மகன் அத்வைதின் புகைப்படங்களை வெளியிட்ட சுஜா வருணி.. சோ க்யூட் பேபி !

மகன் அத்வைதின் புகைப்படங்களை வெளியிட்ட சுஜா வருணி.. சோ க்யூட் பேபி !

சுஜா வருணி என்றால் அனைவருக்கும் பரிச்சயமில்லை. ஆனால் பிக் பாஸ் சுஜா வருணி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் நடிகை சுஜா வருணியை யாரும் மறக்க முடியாது.                 

ஆரம்ப நாட்களில் அதிரடியாக களமிறங்கி பின்னர் அதுவே ஓவர் டோஸ் ஆக அதனால் பலர் அதிருப்திகளுக்கு ஆளானாலும் டிக்கெட் டு பினாலே வரை வந்தவர் சுஜா வருணி (suja varunee). அதில் இருக்கும்போதே தான் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் என்றும் கூறி இருந்தார்.

கமல்ஹாசன் தன்னுடைய அப்பா ஸ்தானத்தில் இருந்து தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த காதலர் நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தை சார்ந்த அவரது பேரன் சிவகுமார் (shivakumar) என்பது பின்னால் தெரிய வந்தது.                                                                    

 

Youtube

சொன்னபடியே இவர்கள் திருமணம் முடிந்ததும் பெரிய விருந்து கொடுத்து கமல்ஹாசன் மணமக்களை வாழ்த்தினார். இவர்கள் திருமணம் முடிந்து ஒரு ஆண்டுக்குள்ளாகவே இவர்கள் அன்பை வெளிக்காட்ட ஆண்மகவு ஒன்றை பெற்றெடுத்தார் சுஜா வருணி.

ஆரம்பத்தில் இவர்கள் குழந்தையின் முகத்தை வெளிக்காட்டாமல் ஸ்மைலி பொம்மை முகத்தோடு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் நடிகை சுஜா வருணி. தீபாவளி வாழ்த்துக்களுக்கும் இப்படியான ஒரு புகைப்படத்தையே வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.                                          

 

Youtube

ஆனால் தன்னுடைய முதல் திருமண நாள் விழா கொண்டாட்டத்தை ஒட்டி தன்னுடைய அழகிய மகன் அத்வைதின் புகைப்படங்களை வெளியே காட்டி இருக்கிறார் சுஜா வருணி. அதற்கடுத்து குழந்தை அத்வைத்திற்கு போட்டோ ஷூட் செய்யப்பட்டுள்ளது.

அந்த புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய சந்தோஷங்களை மற்றவர்களுடன் பகிர்ந்திருக்கிறார் நடிகை சுஜா வருணி மற்றும் அவரது கணவர் சிவகுமார்.

Youtube

என்னோடு வா மகனே காலவெளிகளை தாண்டி நாம் பயணிப்போம் என்கிற நடிகர் சிவகுமாரின் வரிகள் படிப்பவர்கள் நெஞ்சை தொடுகிறது.

மரணிக்கும் மனிதர்களைக் காட்டிலும் உனது சக்தி அளவிட முடியாததாக இருக்க வேண்டும் என்கிற வரிகள் சிவகுமார் எனும் தகப்பனின் நேசம் அளவுகளுக்குள் அடங்காதது என்பதை நமக்கு கூறுகிறது. குழந்தையின் புகைப்படத்தை பார்க்கையில் அத்தனை அழகாக இருக்கிறது.

இன்னமும் இந்த உலகின் விஷயங்களை சரியாக பார்க்க தெரியாத அந்தக் குழந்தையின் கண்களில் தெரிகிற தூய்மை பார்க்கும் நம் நெஞ்சங்களையும் சேர்த்தே சலவை செய்கிறது. வாழ்த்துக்கள் சிவகுமார் மற்றும் சுஜா வருணி.

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!