அம்மாவும் அப்பாவும் பிரிந்தது நல்லதுதான்.. கமல்ஹாசன் சரிகா பற்றி ஸ்ருதி ஹாசன்

அம்மாவும் அப்பாவும் பிரிந்தது நல்லதுதான்.. கமல்ஹாசன் சரிகா பற்றி ஸ்ருதி ஹாசன்

கமல்ஹாசன் என்றாலே காதல் பற்றியும் அவரது திருமண வாழ்க்கை பற்றியும் வெளிப்படையாகவே மக்கள் பேசுவது வழக்கம். காரணம் தன்னுடைய வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி வெளியே காட்டிக் கொண்டதில் கமல்ஹாசனின் பங்கு அதிகம் இருந்தது.

திரைத்துறையில் தீரா காதலோடு செய்ய முடியாத பல விஷயங்களை செய்து காட்டியவர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி நடனக்கலைஞராக மாறி அதன் பின்னர் துணை இயக்குனராக சில காலம் பரிணமித்து பின்னர் தெளிந்த நடிகரானவர் கமல்ஹாசன்.                           

Youtube

இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருக்கும் கமல்ஹாசன் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில்தான் கமல்ஹாசனின் 65வது பிறந்த நாளை அவரது தொண்டர்களும் ரசிகர்களும் கலையுலக நண்பர்களும் இணைந்து பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள்..

பரமக்குடியில் இருக்கும் தன்னுடைய உறவினர்களுடன் குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டார் கமல்ஹாசன். அதுவும் இப்போது சர்ச்சைக்குரிய புகைப்படமாக மாறி இருக்கிறது. நடிகை பூஜா குமாரையும் அந்த புகைப்படத்தில் அவர் இணைத்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.         

Youtube

அதே சமயம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் (sruthi haasan) தன்னுடைய பெற்றோர் (கமல்ஹாசன் - சரிகா) பிரிந்தது குறித்து தன்னுடைய கோணத்தை கூறி இருக்கிறார். எல்லோருடைய வாழ்க்கையிலும் பெற்றோர்தான் முக்கியமான பாகம்.

ஆனால் எனது பெற்றோர்கள் ஒன்றாக இருந்திருந்தால் எனக்கு வலிகள் தான் மிஞ்சி இருக்கும். அவர்கள் இருவருமே நல்ல நடிகர்கள். இருவரும் அடிக்கடி சண்டைகள் போட்டு கொண்டபடி இருப்பது ஆரோக்கியமானது அல்ல.

Youtube

நன்றாக புரிந்து கொண்டு விலகி வாழ்வது அவர்களுக்கு சந்தோஷத்தை தரும் . என்னை பொறுத்தவரை அப்பா அம்மா பிரிந்தது எனக்கு மகிழ்ச்சிதான். நான் அவர்களை சேர்த்து வைக்கத்தான் பலமுறை நினைத்தேன். ஆனால் இப்போது இருவருமே தனித்தனியாக சந்தோஷமாக இருப்பது பார்க்கும்போது இதுதான் சரி என்று எனக்கு தோன்றுகிறது.

அவர்களை சேர்த்து வைத்தால் மீண்டும் சண்டை போட்டவண்ணமே இருந்திருப்பார்கள் ஆகவே இதுதான் நல்லது என்று நான் நினைக்கிறன் என்று வருத்தத்துடன் தன்னுடைய பெற்றோர் பிரிவு பற்றி மனம் திறந்திருக்கிறார் அவரது மகள் ஸ்ருதி ஹாசன்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!