நட்சத்திர விடுதியில் எல்லை மீறி வீடியோ வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால் : ரசிகர்கள் ஷாக்!

நட்சத்திர விடுதியில் எல்லை மீறி வீடியோ வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால் : ரசிகர்கள் ஷாக்!

நிகழ்ச்சி தொகுப்பாளினி மற்றும் மாடலான சாக்ஷி அகர்வால் தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களிலும் நடித்திருக்கிறார். 2018ம் ஆண்டில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் புகழ்பெற்றார். அதற்கு முன்பே பல படங்களில் சாக்ஷி நடித்து இருந்தாலும் அப்பொழுது தான் கவனிக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் சாக்ஷி நடித்து இருந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் சாக்ஷி பிரபலமானார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷி, நடிகர் கவினை காதலித்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் நிகழ்ச்சி நடைபெற்ற போதே இருவரும் பிறந்தனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்கள் பேசுவதை அரைகுறையாக கேட்டுவிட்டு பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். 

twitter

இதனால் அவரை ஸ்நேக்ஷி, பாய்சன் என்றெல்லாம் வசை பாடினர் பார்வையாளர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையோடு தன்னை ட்ரோல் செய்த நெட்டிசன்களை இதோடு நிறுத்திக்கொள்ளுமாறறு எச்சரித்தார். மேலேயும் தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி விதவிதமான போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். 

அதற்கான பலனாக அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகி வருகிறார் சாக்ஷி அகர்வால். ஏற்கனவே ஆர்யா, சாயிஷா மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்து வரும் டெடி படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் ராய் லட்சுமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'சிண்ட்ரெல்லா படத்திலும் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். 

சிண்ட்ரெல்லா படத்தில் அவர் நடிகத்துள்ள கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹாரர் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் சாக்ஷி அகர்வால் வில்லி ரோலில் நடித்திருக்கிறார். அவரது கதாப்பாத்திரம் படத்தில் பரபரப்பை கூட்டும் காட்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

twitter

இதுகுறித்து பேசிய சாக்ஷி, சிண்ட்ரெல்லா ஒரு திகில் த்ரில்லர். இந்த படம் நாம் பார்த்த படங்களில் இருந்து தனித்து நிற்கும் என நம்புகிறேன். கற்பனை, நகைச்சுவை மற்றும் காதல் ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கிய ஸ்கிரிப்டை இந்த படத்தில் அறிமுகம் செய்துள்ளனர். 

இந்த படத்தில் எனக்கு வழங்கிய கதாபாத்திரத்தின் நோக்கம் குறித்து நான் உறுதியாக நம்பிய பின்னரே நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார். இதனிடையே தன்னுடைய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்ஷி பதிவிட்டுள்ளார். அதில் குட்டையான உடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கின்றார். 

இதற்கு ரசிகர்கள் பலரும் அவரை திட்டி தீர்த்தனர். ஆனால் அதை கண்டுகொள்ளாத சாக்ஷி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ள சாக்ஷி அகர்வால், அங்குள்ள ரெஸ்ட்ரூமில் தன்னைத்தானே வளைத்து வளைத்து வீடியோ எடுத்திருக்கிறார். 

ஸ்ட்ராப்லஸ் டாப் மற்றும் லாங் ஸ்கர்ட் அணிந்துள்ள சாக்ஷி பாத்ரூமுக்குள் உள்ள கண்ணாடியில் சுற்றி சுற்றி பார்த்து வீடியோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகும் கக்கூஸை மறக்கல போல என்று கமென்ட் அடித்து வருகின்றனர். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!