நித்யானந்தாவுடன் இருக்கும் புகைப்படம் உண்மையானது இல்லை : பாடகி சின்மயி விளக்கம்!

நித்யானந்தாவுடன் இருக்கும் புகைப்படம் உண்மையானது இல்லை : பாடகி சின்மயி விளக்கம்!

பாடகி சின்மயி கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே.. பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்த பாடலுக்காக முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது ஏராளமான பாடல்களை பாடி வருகிறார். 

மேலும் ஹீரோயின்களுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார். சமீபத்தில் பாடலசிரியர் வைரமுத்து  பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த சம்பவத்தால் பல்வேறு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் எழுந்தது. 

இதனை தொடர்ந்து மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பேசி வருகிறார். அதன் மூலம் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார். 

twitter

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சின்மயி மற்றும் அவரது தாயார் சாமியார் நித்தியானந்தாவிடம் ஆசி பெறும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சாமியார் நித்தியானந்தா மீது அண்மைக் காலமாக பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

ஏற்கனவே நடிகை ரஞ்சிதாவுடன் இருந்த வீடியோ வெளியான நிலையில் தற்போது தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா. 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்யானந்தாவின் முன்னாள் சிஷ்யையான கனடா நாட்டைச் சேர்ந்த சாரா லாண்ட்ரி என்ற பெண் நித்யானந்தா தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாக பெங்களூரு போலீசில் புகாரளித்துள்ளார். 

தவறான புகைப்படங்களை அனுப்பி தன்னை வசப்படுத்த முயன்றதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/ashoksa67918029/status/1196719849835094016

மேலும் பெங்களுரு ஆசிரமத்தில் உள்ள தனது இரண்டு மகள்களை மீட்க கூறி குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜனார்த்தனசர்மா என்பவர் அகமதாபாத் போலீசில் புகார் அளித்துள்ளார். 

தற்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கும் பொங்கி எழும் பாடகி சின்மயி நித்தியானந்த விஷயத்தில் ஒரு ட்விட் கூட போடாதது ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். 

ஒருவர்  "மேடம் நீங்கள் இஷ்டத்திற்கு ட்விட் போடுவீங்க. ஆனால் நித்தியானந்தா விஷயத்தில் இதுவரை ட்வீட் போடவில்லை, இந்த விஷயத்திற்கு ட்வீட் போடவில்லை என்றால் ரொம்ப அசிங்க படுத்துவேன் உன்னை" என கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள சின்மயி, ’’இந்த ட்வீட்டை காப்பி பேஸ்ட் பண்ணவங்களோட பெத்தவங்க பசங்கள வளர்க்கிறதுக்கு பதில் பொறுக்கிகளை வளர்த்திருக்கிறார்கள் என நிரூபித்ததற்கு நன்றி’’ என தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலடி கொடுத்துள்ள நெட்டிசன் ஒருவர் "எது எதுக்கோ பொங்க நேரம் இருக்கிற உங்களுக்கு, அத்தனை இளம்பெண்கள் வாழ்க்கையை பற்றி யோசிச்சு ஒரு ட்வீட் கூட போட முடியவில்லை என்றால் நீங்கள் என்ன பெண்ணியவாதி?

உங்களை பேசியே ஆக வேண்டும் என சொல்லவில்லை. இதற்கு பேசாவிட்டால் எதற்குமே பேசாதீர்கள். ...நித்தியை பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்? நீங்கள் நித்திக்கும் ரசிகையா ?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

twitter

இதேபோன்ற பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் நித்யானந்தாவுடன், சின்மயி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நித்தியானந்தாவிடம் சின்மயி, தனது தாயாருடன் பிரசாதம் வாங்குவது போல அந்த புகைப்படங்கள் இருந்தன. 

எனவே பாலியல் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சின்மயி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சாமியாரை சந்திப்பதா என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சர்ச்சை புகைப்படங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள சின்மயி, இந்த புகைப்படம் போலியானது என்று கூறியுள்ளார்.  

அந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது, எனினும் அதை பலரும் பரப்பி வருகின்றனர். இதையெல்லாம் சும்மா செய்கிறார்களா இல்லை யாரவது பணம் கொடுக்கிறார்களா? என கோவமாக சின்மயி பதிவிட்டுள்ளார்.  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!