குளிர்காலத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் : மொறு மொறு ராகி பகோடா, செய்வது எப்படி?

குளிர்காலத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் : மொறு மொறு ராகி பகோடா, செய்வது எப்படி?

மிக சத்தான பாரம்பரியம் மிக்க தானியம் ராகி. ராகி பயன்படுத்தி கஞ்சி செய்யலாம், களி கிளறலாம், உப்புமா, புட்டு, ரொட்டி, பணியாரம், பூரி, தோசை, சப்பாத்தி, கொழுக்கட்டை இப்படி ஏராளமான உணவுப் பண்டங்கள் செய்யலாம். குளிர்காலத்திற்கு சுவையான ராகி பக்கோடா செய்வதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

செய்ய தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு ½ கப்
பொட்டுக்கடலை 4 தேக்கரண்டி
வேர்க்கடலை ½ கப்
ராகி மாவு 2 கப்
சின்ன வெங்காயம் ½ கப்
நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி
பூண்டு 6
முருங்கைக்கீரை 1 கட்டு
வரமிளகாய் 6
உப்பு தேவையான அளவு

செய்முறை :

  1. பொட்டுக்கடலையையும், வேர்கடலையையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு  பெரிய கிண்ணத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.
  2. கடலைப்பருப்பை ஒரு அரைமணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஊறிய பருப்பை முழுவதுமாக அரைக்காமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  3. முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து, காம்புகளை நீக்கிக் இதோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
  4. பூண்டு பற்களை தோளோடு சேர்த்து லேசாக தட்டி சேர்த்துக்கொள்ளுங்கள்.
  5. வரமிளகையை சிறிது சிறிதாக கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். சிறு குழந்தைகளுக்கு தருவதாக இருந்தால், வரமிளகாய் தூள் பயன்படுத்தலாம்.
  6. வெங்காயத்தை நீளவாக்கில் லேசாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்.
  7. மீதமுள்ள பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளுங்கள்.
  8. சப்பாத்திக்கு பிசைவதைவிட சற்று இலகுவாக இருந்தால் நன்றாக இருக்கும்.
  9. எண்ணெயில் பக்கோடா (ragi pakoda) போன்று கிள்ளிப் போட்டு பொரித்து, சுவைத்துப் பாருங்கள். பிரமாதமாக இருக்கும்.

ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வைத்திருந்தும் சாப்பிடலாம். எளிதில் கெடாது. ஆறியபின் சுவை இன்னும் அலாதியாக இருக்கும். பக்கோடாவின் நிறத்தைப் பார்த்து இதை தவிர்க்க நினைப்பார்கள். ஒன்று மட்டும் சுவைத்துப் பார்க்கச் சொல்லுங்கள் அப்புறம் செய்தது அனைத்தையும் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

Pinterest

ராகியில் (கேழ்வரகு) உள்ள சத்துக்கள்

ராகியில் உள்ள சத்துக்கள் ஏராளம். ஒவ்வொன்றையும் விரிவாக பார்க்கலாம்.

1. க்ளூட்டன் இல்லாத தானியம் ராகி. க்ளூட்டன் அலெர்ஜி உள்ளவர்கள் இந்த தானியத்தை தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.

2. நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. எடை குறைக்க நினைப்பவர்களுக்கு சத்தான தானியம் இது.

3. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள அற்புதமான தானியம். குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பொருள். உறுதியான பற்களுக்கும், எலும்புகளுக்கும் ராகி பயன்படுத்துங்கள்.

4. இரும்புச்சத்தும் கூடவே சேர்ந்துள்ள தானியம் இது. அனீமியா போன்ற இரத்த சோகை நோய் உள்ளவர்கள், அதிகமாக ராகி சேர்த்தால், இயற்கையாக உங்கள் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும்.

5. வைட்டமின் பி3 உள்ளதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பொலிவாக வைத்துக்கொள்ளும்.

6. ஊறவைத்து முளைகட்டி பயன்படுத்தினால் இதில் உள்ள சத்துக்கள் பெருகும். வைட்டமின் சி அதிகரித்து அது மற்ற சத்துக்களை ரத்தத்தில் கலக்க உதவும்.

Pinterest

7. தினமும் ராகி சாப்பிட்டுவந்தால், மனச்சோர்வு, போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். உடலை தளர்த்திக் கொடுக்கும். 

8. மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியில் இருந்தும் ராகி சாப்பிடுவதால் விடுபடலாம்.

9. ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேராமல், இருதய நோயில் இருந்து கேழ்வரகு பாதுகாக்கிறது

10. உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் வயது முதிர்வையும் தடுக்கிறது

11. ராகியில் (raagi) புரதச்சத்தும் மிகையாக உள்ளது. உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்.

12. நீரழிவு நோயை இயற்கையாக கட்டுக்குள் வைக்க ராகி பயன்படுத்துங்கள்.

13. பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தை  சம நிலையில் வைத்துக் கொள்ளும்.

கொஞ்சம் உயரமான பகுதியில் விளையும் இந்த தானியம், இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் அதிகம் பயிரிடுகிறார்கள். ராகியை அதிகம் சேர்த்தால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் என்பார்கள். ராகி களி செய்து, ஆறவிட்டு மோருடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டைத் தனித்து நல்ல சக்தியை கொடுக்கும். வெய்யில் காலங்களில் அம்மனுக்கு கூல் ஊற்றும் திருவிழா இன்றளவும் நம்ம ஊரில் நடந்து கொண்டுதானிருக்கிறது.

மேலும் படிக்க - ஹோட்டல்களில் அரிதாய் கிடைக்கும் கொஸ்து.. இட்லி தோசைக்கான அற்புத சைட் டிஷ்! எப்படி செய்வது?

பட ஆதாரம்  - Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!