அற்புதமான அவல் தோசை செய்து பாருங்கள் !

அற்புதமான அவல் தோசை செய்து பாருங்கள் !

அவல் உடல் எடை அதிகரிக்காமல் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அற்புதமான உணவு. இந்த அவலை (poha) பயன்படுத்தி அழகான ஆரோக்கியமான தோசை வார்த்து உண்ணலாம் வாருங்கள்.                                 

Youtube

தேவையான பொருள்கள்                                                                      

பச்சரிசி 2 கப்                                
அவல் 1/2 கப்
உருண்டை உளுந்து 1/4 கப்
வெந்தயம் 2 ஸ்பூன்

 

Youtube

அவலை தனியாக ஊற வைக்கவும். அரிசி மற்றும் பருப்பு வெந்தயத்தை ஒன்றாக ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து நன்றாக அரைத்தெடுக்கவும். அதனுடன் அவலையும் ஒன்றாகவே சேர்த்து அரைத்து எடுங்கள்.

இந்த மாவும் இட்லி மாவு போலவே தான். ஆகவே காலையில் ஊற வைத்து அரைத்தால் இரவு தோசை வார்க்கலாம். மாவு புளித்த உடன் தோசை ஊற்றலாம்.

இந்த தோசையை சாதாரண தோசைக்கல்லில் போட்டோ அல்லது ஆப்பச்சட்டியில் ஊற்றியோ வேக வைக்கலாம். ஒரு புறம் மட்டுமே இதனை வேக வைக்கவும். அதன் பின்னர் தட்டில் எடுத்து பாதி வெளியில் இருக்குமாறு தோசைகளை அடுக்கி கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஒட்டி கொள்ளும்.

இந்த அவல் தோசைக்கு சரியான காம்பினேஷன் வெங்காய சட்னி அல்லது காய்கறி குருமா. இரண்டுமே நன்றாக இருக்கும்.                                             

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                             

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்