வெங்காயத்தை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம். இன்னும் கூடதலாக சொல்ல வேண்டும் என்றால், வெங்காயம் இல்லாமல் தினசரி வாழ்க்கையை கடக்காதவர்களே இருக்க முடியாது என்றும் கூறலாம். வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை!.
இப்படி, வெங்காயம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால், இந்த வெங்காயம் சமையலுக்கு மட்டும் தானா? இல்லை, அதற்கு மேலாக, இந்த வெங்காயத்தை தலைமுடியின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்(onion for hair growth). இது நிச்சயம் நல்ல பலன்களை உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
வெங்காயம் எப்படி தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ள, இந்த பயனுள்ள தொகுப்பை தொடர்ந்து படியுங்கள்!
வெங்காய சாறை பற்றி சில தகவல்கள்(Fast fact of Onion juice)
- வெங்காயத்தில் இருக்கும் சில குறிப்பிடத்தக்க தாது பொருட்கள் தலைமுடியின் வளார்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது
- எனினும், வெங்காயத்தாள் ஒவ்வாமை ஏற்படக் கூடியவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது
- வெங்காயத்தின் மனம் அதிகமாக இருந்தால், அதனை குறைக்க, சிறிது எழுமிச்சைபழ சாரை அதன் மீது ஊற்றலாம்
- வெங்காயத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன
- இதன் சாறு தலைமுடி உதிர்வை நிறுத்த ஒரு நல்ல நிவாரணியாக செயல்படுகின்றது
- வெங்காயத்தில் இருக்கும் சல்பர் முடி உடைவது மேதரும் பலமற்று இருப்பது போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்
- இந்த சல்பர் தலைமுடி நுண்குமிழிக்கு போஷாக்கு தரும் மேலும் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் ஆரோக்கியமான தலைமுடி வளர உதவும்
- இதில் ஆக்சிஜனேற்ற நிறைந்துள்ளது. அதனால் இளம் நரையை இது போக்க உதவும்
- வெங்காய சாறு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இது தலைமுடியின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்
- இதில் பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், வேர் பகுதிகளில் நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கும்
தலைமுடி வளர்ச்சிக்கு வெங்காயத்தின் பலன்கள்(Benefits of onion for hair growth)
வெங்காயம் தலை முடி வளர்ச்சி பயன் தருவது நம்மில் அநேகருக்கு தெரிந்திருந்தாலும் இதனை எப்படி பயன்படுத்துவது என்பது நம்மில் அநேகருக்கு தெரியாத ஒரு விடயமாக தான் இருக்கின்றது. எப்படியெல்லாம் வெங்காயத்தை பயன்படுத்தி தலைமுடியை பாதுகாக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
வெங்காயத்தில் தலைமுடி நன்கு வளர்வதற்கான பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் முடி உதிர்வு கட்டுபடுத்தப்பட்டு, நல்ல அடர்த்தியான கூந்தலைப் பெறலாம். வெங்காயம் எப்படி தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சில தகவல்கள்:
1. தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்
Shutterstock
வெங்காயத்தில் அதிகம் ஆக்சிஜனேற்றம் இருப்பதால், இது முடியின் வளர்ச்சியை ஊக்கவிக்கும். மேலும் இதில் இருக்கும் ஆக்சிஜனேற்ற நொதி வினையூக்கி ஹைட்ரஜன் பெராக்சைடை சிதைத்து, முடி வளர்ச்சி சுழற்சியை மேம்படுத்துகிறது. இதனால் அடர்ந்த கூந்தல் வளரும்.
2. மயிர்க்கால்களுக்கு போஷாக்கு தரும்
இதில் இருக்கும் சல்பர் தலைமுடியின் மயிர்கால்கள் மீண்டும் உற்பத்தியாக மிகவும் தேவைப்படும் ஒன்று. இந்த சத்து மிடி உதிர்வை குறைத்து, தலைமுடி உடையாமலும் இருக்க உதவும்.
3. பக்டீரியா எதிர்ப்பு பண்புகள்
வெங்காயத்தில் அதிக அளவு பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது வேர் பகுதியை ஆரோக்கியத்தோடு வைத்திருப்பதோடு, நோய் தொற்று, பொடுகு போன்ற பிரச்சனைகளிலும் இருந்து விடுபட உதவுகின்றது. இதனால் ஆரோக்கியமான தலைமுடிகள் வளருகின்றது.
4. வேர்களுக்கு ஊட்டச்சத்து தருகின்றது
வெங்காயம் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, வேர் பகுதிக்கு போதுமான சத்துக்கள் கிடைக்க உதவுகின்றது. இதனால மயிர்கால்களுக்கும் போதிய ஊட்டசத்து கிடைகின்றது. இது தலைமுடி நன்கு வளர ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
5. நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள்
Shutterstock
வெங்காயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது நோய் தாக்கத்தில் இருந்து தலைமுடி மற்றும் வேர் பகுதியை பாதுகாக்க உதவும். மேலும் வெங்காய சாறு மயிர்கால்கள் பலமாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவும். இதனால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.
6. ஆக்சிஜனேற்றம்
வெங்காயத்தில் அதிக அளவு பலவோனாயிட்ஸ் உள்ளது. இது அதிக அளவு ஆக்சிஜனேற்றத்தை தூண்டி, தலைமுடி நன்கு வளர உதவுகின்றது. இதனால் அடர்த்தியான கூந்தலைப் பெறலாம். குறிப்பாக இந்த பண்பு தலையில் வழுக்கை ஏற்படாமல் பாதுகாக்க உதவும். மேலும் சேதம் அடைந்த தலைமுடிகளை குணப்படுத்தவும் உதவும்.
7. அழற்சி எதிர்ப்பு பண்புகள்
வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது தலைமுடி நல்ல ஆரோகியதொடு வளர ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இது பொடுகு, பூஞ்சை போன்ற பிரச்சனைகளில் இருந்து தலைமுடியையும், வேர் பகுதியையும் பாதுகாக்க உதவும். மேலும் எரிச்சல் போன்ற பிரச்சனையும் தடுக்க உதவும்.
8. சேதமடைந்த முடிகளை பாதுகாத்து, இயற்கையான பலபலப்பைத் தரும்
வெங்காயத்தில் இருக்கும் சத்துக்கள், தலைமுடி இயற்கையாக பலபலப்பை பெற்று, நல்ல ஆரோக்கியமாகவும், நீண்டும் வளர உதவும். இது ஈரத்தன்மையை முடியினுள் தக்க வைத்துக் கொள்ள உதவும். மேலும் நல்ல மிருதுவான தோற்றத்தை முடிக்கு தரும்.
9. இளம் நரையை போக்கும்
Shutterstock
இன்று பல இளம் வயதினர்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய பிரச்சனையை இளம் நரை. இதனை போக்க வெங்காயம் பெரும் அளவு உதவுகின்றது. வெங்காயத்தில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் ப்ரீ ரடிகல்ஸ்களுக்கு எதிராக செயல்பட்டு, தலைமுடி கருமையாகவும், அதற்குரிய இயற்கையான நிறத்திலும் வளர உதவுகின்றது.
10. வலுவான பொடுகு எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள்
வெங்காயத்தில் இருந்து வரும் அடர்ந்த நாற்றம் ஒரு நல்ல பூஞ்சை எதிர்ப்பு சக்தியாக செயல்படுகின்றது. இதனால் பூஞ்சையால் ஏற்படும் நோய்களை, குறிப்பாக வேர் பகுதியில் ஏற்படும் நோய்களை போக்க இது உதவியாக உள்ளது. மேலும் பேன், ஈறு மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளிலும் இருந்து விடுபட இது உதவியாக உள்ளது.
11. சல்பர்
இது உதிர்ந்த தலைமுடி மீண்டும் நன்கு வளர உதவியாக உள்ளது. சல்பர் உடல் நலத்திற்கு மிகவும் தேவையான ஒரு பொருள். இது போதிய அளவு இருந்தால் மட்டுமே புரதம் மற்றும் நொதி உற்பத்தி உடலில் ஏற்படும். மேலும் சல்பர் தலைமுடியில் அதிக அளவு உள்ளதால், இதன் அளவு தலைமுடி வளர்ச்சிக்கு சீராக இருக்க வேண்டும். சல்பர் தலைமுடிக்கு நல்ல போஷாக்கு பெற உதவும்.
தலைமுடிக்கான வெங்காய பாக்(onion hair pack for hair growth)
1. வெங்காய சாறு
- தேவையான அளவு சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
- அதனை நன்கு அரைத்து சாரி பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்
- இந்த சாரை வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர் சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, பின் சியக்காய் தேய்த்து குளிர்ந்த தண்ணீரில் முடியை அலசி விட வேண்டும்
2. வெங்காய சாறு மற்றும் தேன்
Shutterstock
- தேவையான் ஆளவு வேகாததை எடுத்து நன்கு அரைத்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
- இந்த சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொள்ளவும்
- நன்கு கலந்த பின் தலைமுடியின் வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி விட வேண்டும்
- இப்படி வாரம் ஒரு முறையாவது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
3. வெங்காய சாறு தலைமுடி அலசுதல்
- தேவையான அளவு வெங்காயத்தை எடுத்துக் கொள்ளவும்
- இதனை பொடிப் பொடியான நறுக்கி தேவையான அளவு தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்
- பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, இந்த நீரை குளிர விட வேண்டும்
- இப்போது, சியக்காய் தேய்த்து தலைமுடியை அலசிய பின்னர், இந்த வெங்காய நீரை தலையில் ஊற்றி முடியை அலச வேண்டும்
- வெங்காய வாடையை போக்க, சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்துக் கொள்ளலாம்
- இப்படி வாரம் ஒரு முறையாவது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
4. ஆலிவ் எண்ணை மற்றும் வெங்காயம்
- தேவையான வெங்காயத்தை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
- இதனுடன் தேவையான அளவு ஆலிவ் எண்ணையை சேர்த்து பசை போல செய்து கொள்ளவும்
- இந்த பசியை தலைமுடியின் வேர் பகுதியில் நன்கு தேய்த்து, மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர் 2 மணி நேரம் வரை அப்படியே விட்டு விட்டு பின்னர் சியக்காய் தேய்த்து முடியை அலச வேண்டும்
- இப்படி வாரம் ஒரு முறையாவது செய்ய வேண்டும்
5. வெங்காயம் மற்றும் தேங்காய் எண்ணை
Shutterstock
- தேவையான அளவு வெங்காயம் எடுத்துக் கொள்ள வேண்டும்
- இதனை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- இதனுடன் தேவையான அளவு தேங்காய் எண்ணையை சேர்க்க வேண்டும்
- நன்கு இரண்டையும் கலக்கி தலையில் தடவ வேண்டும்
- பின்னர் மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
- சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில், சியக்காய் தேய்த்து முடியை அலச வேண்டும்
6. வெங்காயம் மற்றும் ஆமணக்கு எண்ணை
- தேவையான வெங்காயத்தை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- இதனுடன் தேவையான அளவு ஆமணக்கு எண்ணையை சேர்த்து கலந்து கொள்ளவும்
- இந்த கலவையை தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை நன்கு அலசி விட வேண்டும்
- இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்
7. வெங்காயம் மற்றும் முட்டை
- தேவையான வெங்காயத்தை எடுத்து நன்கு அரைத்துக் கொளல்வும்
- இதனுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- இப்போது இந்த கலவையை தலையின் வேர் பகுதியின் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- அப்படியே சிறிது நேரம் விட்டு விட்டு, குளிர்ந்த நீரில் சியக்காய் தேய்த்து முடியை அலச வேண்டும்
- இப்படி வாரம் ஒரு முறையாவது செய்ய வேண்டும்
8. வெங்காயம் மற்றும் இஞ்சி
Shutterstock
- தேவையான அளவு வெங்காயம் மற்றும் இஞ்சி இரண்டையும் எடுத்துக் கொள்ளவும்
- இரண்டையும் நன்கு அரைத்து பசை போல செய்து கொள்ளவும்
- இதனை தலையின் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர் சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, குளிர்ந்த நீரில் சியக்காய் தேய்த்து முடியை அலசி விட வேண்டும்
9. வெங்காயம் மற்றும் பூண்டு
- தேவையான அளவு வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்
- இந்த கலவையுடன் சிறிது தேங்காய் எண்ணையையும் சேர்த்துக் கொள்ளவும்
- பின்னர் தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முடியை சியக்காய் தேய்த்து அலசி விட வேண்டும்
10. வெங்காயம் மற்றும் எலுமிச்சைபழம்
- தேவையான வெங்காயத்தை எடுத்துக் கொள்ளவும்
- இதனுடன் எலுமிச்சை பழத்தை தோலுடன் பொடியாக நறுக்கி இரண்டையும் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- அரைத்த கலவையை தலையின் வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்யவும்
- பின்னர் சிறிது நேரம் கழித்து தலையை சியக்காய் தேய்த்து நன்கு அலசி விடவும்
- இப்படி வாரம் ஒரு முறையாவது செய்ய வேண்டும்
11. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம்
Shutterstock
- தேவையான அளவு வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளவும்
- இரண்டையும் நன்கு அரைத்து பசை போல எடுத்துக் கொள்ளவும்
- பின்னர் தலையின் நன்கு தேய்த்து மசாஜ் செய்யவும்
- சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முடியை சியக்காய் தேய்த்து அலசி விட வேண்டும்
12. வெங்காயம் மற்றும் மருதாணி
- தேவையான அளவு வெங்காயத்தை எடுத்துக் கொள்ளவும்
- தேவையான அளவு மருதாணி இலைகளை எடுத்துக் கொள்ளவும்
- இரண்டையும் நன்கு அரைத்து பசைபோல செய்து கொள்ளவும்
- மருதாணி பொடியையும் இலைக்கு பதிலாக பயன்படுத்தலாம்
- இந்த் கலவையை தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர் சிறிது நேரம் கழித்து தலைமுடியை நன்கு சியக்காய் தேய்த்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்
- இப்படி வாரம் இரண்டு அல்லது ஒரு முறையாவது செய்ய வேண்டும்
வெங்காயத்தாள் ஏற்படும் பாதிப்பு(Side effects)
- ஒரு சிலருக்கு வெங்காயம் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடக் கூடும்
- எரிச்சல், சிவந்தால் போன்ற பிரச்சனைகளை சருமத்திற்கு ஏற்படுத்தக் கூடும்
- சிறிதளவே வெங்காயத்தை பயன்படுத்த வேண்டும்
- கண்களில் வெங்காய சாறு பட்டால், எரிச்சலை உண்டாக்கக் கூடும்
கேள்வி பதில்கள்(FAQ)
1. தினமும் வெங்காயத்தை தலைக்கு பயன்படுத்தலாமா?
தினமும் பயன்படுத்தலாம். அப்படி செய்யும் போது இரண்டு வாரங்களில் புதிய தலைமுடிகள் வளருவதை நீங்கள் கவனிக்கலாம்.
2. எவ்வளவு நேரம் வெங்காய சாறை தலையில் தேய்த்து வைத்திருக்கலாம்?
2௦ நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கலாம். அப்படி செய்தால், வேர் பகுதியில் இருக்கும் புண், பொடுகு போன்றவற்றை இது போக்கி விடும்.
3. வெங்காயம் முடியை நரைக்க செய்திடுமா?
இல்லை. மாறாக வெங்காயம் நரைமுடியை போக்கவே உதவும். இதில் இருக்கும் சல்பர் முடி இளமையாக இருக்க உதவும்.
4. தேங்காய் எண்ணையோடு வெங்காயத்தை சேர்த்து பயன்படுத்தலாமா?
பயன்படுத்தலாம். இவை இரண்டுமே தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
5. இரவு முழுவதும் வெங்காய சாறை தலையில் தேய்த்து விட்டு விடலாமா?
அது உங்களுக்கு அசௌகரியத்தை தரக் கூடும். எனினும், பகல் நேரத்தில் அதிக நேரம் தலையில் வெங்காய சாறை தேய்த்து விட்டு விடலாம். இது தலைக்கு நல்ல போஷாக்கு கிடைக்க உதவும்.
6. வெங்காய சாறு தலைமுடியை பலபலப்பாக்குமா?
வெங்காய சாறுடன் ஆமணக்கு எண்ணை அல்லது தேங்காய் எண்ணையை சேர்த்து தேய்த்தால், நல்ல பலபலப்பை பெறலாம்.
7. முட்டையுடன் வெங்காய சாறை சேர்த்து பயன்படுத்தலாமா?
பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளை கருவுடன் வெங்காய சாறை அல்லது அரைத்த வெங்காயத்தை சேர்த்து பயன்படுத்தலாம். இது மேலும் நல்ல பலனைப் பெற உதவும்.
8. வெங்காயத்தை தலைமுடிக்கு பயன்படுத்தும் போது, முடி உதிர்வது இயல்பா?
புதிய முடி வளர்வதற்காக பலவீனமான மற்றும் சேதமடைந்த முடிகள் உதிரக் கூடும். எனினும், சில நாட்களிலேயே, வெங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது புதிய தலைமுடிகள் வளரத் தொடங்கி விடும்.
9. வெங்காய சாருடன் என்ன பொருட்களை சேர்க்கலாம்?
நல்ல ஆரோக்கியமான தலைமுடியைப் பெற, நீங்கள் வெங்காய சாருடன், எழுமிச்சைபழ சாறு, மருதாணி, கருவேப்பிள்ளை, முட்டை, போன்ற பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம்.
10. வெங்காய சாறை தேய்த்த பின் ஷாம்பூ பயன்படுத்தி முடியை அலசலாமா?
முடிந்த வரை இரசாயனம் கலந்த ஷாம்பூ பொருட்களை தவிர்ப்பது நல்லது. மாறாக சியக்காய் பயன்படுத்துவது மேலும் நல்ல பலனைப் பெற உதவும்.
மேலும் படிக்க – இயற்கையாக வெள்ளை முடியை போக்க சில எளிய குறிப்புகள்
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!