களில் கவலைப் படாமல், ஐம்பது வயதிற்கு மேல், தங்களுக்கென்று ஒரு நேரம் வரும்போது மட்டுமே, தங்கள் வாழ்க்கையில் இழந்ததை பற்றி சிந்திப்பார்கள். அதிலும் குறிப்பாக பணம், சொத்து உறவினர்கள் ஆகியவற்றிற்கும் மேலாக தங்கள் ஆரோக்கியத்தை இழந்து, தற்போது உதவி செய்ய யாரும் இல்லாத ஒரு நிலையில் இருப்பார்கள்.

ஆனால் வாழ்க்கை அப்படியே போய் விடுவதில்லை. இது உங்களுக்கான காலம். இனி எந்த கடமையும், கட்டுப்பாடும் உங்களுக்கு இல்லை. இந்த அழகான ஓய்வு காலத்தில் (aging life) நீங்கள் யாருடைய உதவியும் இல்லாமல் எப்படி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்வது என்று, உங்கள் ஆரோக்கியத்தை எப்படி அதிகப்படுத்திக் கொள்வது என்றும் தெரிந்து கொள்ள, உங்களுக்காக இங்கே சில பயனுள்ள குறிப்புகள்:

1. உங்களுக்கான நண்பர்கள் கூட்டம்

Pexels

இதற்கு வயது வரம்பு இல்லை. எனினும், நீங்கள் நிச்சயம் உங்களைப் போன்று மற்றும் உங்கள் வயதுடைய பலரை நீங்கள் வசிக்கும் பகுதியில் பார்க்கலாம். அவர்களுடன் நீங்கள் நல்ல நடப்பை உருவாக்கிக் கொண்டு, தினமும் அவர்களுடன் சிறிது நேரத்தை மகிழ்ச்சியாக கழியுங்கள்.

2 . உங்கள் நட்பு வட்டாரத்தை பெரிதுபடுத்திக் கொள்ளுங்கள்

ஒருவர் அல்லது இருவருக்குள் உங்கள் நட்பை சுருக்கிக் கொள்ளாமல், உங்கள் நட்பு வட்டாரத்தை பெரிதுபடுத்திக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் தொடர்ந்து யாராவது ஒருவரின் தொடர்பில் இருந்து கொண்டே இருப்பீர்கள். இது உங்கள் மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படாமல் தடுத்து, நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க உதவும்.

3. ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்

இது நீங்கள் உங்களுக்கான பணத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக இல்லை, மாறாக, உங்களால் முடியும் என்றால், தினமும் வீட்டில் இருந்தபடியே ஏதாவது ஒரு சிறிய வேலையை செய்ய முயற்சிக்கலாம். இது உங்கள் மனதிற்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும். மேலும் உங்கள் தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.

4. தீய பழக்கங்களுக்கு அடிமையாகாதீர்கள்

Pexels

பெரும்பாலும், தனிமையில் தன் ஓய்வு (வயதான) காலத்தை கழிக்கும் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள், தங்கள் மனதில் இருக்கும் கவலையை போக்க ஏதாவது ஒரு தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடும். குறிப்பாக மது மற்றும் புகை பிடித்தல், ஆனால் அப்படி ஒரு சூழலில் சிக்கிக் கொள்ளாமல், நீங்கள் உறுதியான மனதோடு, நல்ல விடயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

5. தோட்டம்

உங்கள் வீட்டில் நீங்கள் ஒரு சிறிய பால்கனி தோட்டம், அல்லது மொட்டைமாடி தோட்டம் என்று ஏதாவது ஒன்றை அமைக்க முயற்சி செய்யலாம். இது உங்கள் மனதிற்கு உற்சாகத்தையும், நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும். மேலும் நீங்கள் உருவாக்கிய தோட்டத்தில் இருந்து உங்களுக்கு காய், பூக்கள் மற்றும் கனிகள் கிடைக்கும் போது, அது உங்கள் மனதிற்கு மேலும் மகிழ்ச்சியைத் தரும்.

6. உடலுக்கு வேலை கொடுங்கள்

ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு முதலில் உடல் உழைப்பு இருக்க வேண்டும். அதனால், நீங்கள் தினமும் உங்களை ஏதாவது ஒரு வீடு வேலை, தோட்ட வேலை அல்லது, வெளியில் சிறிது நேரம் சென்று வருவது என்று ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனதும் தெளிவாகவும், உற்சாகத்தோடும் இருக்கும்.

7. ஆரோக்கியமான உணவு

Pexels

ஐம்பது வயதிற்கு மேல், நிச்சயம் நீங்கள் இதுவரை வழக்கமாக எடுத்துக் கொண்ட உணவில் இருந்து சில மாற்றங்களை செய்ய வேண்டும். குறிப்பாக, அதிக எண்ணைப் பொருள், கொழுப்பு நிறைந்த உணவு போன்றவற்றை தவிர்த்து, அதிகம் பச்சை காய்கள், நீர் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் கீரை வகைகள் என்று சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக கால்சியம் மற்றும் நார் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.

8. செலவுகளை கட்டுப்படுத்துங்கள்

முடிந்த வரை தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, உங்கள் சேமிப்பில் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொள்வது நல்லது. இதனால் நீங்கள் எந்த சூழலிலும் பிறரிடம் என்றும் பண உதவி கேட்டு செல்ல வேண்டாம்.

9. வயதை கவனிக்காதீர்கள்

உங்கள் வயதிற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால், விரைவாகவே நீங்கள் முதிர்ச்சியை தொட்டுவிடக் கூடும். அதனால், எந்த காரணம் கொண்டும், உங்கள் வயதை கண்டுக்கொள்ளாமல், ஒரே உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் உங்கள் நாட்களை கழியுங்கள். 

 

மேலும் படிக்க - முகத்தில் வயதான அறிகுறிகளை போக்க, சில பயனுள்ள குறிப்புகள்

பட ஆதாரம்  - Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!