டிஸ்னியின் ஃப்ரோஸன் 2 தமிழ் பதிப்பில் நாயகிக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள ஸ்ருதி ஹாசன்!

டிஸ்னியின் ஃப்ரோஸன் 2 தமிழ் பதிப்பில் நாயகிக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள ஸ்ருதி ஹாசன்!

நடிகை, பாடகி எனப் பன்முகம் கொண்டவர் கமல் ஹாசன் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு வருடமாக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் நடித்து வருகிறார். 

முன்னதாக ஸ்ருதி ஹாசனும், லண்டனை சேர்ந்த நடிகரும் பாடகருமான மைக்கேல் கோர்சாலும் நீண்ட நாள்களாகக் காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் ஸ்ருதி ஹாசனே அதனை உறுதியும் செய்தார். 

இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில் இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டது. ஆனால் இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது என கூறிவிட்டு தனது வழக்கமான பணிகளை செய்துவருகிறார் ஸ்ருதி ஹாசன்.

twitter

மேலும் ஒரு சிறந்த காதலை தேடிக் கொண்டிருக்கிறேன். அது வரும்போது அதனை எல்லோருக்கும் அறிவிப்பேன் என கூறியுள்ளார். இந்நிலையில் தமிழில் வெளியாக உள்ள ஃப்ரோஸன் 2 படம் படத்தில் நாயகி எல்சா கதாபாத்திரத்திற்கு  நடிகை ஷ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார். 

டிஸ்னியின் ஃப்ரோஸன் 2 படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது. இந்தியாவில், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஃப்ரோஸன் 2 ரிலீஸ் செய்யப்படுகிறது. 

பிறவியிலேயே தொட்டதையெல்லாம் உறைய வைக்கும் சக்தி படைத்த எல்சா, தனது தங்கையின் காதலை பொறுக்க முடியாமல் தனது ராஜ்யத்தையே பனியாக உறைய வைத்து விட்டு போய்  விடுவார். 

அதன் பின்னர் சூர்ய ஒளியை கொண்டு வர தங்கை ஆன்னா போராடுவதும் இறுதியில் அக்காவை சந்தோஷப்படுத்தி ராஜ்யத்தை காப்பாற்றுவதும் தான் 2013ம் ஆண்டு வெளியான ஃப்ரோஸன் படத்தின் கதை.

twitter

அனிமேஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ஃப்ரோஸன் முதல் பக்கத்தில்  பல பாடல்கள் கொண்டு உருவாக்கப்பட்டன. முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த ‘Let it Go' பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இரண்டாம் பாகத்திலும் அது போன்று கதையை நகர்த்தி செல்லும் மைய பாடலாக 'Into the Unknown' பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஜெனிஃபர் லீ கூறியுள்ளார்.   

இந்நிலையில் சிறந்த குரல் வளம் மிக்க ஸ்ருதி ஹாசன் தமிழ் பதிப்பில் மூன்று பாடல்களையும் பாடியிருக்கிறார். இன் டு தி அன்னோன்... என்ற ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் நடிகை ஸ்ருதி ஹாசனின் குரலை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

twitter

ஃப்ரோஸன் படத்தில் முக்கிய கதாபாத்திரமான எல்சா மற்றும் ஆன்னா கதாபாத்திரத்திற்கு ஹாலிவுட்டில், கிறிஸ்டன் பெல் மற்றும் இடினா மென்சல் குரல் கொடுத்துள்ளனர். பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது சகோதரியான பரிணித்தி சோப்ரா குரல் கொடுத்துள்ளனர். 

தெலுங்கு வெர்ஷனுக்கு பிரபல நடிகை நித்யா மேனன் எல்சா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். தமிழில் நடிகை ஷ்ருதிஹாசன் நாயகி எல்சா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். இந்த தகவலை ஸ்ருதி, மகிழ்ச்சியுடன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

மேலும் இதுகுறித்து பேசிய ஸ்ருதி, எல்சாவிற்கு குரல் கொடுப்பது தனக்கு கிடைத்த பாக்கியம் என கூறியுள்ளார். ஃபோரஸன் திரைப்படத்தில் எல்ஸா மற்றும் அன்னா சகோதரிகளுக்கிடையிலான பந்தம் உள்ளத்தை உருக்கும் வகையிலானது. 

எல்ஸா தன் இளைய சகோதரி அன்னாமீது கொண்ட பேரன்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் நானும் என் இளைய சகோதரிமீது அந்த அளவுக்கு பாசம் கொணடிருக்கிறேன். ஒவ்வொரு பெண்னின் ரோல் மாடல்  எல்ஸா என்பதும், நான் அந்தப் பாத்திரத்துக்கு குரல் கொடுத்து பாடியிருப்பதும் என்னால் மறக்க முடியாத அனுபவம் என தகவல் அளித்துள்ளார். 

தமிழிலும் தங்கை ஆன்னா கதாபாத்திரத்திற்கு யார் குரல் கொடுக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதேபோல நித்யா மேனனும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃப்ரோஸன் 2 படத்தில் குரல் கொடுத்துள்ள தகவலை ஷேர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!