தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் பிரித் சிங் தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் கைகொடுக்காத நிலையில் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்தபடத்தின் மூலம் அவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தேவ், தற்போது இந்தியன் 2 மற்றும் சிவகார்திகேயனுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உட்பட 25க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரகுல் பாகுபலி நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ரகுல் (rakul), ராணாவை காதலிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என கூறியுள்ளார். எங்கள் இருவரது வீடும் மிக அருகில் தான் உள்ளது.
தெலுங்கில் சங்கத்தமிழன்..தன் பெயரே படத்தின் டைட்டில் : புதிய அந்தஸ்தை பெற்ற விஜய் சேதுபதி!
இரண்டு நிமிடத்தில் சென்றுவிடலாம். நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்தே ராணாவை தெரியும். அப்போது அவர் காதலில் இருந்தார். நாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம். இப்போதும் நல்ல நண்பர்களாக தான் பழகி வருகின்றோம். நான் சிங்கிள் தான். இதுவரை யாரையும் காதலித்ததில்லை.
தற்போது நேரமும் இல்லை ரகுல் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே ரகுல் பிரீத் சிங் ஜிம்மில் 80 கிலோ பளுவை தூக்கிய வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
மேலும் அதில் இந்த ஸ்குவாட்டை செய்வதனால் உடலிலுள்ள அனைத்து தசைகளும் ஒரேநேரத்தில் இயங்கி எல்லா உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. இந்த ஸ்குவாட் பயிற்சியை, 2003ம் ஆண்டு முதல் மை பிட்னஸ் டிரெய்னர் ஸ்டூடியோ நிறுவனர் ஹாரிசன் ஜேம்ஸ் தோற்றுவித்தார்.
நட்சத்திர விடுதியில் எல்லை மீறி வீடியோ வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால் : ரசிகர்கள் ஷாக்!
கடினமான உபகரணங்கள் இல்லாமல் செய்யக்கூடிய மிக எளிமையான பயிற்சி இது ஆகும். இந்த பயிற்சிக்கென தனியான உணவுக்கட்டுப்பாடுகள் போன்றவை தேவையில்லை. 100 சதவீத முழுமையான பலனை இந்த பயிற்சி தரவல்லது என குறிப்பிட்டுள்ளார்.
புதிய படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தபோதிலும் ஒருநாள் கூட ஜிம்முக்கு போவதை தவிர்ப்பதில்லை என கூறும் ரகுல் பிரீத் சிங் (rakul) முன்னணி உடற்பயிற்சி மையத்தின் பங்குதாரராகவும் உள்ளார். இவருக்கு ஐதராபாத்தில் 2 உடற்பயிற்சி மையங்களும், விசாகப்பட்டினத்தில் ஒரு உடற்பயிற்சி மையமும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங் (rakul) தற்போது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!