மோசமான வார்த்தைகளால் மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள் : கோபத்துடன் பதிலடி கொடுத்த நடிகை ராஸ்மிகா!

மோசமான வார்த்தைகளால் மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள் : கோபத்துடன் பதிலடி கொடுத்த நடிகை ராஸ்மிகா!

கன்னட திரையுலகில் 2016ம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனைத் தொடர்ந்து இரண்டு கன்னட படங்களில் நடித்த ராஷ்மிகா, கடந்த  2018ம் ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் என்ட்ரியாகி 3 படங்களில் நடித்தார். 

அதில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில் பிரபலமடைந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ‘இன்கேம் இன்கேம் காவாலே’ பாடல் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. 

இதனை தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். இப்போது மூன்று தெலுங்கு படங்கள் மற்றும் தமிழ், கன்னடத்தில் ஒரு படம் என ராஷ்மிகா (rashmika) செம பிஸியாக உள்ளார்.

twitter

இந்நிலையில் தெலுங்கில் இயக்குநர் வெங்கி குடுமுலா இயக்கும் ‘பீஷ்மா’ படத்தில் நித்தினுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ராஷ்மிகா ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். 

அந்த வீடியோவில் படத்தை 2020 பிப்ரவரி 21ம் தேதி வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் அதில் நடிகர் நிதின் - நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு வரும் ஹீரோவிற்கு அதனை சுற்றிக்காட்டும் ஹீரோயின் இடுப்பை ஹீரோ பிடிப்பது போன்ற காட்சி தான் இது.

தெலுங்கில் 'சாலோ' என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் வெங்கி குடுமுலா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதனிடையே  கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ரஷ்மிகா அவரது இளம் வயது புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார். 

அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலானது. இந்நிலையில் அந்த புகைப்படங்களை வைத்து சிலர் ராஷ்மிகாவை கேவலமாக சித்தரித்து மீம்ஸ் போட்டனர். அதில் ரஷ்மிகா பற்றி தகாத வார்த்தைகள் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

அதில் ராஷ்மிகாவை  Dagar என குறிப்பிட்டுருந்தனர். இதனை பார்த்த ராஸ்மிகா மிகவும் கோவமடைந்துள்ளார். Dagar என்ற வார்த்தைக்கு கன்னடத்தில் விபச்சாரி என்று அர்த்தம். இது குறித்து ரஷ்மிகா மீம் கிரியேட்டர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பெரிய ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். 

அதில் இப்படி அசிங்கப்படுத்துவதால் உங்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது என எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு இரை நாங்கள் தான். சினிமா நடிகை என்பதற்காக எங்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என அர்த்தமாகிவிடாது. 

மோசமான பதிவுகளை புறந்தள்ளிவிடுங்கள். அதற்கு முக்கியத்துவம் தராதீர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். அதை நானும் செய்கிறேன். என்னுடைய வேலையை பற்றி எது வேண்டுமானாலும் (rashmika) பேசுங்கள்.  நான் நடிக்கும் படம் பற்றி என்ன வேண்டுமானால் பேசுங்கள்.

twitter

உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் என் குடும்பத்தை பற்றியோ, தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியோ பேசுவதற்கு உங்கள் யாருக்கும் உரிமை இல்லை. எந்த நடிகையையும் இது போல் பேசக்கூடாது. 

ஏனென்றால் ஒரு நடிகையாக இருப்பது அத்தனை சுலபம் இல்லை. ஒவ்வொரு வேலைக்கும் நாம் உச்சபட்ச மரியாதை தர வேண்டும். முதலில் நாம் ஒருவரை ஒருவர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என காட்டமாக ராஷ்மிகா பதிவிட்டுள்ளார். ராஷ்மிகாவின் (rashmika) இந்த பதிவு வைரலாகியுள்ளது. மேலும் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறி வருகின்றனர். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!