logo
ADVERTISEMENT
home / Celebrity Life
காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் நடிகை நயன்தாரா … வைரலாகும் புகைப்படங்கள்!

காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் நடிகை நயன்தாரா … வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்து இருந்தார். தற்போது இந்த திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பார் திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா தன்னுடைய பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தன்னுடைய காதலரான விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்றுள்ளனர். 

அங்கு புகழ்பெற்ற புரூக்ளின் பாலம் மீது நின்று அவர்கள் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். 

ADVERTISEMENT

instagram

இந்த வருடம் திருமணம் நடைபெறும் என்று கூட தகவல் வெளியானது. ஆனால் நடிகை நயன்தாரா தொடர்ந்து புதிய படங்களில் கமிட் ஆகிவருகிறார். இதனால் இந்த டிசம்பரில் நயன்தாரா நிச்சயமாகத் திருமணம் செய்துகொள்ளமாட்டார் என்று அவரது உதவியாளர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

அதுமட்டுமின்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் திருமண பந்தத்தை நோக்கிய எந்த முன்னெடுப்பையும் எடுத்ததாக தெரியவில்லை. இதற்கு இடையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’படத்தில் அதிகாரபூர்வமாக ஒப்பந்தமாகியிருக்கும் நயன்தாரா, ‘வலிமை’படத்தில் அஜீத்துடன் மீண்டும்  ஜோடி சேரப்போகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதனை உறுதி செய்யும் வகையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சந்தித்துள்ளனர். உடன் அவரது மகள் குஷி கபூரும் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது. ‘

ADVERTISEMENT

இதை வைத்து பார்க்கும் போது இயக்குநர் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் அஜித் நடிக்கும் வலிமை படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில்,  இப்படத்தில் நடிக்கும் நடிகை குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

instagram

ஆனால் போனிகபூர் கடந்த சில நாட்களாகவே நியூயார்க் நகரில் இருந்து வருகிறார். அவரது இரண்டாவது மகள் குஷி கபூர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் படித்து வருவதால் தன் மகளைப் பார்ப்பதற்காக போனிகபூர் அமெரிக்கா சென்றுள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து போனிகபூர் மற்றும் அவரது மகள் குஷி கபூரை சந்தித்து ஒன்றாக இணைந்து இரவு உணவில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 

நயன்தாரா தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் காதலருடன் நேரம் செலவிட அவ்வப்போது வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார். அங்கு அவர்கள் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                       

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
17 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT