மணமணக்கும் மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்யலாம் வாங்க !

மணமணக்கும் மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்யலாம் வாங்க !

மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்வது இத்தனை சுலபமா என்று நீங்களே வியப்பீர்கள். எலும்புக்கு ஆரோக்கியம் தரும் சூப்பை இன்றைக்கு செய்து சாப்பிட்டு பாருங்கள்.                                                                                 

 

Youtube

தேவையான பொருட்கள் :

மட்டன் நெஞ்செலும்பு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சீரகம், மிளகு - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - சிறிது
எண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்பொடி - சிறிது

இஞ்சி, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை.

 

Youtube

முதலில் மட்டன் நெஞ்செலும்பை (mutton bone) நன்றாக அலசி கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.

வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளியை நறுக்கி தனித்தனியே வைக்கவும்.

கொத்தமல்லி தழையை பொடியாக்கி தனியாக வைக்கவும்.

இஞ்சி மற்றும் சோம்பை லேசாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர் மிளகு சீரகம் தாளிக்கவும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி பச்சைமிளகாயை சேர்க்கவும்.                                                              

நன்றாக வதங்கியவுடன் நெஞ்செலும்பை சேர்க்கவும். பின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூளை போட்டு நன்றாக வதங்கியதும் 1 லிட்டர் நீர் ஊற்றி 6 விசிலுக்கு மிதமான வேகத்தில் வேக வைக்கவும். 

கடைசியாக இஞ்சி மற்றும் சோம்பை எண்ணெய்யில் தாளித்து கொதித்து கொண்டிருக்கும் சூப்பில் சேர்க்கவும். உடன் கொத்தமல்லி தழைகளை தூவி விட ஆரோக்கியமான மட்டன் நெஞ்செலும்பு சூப் தயார்.                         

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                          

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!