உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நற்பண்புகளோடு ஆலமரம்!

உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நற்பண்புகளோடு ஆலமரம்!

ஆலமரத்தை பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம். அரச மரம் மற்றும் ஆலமரம், இவை இரண்டிற்கும் எப்போதும் தனி சிறப்பு உண்டு. அதிலும், ஆயிரம் ஆண்டுகளையும் கடந்த சரித்திரத்தை கொண்ட பெருமை பல ஆலமரங்களுக்கு இன்றும் உண்டு.

பிற மரங்கள் போல், அல்லாமல் ஆலமரம் படர்ந்து, விழுதுகளோடு மிகப் பெரிய தோற்றத்தோடு வளருவது அதன் தனித்துவத்தை காட்டுகின்றது. மேலும், இந்த ஆலமரம் நிழல் தருவதோடும், பல பறவைகளுக்கு வசிப்பிடமாக இருப்பதோடும், இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களும் அடங்கி உள்ளது. ஆலமரத்தின் இல்லை, பழங்கள், மற்றும் மரப்பட்டை என்று அனைத்திலும், பல ஆரோக்கிய அற்போதங்கள் அடங்கி உள்ளது. இது உங்களுக்கு நிச்சயம் ஆச்சரியத்தை கொடுக்கும்.

வழக்கமான தகவல்களைத் தவிர, பல அறிய தகவல்களையும், பயன்களையும் (benefits) பற்றி நீங்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், இந்த சுவாரசியமான தொகுப்பை, தொடர்ந்து படியுங்கள்!

Table of Contents

  ஆலமரத்தை பற்றிய சுவாரசியமான தகவல்கள்(Facts about banyan tree)

  • ஒரு நன்கு படர்ந்து வளர்ந்த ஆலமரத்தின் கீழ் 10000க்கும் மேலான மக்கள் தங்கலாம்
  • இதன் நீண்ட மற்றும் கனத்தை கிளைகளை தாங்கி பிடிக்க விழுதுகள் உண்டாகின்றன
  • இது அத்தி மர வகையை சேர்ந்தது
  • இந்த மரம் உலகிலேயே மிக பெரிய மரம் என்ற பெயர் பெற்றது
  • அடையார் ஆலமரத்திற்கு பிறகு, ஆந்திர பிரதேஷில் இருக்கும் ஆலமரம் 1.9 ஹெக்டேர் பரப்பளவை கொண்டு, சுமார் 20000 மக்கள் தங்கும் அளவிற்கு படர்ந்து உள்ளது
  • பல வகை பறவைகள், வவ்வால், மற்றும் உயிரினங்களுக்கு இது ஒரு வசிப்பிடமாக உள்ளது
  • பல ஆயிரம் ஆண்டுகளாக, ஆலமரம், மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றது
  • இந்த மரம் இந்திய, பர்மா, தாய்லாந்த், மலேசிய மற்றும் தேன் சீன நாடுகளில் பெரும் அளவு வளர்கின்றன
  • இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பாலை உலோகங்களை மெருகேற்ற பயன்படுத்துவார்கள்
  • ஆலமரத்தின் பாலை சரும பிரச்சனைகளை குணப்படுத்த பயன்படுத்துவார்கள்
  • இதன் இலைகள் அரிப்பு, தடிப்பு மற்றும் பிற சரும பிரச்சனைகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது

  ஆலமர பழத்தில் நிறைந்திருக்கும் சத்துக்கள்(Bayan Fruit Nutritional Value)

  Shutterstock

  ஆலமரத்தின் பழங்கள், அத்திப்பழத்தை போல இருக்கும். எனினும், இந்த பழத்தின் பயன்பாட்டுகளை பற்றி இன்று பெரும்பாலான மக்கள் அறியவில்லை.

  1௦௦ கிராம் ஆலமர பழத்தில் நிறைந்திருக்கும் சத்துகளை பற்றிய விவரங்கள்:

  1. சக்தி 250 கிலோகலோரி
  2. கார்போஹைட்ரேட் 63.87 கிராம்
  3. சர்க்கரை 47.92 கிராம்
  4. நார் 9.8 கிராம்
  5. கொழுப்பு 0.93 கிராம்
  6. புரதம் 3.30 கிராம்
  7. தியாமின் - வைட்டமின் பி 1 0.085 மிகி
  8. நியாசின் - வைட்டமின் பி 3  0.619 மி.கி.
  9. ரிபோஃப்ளேவின் - வைட்டமின் பி 2 0.082 மி.கி.
  10. பாந்தோத்தேனிக் அமிலம் - வைட்டமின் பி 5 0.434 மி.கி.
  11. வைட்டமின் பி 6 0.106 மி.கி.
  12. மெக்னீசியம் 68 மி.கி.
  13. ஃபோலேட் - வைட்டமின் பி 9 9µg
  14. வைட்டமின் சி 1.2 மி.கி.
  15. வைட்டமின் ஏ 142 IU
  16. வைட்டமின் ஈ 0.11 மி.கி.
  17. வைட்டமின் கே 4.7µg
  18. துத்தநாகம் 0.55 மி.கி.
  19. கால்சியம் 162 மி.கி.
  20. இரும்பு 2.03 மி.கி.
  21. பாஸ்பர் 67 மி.கி.
  22. பொட்டாசியம் 680 மி.கி.

  ஆலமரத்திலிருந்து கிடைக்கும் உடல் நலப் பலன்கள்(Health Benefits of Banyan tree)

  ஆலமர பழங்களும், இலைகளும், மற்றும் பட்டைகளும், எப்படி உடல் நலத்தைப் பெற உதவுகின்றது, என்று இங்கே பார்க்கலாம்.

  1. இருதய நோயை தடுக்கும்

  இருதய நோய் குறிப்பாக இருதயத்தில் இருக்கும் இரத்த குழாயில் கொழுப்பு சத்து அடைத்துள்ளதால் அதிக அளவு ஏற்படுகின்றது. மேலும் உடலில் சோடியம் அளவு அதிகரித்தாலும், இந்த பிரச்சனை ஏற்படும்.  இதனால் உடலுக்கு சீரான இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. எனினும், ஆலமரத்தின் பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால், இது சோடியத்தின் அளவை குறைக்க உதவுகின்றது. மேலும் இந்த பழத்தில், மக்னீசியம், பஸ்பர், ஒமேக 3 மற்றும் 6 இருப்பதால், இருதய நோய் ஏற்படும் வாய்ப்பை பெரும் அளவு குறைகின்றது.

  2. உடல் எடையை குறைக்கும்

  Pexels

  இரவு தூங்க செல்லும் முன் ஆலமர பழத்தின் சாரை பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீரான அளவை பெரும். இதனால் உடல் பருமன் மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளை தடுக்கலாம். இது உடலில் கொழுப்பு சேருவதையும் குறைக்க உதவும். எனினும், இந்த பழச்சாறை சர்க்கரை மற்றும் பால் சேர்க்காமலும் அருந்தலாம்.

  3. சீரான ஜீரணம்

  ஆலமர பழம் ஒரு நல்ல மலமிலக்கியாக செயல்படுகின்றது. இதில் அதிக அளவு நார் சத்து இருப்பதால், வயிற்றில் எந்த வித ஜீரண பிரச்சனை இருந்தாலும், அதனை உடனடியாக குணப்படுத்த இது உதவியாக உள்ளது. மேலும் மல சிக்கல் போன்ற பிரச்சனைகள், இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடும் போது குணமடைகின்றது.

  4. புற்றுநோயை தடுக்கும்

  ஆலமரப் பழத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின் சத்துக்கள், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை பெரும் அளவு தடுக்கின்றது. இது அணுக்களை பாதிக்கும் ப்ரீ ராடிகல்ஸ்கலை தடுத்து, அணுக்கள் நல்ல வளர்ச்சியைப் பெற உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் ப்ரீ ரடிகல்ஸ்கலை எதிர்த்து செயல்படுகின்றது.

  5. நல்ல கண் பார்வை

  இந்த பழத்தை தினமும் எடுத்துக் கொண்டு வந்தால், குறிப்பாக வயதாகும் போது ஏற்படும் கண் பார்வை பிரச்சனைகளை தடுக்கலாம். இந்த பழத்தில் அதிக அளவு வைட்டமின் ஏ, சி மற்றும் இ நிறைந்துள்ளது. இவை நல்ல கண் பார்வைக்கு இன்றியமையாதது.

  6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

  Pexels

  ஆலமரப் பழத்தில் இருக்கும் ஃபிளாவனாய்டு, பாலிபினால் மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை பெரும் அளவு அதிகரிக்க உதவுகின்றது, இதனால் எந்த விதமான நோய்களையும் எதிர்த்து போராட உடல் சக்திப் பெறுகின்றது.

  7. சுவாச பிரச்சனைகளை குறைக்கும்

  சுவாச பிரச்சனை பெரும்பாலும், ஆஸ்த்மாவின் அறிகுறியாகவே இருக்கும். இது சுவாச அமைப்பில் ஏற்படும் சில பிரச்சனைகளாலும், நோய் தோற்றாலும் ஏற்படுகின்றது. எனினும், ஆலமரப் பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும் போது, சுவாச பிரச்சனைகள் குறையத் தொடங்கும். இந்த பழத்தில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் நோயின் தாக்கத்தை குறைக்க உதவுகின்றது. மேலும் இது வறண்ட தொண்டை போன்ற பிரச்சனைகளையும் போக்க உதவுகின்றது.

  8. நச்சை வெளியேற்றுகின்றது

  உடலில் இருக்கும் நச்சுகளை ஆலமரப் பழம் வேலியற்ற உதவுகின்றது. இதனால் குறிப்பாக குடலில் தேங்கி இருக்கும் நச்சுகள் வெளியேற்றப் படுகின்றது. இது ஜீரணத்தை சீர் செய்யவும் பெரிதும் உதவுகின்றது. மேலும் கல்லீரல் மற்றும் சிருநீரகதிற்கும் இது உதவியாக இருகின்றது.

  9. எலும்புகளை பலப்படுத்தும்

  எலும்புகள் தேய்வதில் இருந்து பாதுகாக்க ஆலமரப் பழம் உதவுகின்றது. ஆலமரப் பழத்தில் அதிக அளவு கால்சியம் உள்ளது. மேலும் இதில் பொஸ்பரஸ் சத்தும் நிறைந்து இருகின்றது. இவ்விரண்டும் எலும்புகள் பலம் பெற்று, நல்ல ஆரோகியதோடு இருக்க உதவுகின்றது. மேலும் பற்களும் பலம் பெறுகின்றது.

  10. நீரழிவு நோயை தடுகின்றது

  Pexels

  ஆலமரப் பழம் ஒரு இயற்க்கை இனிப்பூட்டான். எனினு, இதில் இருக்கும் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் வெள்ளை சர்க்கரை போன்று ஆபத்தானது அல்ல. அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து விடும் என்கின்ற பயம் தேவை இல்லை. மேலும் இதில் இருக்கும் நார் மற்றும் கார்போஹைட்ரெட் சத்துக்கள் சர்க்கரை எளிதாக உடலில் சார உதவுகின்றது. இதனால், பெரும் அளவு நீரழிவு நோய் உண்டாகும் வாய்ப்புகள் குறைகின்றது.

  11. சீறுநீரக கல்லை போக்குகின்றது

  ஆலமரப் பழத்தில் டையுரிடிக் பண்புகள் உள்ளன. இது சிறுநீரகத்தில் கல் உண்டாவதை தடுக்க உதவும். ஆலமரப் பழத்தை தினமும் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்சனைகளை தடுக்கலாம்.

  12. உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

  ஆலமரப் பழம் நல்ல உடல் வாகைப் பெறவும், ஆரோக்கியத்தோடு இருக்கவும் உதவுகின்றது. இந்த பழத்தை தண்ணீரில் கொதிக்க விட்டு அந்த நீரை அருந்தி வந்தால், நல்ல ஆரோக்கியத்தை நிச்சயம் பெறலாம்.

  13. அல்சைமரை தடுக்கும்

  ஆலமரப் பழத்தில் வைட்டமின் பி 6 நிறைந்துள்ளது. இது மூளையின் நினைவாற்றளையும், கவனத்தை அதிகரிக்கும் திறனையும் அதிகப்படுத்துகின்றது. இதனால் அல்சைமர் நோய் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் பல மூளை சம்பந்தமான நோய்களை தடுக்கலாம்.

  14. கொழுப்பை குறைக்கும்

  Pexels

  இந்த பழத்தில் இருக்கும் பெக்டின், அதாவது நார் சத்து உடலில் கொழுப்பு சத்து தேங்குவதை தடுத்து, வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற உதவியாக இருகின்றது. இதனால், தேவையற்ற கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்ற இது பெரிதும் உதவுகின்றது.

  15. தூக்கமின்மையை போக்கும்

  அதிக அளவு காபின் எடுத்துக் கொள்வதாலும், மன அழுத்தம் அதிகமாக இருப்பதாலும், பெரும்பாலாநோர்களுக்கு சரியாக தூக்கம் வருவதில்லை. ஆனால் இந்த பிரச்சனையை போக்க ஆலமரப் பழம் உதவியாக உள்ளது. இதில் இருக்கும் டிரிப்தோபன் மனதை அமைதிப் படுத்தி, சௌகரியமாக உணரச் செய்கின்றது. இது நல்ல தூக்கத்தைப் பெற பெரிதும் உதவியாக இருகின்றது.

  16. இரத்த சோகையை போக்கும்

  ஆலமர பழம், இரத்த சோகையை போக்க உதவியாக இருகின்றது. இது ஹீமோக்ளோபின் அளவை இரத்தத்தில் சீர் செய்ய உதவுகின்றது. மேலும் இந்த பழத்தில் இரும்பு சத்தும் அதிக அளவு உள்ளது. இது இரத்த சோகையை போக்க ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

  17. மூல நோயை எதிர்த்து போராட உதவுகின்றது

  ஆலமரப் பழம், மூல நோயை எளிதாக போக்குகின்றது. இதில் அதிக அளவில் இருக்கும் ப்லவோனிட் மூல நோய் அதிகமாகாமல் தடுக்க உதவுகின்றது.

  18. இளமையாக இருக்க உதவுகின்றது

  Pexels

  இந்த பழத்தில் அதிக அளவு ஆக்சிஜனேற்றம் இருப்பதால், இது வயது முதிர்வை தடுத்து, இளமையாக இருக்க உதவுகின்றது. இந்த பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்கள் நல்ல ஆரோகியதோடும், இளமையான தோற்றத்தோடும் இருப்பார்கள்.

  19. சருமத்தில் ஈரத்தன்மையை அதிகரிக்கும்

  ஆலமரப் பழத்தில் அதிக அளவு நீர் சத்து நிறைந்துள்ளது. இது உடலில் இருக்கும் நச்சை குறைத்து உடல் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்க உதவுகின்றது. இதன் காரணமாகவே சருமமும் பலபலப்பைப் பெறுகின்றது. நல்ல முக அழகைப் பெற இந்த பழத்தை பேஸ் பாக்காக பயன்படுத்தலாம்.

  20. காயங்களை குணப்படுத்தும்

  ஆலமரப் பழத்தில் பக்டீரியாவை எதிர்த்து போராடும் பண்புகள் அதிகம் உள்ளது. இதனால் சருமத்தில் ஏற்படும் எந்த விதமான காயங்களாக இருந்தாலும், அதனை எளிதாகவும், விரைவாகவும் குணப்படுத்தி விடுகின்றது.

  21. சருமத்தை மிருதுவாக்கும்

  இந்த பழத்தில் அதிக அளவு ஆக்சிஜனேற்றம் மற்றும் வைட்டமின் சி உள்ளதால், அது சருமம் மிருதுவாக இருக்க உதவும். மேலும் இது சருமத்தில் இருக்கும் அணுக்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகின்றது.

  22. சருமத்தை சுத்தம் செய்யும்

  Pexels

  இந்த பழத்தில் இருக்கும் pH சருமத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் தூசிகளை அகற்ற உதவுகின்றது. மேலும் சருமத்தில் இருக்கும் துளைகளையும் இது சுத்தம் செய்கின்றது. இதனால் தெளிவான சருமம் கிடைகின்றது.

  23. தலைமுடி வளர்ச்சி

  இந்த பழத்தில் மக்னேசியம், வைட்டமின் ஏ, சி மற்றும் இ நிறைந்திருப்பதால், தலைமுடி வேர்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்க உதவியாக இருகின்றது. இதனால் தலைமுடி வளர்ச்சி அதிகப்படுத்தப்படுகின்றது.

  24. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது

  இந்த பழத்தில் இருக்கும் அதிக நன்மை தரக்கூடிய சத்துக்கள், குறிப்பாக போலேட், புரதம், நார், கால்சியம் மற்றும் இயற்க்கை தாது சத்துக்கள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாக உள்ளத். மேலும் இதில் ஜின்க் சத்தும் இருப்பதால், கற்பத்தில் இருக்கும் குழந்தை நல்ல வளர்ச்சியைப் பெற உதவியாக உள்ளது.

  25. வயிற்று போக்கு

  ஆலமரப் பழத்திற்கு வயிற்று போக்கு, வாயு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை போக்கும் பண்புகள் உள்ளன. இந்த பழத்தை வெள்ளத்தோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், குடல் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

  26. பற்கள் மற்றும் ஈர்கள்

  Pexels

  ஈர், பற்களின் வேர், பற்கள், போன்றவற்றை ஆலமரப் பழம் பாதுகாக்க உதவுகின்றது. குறிப்பாக பற்கள் சோத்தையாவது, ஈர்களில் இருந்து இரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளை போக்க இது உதவியாக உள்ளது.

  27. மலட்டுத்தன்மையை போக்கும்

  இந்த பழம் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் இருக்கும் மலட்டுத் தன்மையை போக்கி, கரு உண்டாக உதவியாக இருக்கும்.

  28. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு

  இந்த பழம் பூஞ்சை மற்றும் பக்டீரியாவை கட்டுப்படுத்த உதவுகின்றது. இதனால் உடலில் ஏற்படக் கூடிய பெரும் அளவான பிரச்சனைகளை குணப்படுத்த உதவியாக இருகின்றது.

  இங்கே பட்டியலிடப்பட்டுள்ள உடல் நலன்கள் மட்டுமின்றி, ஆலமரப் பழம், வாந்தி, மூலம், மயக்கம், காது வலி, இடுப்பு மற்றும் முதுகுத் தண்டு வலி,  போன்ற பிரச்சனைகளையும் போக்க உதவியாக உள்ளது.

  ஆலமரத்தை எப்படி பயன்படுத்துவது ? (use banyan tree for health benefits)

  ஆலமரத்தின் பல நன்மைகளை பற்றி பார்த்தோம், இப்போது, ஆலமர காய், பழம், இலை, மற்றும் பூக்களை எப்படி பயன்படுத்தி, பல பலன்களைப் பெறுவது என்று இங்கே பார்க்கலாம்:

  1. முகப் பொலிவுக்கு

  Pexels

  • 5 ஆலமர இலைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் சிறிது பச்சை அரிசி மாவை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும்
  • பச்சை அல்லது மஞ்சள் பழுப்பு இலைகளை பயன்படுத்தலாம்
  • இதனுடன் தாமரை இதழ்கள், குங்குமப்பூ மற்றும் ஆலமர பூக்களையும் சேர்த்து பயன்படுத்தலாம்
  • சருமம் நல்ல பலபலப்பையும், பொலிவையும் பெரும்

  2. காதில் இருக்கும் பிரச்சனைகள்

  • சிறிதளவு ஆலமரப் பாலை எடுத்துக் கொள்ளவும்
  • இதனை கடுகு எண்ணையோடு கலந்து கொளவும்
  • இந்த கலவையை காதுகளில் 2 சொட்டு விட்டு விட வேண்டும்
  • இப்படி செய்தால், காதில் இருக்கும் பிரச்சனைகள் அகலும்

  3. தலைமுடி வளர்ச்சி பெற

  • தேவைப்படும் அளவு ஆலமர இலை சாம்பலை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் சிறிது தேங்காய் எண்ணை சேர்த்துக் கொள்ளவும்
  • இந்த கலவையை தலையில் நன்கு தேய்த்தால், முடி உதிர்வு மற்றும் வழுக்கை போன்ற பிரச்சனைகள் நின்று, நல்ல முடி வளர்ச்சி ஏற்படும்
  • அல்லது, ஆலமர இலைகளை நன்கு பொடி செய்து கொண்டு, தேங்காய் எண்ணையில் கலந்து மிதமாக சூடு செய்து பின்னர் தலையில் தேய்க்கலாம்
  • இது நல்ல பலனைத் தரும்

  4. நாசி பிரச்சனை

  Pexels

  • மூக்கடைப்பு அல்லது வேறு ஏதாவது நாசி பிரச்சனை இருந்தால், இது நல்ல பலனைத் தரும்
  • சிறிது ஆலமர வேரின் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இதனை மோரில் கலந்து அருந்த வேண்டும்
  • இப்படி செய்தால், நாசியில் இருக்கும் பிரச்சனை நீங்கும்

  5. பல் பிரச்சனை

  • ஆலமர பட்டையை சிறிது எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் மிளகு சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்
  • இந்த பொடியை பல்லில் தேய்த்து விளக்க வேண்டும்
  • மேலும் ஆலமரத்தின் பாலையும் பற்களில் தேய்த்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்
  • ஈறுகளில் வலி, பல் வலி, இரத்தம் வருவது, துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் அகலும்

   

  6. அடிக்கடி சிறுநீர் கழிப்பதை குணப்படுத்த

  • ஆலமர விதிகளை நன்கு பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இந்த பொடியை தினமும் இரண்டு முறை பாலில் கலந்து அருந்த வேண்டும்
  • இப்படி செய்து வர, இந்த பிரச்சனை குறையும்

  7. நீரழிவு நோயை குணப்படுத்த

  Pexels

  • ஆலமர பட்டை மற்றும் வேரை நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்
  • இந்த பொடியை அரை லிட்டர் தண்ணீரில் 2௦ கிராம் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்
  • பின்னர் இந்த நீர் குளிர்ந்த பின் தினமும் காலை மற்றும் மாலையில் அருந்தி வர வேண்டும்
  • இப்படி ஒரு மாதம் செய்து வந்தால், நீரழிவு நோய் குணமாகும்

  8. வயிற்று போக்கு

  • 6 கிராம் ஆலமர பூ மொட்டுகளை எடுத்து 1௦௦ மில்லி லிட்டர் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்
  • இந்த தண்ணீரை இறக்கி, வடிகட்டி, இதனுடன் தேர்ந் சேர்த்து அருந்த வேண்டும்
  • இந்த பூ மொட்டுகளை மோரிலும் கலந்து அருந்தலாம்
  • வயிற்று போக்கு உடனடியாக நிற்கும்

  9. குமட்டலை போக்கும்

  • 2௦ கிராம் ஆலமர இலைகளை எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் 7 கிராம்பு சேர்த்து நன்கு தண்ணீர் விட்டு அரைத்து, பின்னர் வடிகட்டி இந்த நீரை அருந்தவும்
  • இது நல்ல நிவாரணத்தை கொடுக்கும்

  10. சிறுநீரக பிரச்சனைகளை போக்கும்

  Pexels

  • சிறிது ஆலமர பட்டையின் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் தேவைப்படும் அளவு நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • இதனை தண்ணீரில் கலந்து அருந்த வேண்டும்
  • அல்லது சிறிது ஆலமர வேர் பொடியை எடுத்து தண்ணீரில் கலந்து அருந்தலாம்
  • சிறுநீரகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் இது போக்க உதவும்

  11. கண் வீக்கம்

  • 1௦ மில்லி லிட்டர் ஆலமர பால் எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும்
  • இதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும்
  • இந்த கலவையை கண்களை சுற்றி தேய்க்க வேண்டும்
  • இது கண்களில் இருக்கும் பிரச்சைகளை போக்க பெரிதும் உதவும்

  12. வயிற்று புண்

  • இளம் இலைகள் மற்றும் மொட்டுகளை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • இதனை தண்ணீரில் கலக்கி வாடி கட்டி அந்த நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் தேவைப்படும் அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • பின்னர் இதனை நன்கு கொதிக்க விட வேண்டும்
  • இந்த கலவையை தினமும் வயிற்றில் தடவி வர வயிற்றில் இருக்கும் புண் குணமாகும்

  13. எரிச்சலை போக்கும்

  Pexels

  • ஆலமர பூ மொட்டுகள் அல்லது இளம் இலைகளை அரைத்து அதனுடன் சிறிது தயிர் சேர்க்க வேண்டும்
  • பின்னர் நன்கு கலந்து, அந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்க வேண்டும்
  • இது உடனடி நிவாரணத்தை கொடுக்கும்

  14. அரிப்பை போக்கும்

  • தேவையான அளவு ஆலமர இலைகளை எடுத்து ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும்
  • அடுத்த நாள் காலையில் அந்த நீரை நன்கு நான்கில் ஒரு பங்கு வற்றும் வரை கொதிக்க விட வேண்டும்
  • பின்னர் இதனுடன் கடுகு எண்ணை சேர்க்க வேண்டும்
  • எண்ணையை சேர்த்த பின், மேலும் எண்ணை மட்டும் இருக்கும் வரை நன்கு நீர் வற்ற கொதிக்க விட வேண்டும்
  • இந்த காய்ச்சிய எண்ணையை வாடி கட்டி எடுத்துக் கொள்ளவும்
  • பின்னர் பாதிக்கப்பட்டிருக்கும் இடத்தில் தேய்த்து வர, வறண்ட சருமம் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் அகலும்

  15. இரத்த கசிவை நிறுத்த

  • சிறிது ஆலமர மொட்டுகள் அல்லது இளம் இலைகளாய் எடுத்துக் கொள்ளவும்
  • இதனை நன்கு அரைத்து இதனுடன் தேன் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்

  ஆலமர பழத்திள் எச்சரிக்கைகள்(Cautions of Banyan Tree Fruit)

  • தினமும் 40 கிராம் ஆலமர பழத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது
  • இந்த பழத்தில் அதிக நார் சத்து இருப்பதால், மிக அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது, சில அசௌகரியத்தை வயிற்றுக்கு தரக் கூடும்
  • அதிக அளவு ஆலமரப் பழத்தை உட்கொள்ளும் போது ஜீரண அமைப்பு பாதிக்கக் கூடும்
  • அதிக அளவு ஆலமரப் பழத்தை எடுத்துக் கொண்டால் சருமம் சூரிய கதிர்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது

  கேள்வி பதில்கள் (FAQ)

  1. ஆலமரம் எப்படி மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருகின்றது?

  ஆலமரம் நல்ல நிழல் தருவதோடு, அதன் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக உள்ளது. விதை, பூ, மொட்டு, இலைகள், பட்டை, வேர் என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக உள்ளது. சரியான முறையில் பயன்படுத்தும் போது பல நன்மைகளைப் பெறலாம்.

  2. ஆலமரத்தின் தனித்துவம் என்ன?

  இந்த மரம் விதையில் இருந்து தளிர்த்து வளர்கின்றது. இதற்கு விழுதுகள் உள்ளன. இந்த விழுதுகள் நன்கு நீண்டு படரும் கிளைக்கு ஊன்றுகோலாக இருந்து, பிற்காலத்தில் அது ஒரு மரமாகவும் மாறி விடுகின்றது. இது மிகப் பெரிய அளவு படர்ந்து ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து வாழக்கூடிய மரமாகும்.

  3. ஆலமரப் பழத்தை உண்ணலாமா?

  இது (banyan tree fruit) அத்திப் பழத்தைப் போல இருக்கும். மேலும் இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் இந்த பலன்களை அனைவரும் உண்ணலாம்.

  4. ஆலமரம் அத்திமரம் போன்றதா?

  ஆலமரத்தின் விதை அல்லது கொட்டை வேறு ஒரு மரத்தை அண்டி முளைக்கக் கூடியது. பெரும்பாலும் கட்டிடங்களுக்கு இடையில் இதனை காணலாம். மேலும் இதன் வேர்கள் கிளைகளில் இருந்து விழுதுகளாக மண்ணை நோக்கி செல்லும்.

  5. ஆலமரத்தின் முக்கியத்துவம் என்ன?

  இந்த மரம் பல ஆயிரம் ஆண்டு காலமாக மக்களால் மருத்துவம் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது பல ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து தன்னுள் ஒரு மிகப் பெரிய சரித்திரத்தைக் கொண்டு வால்கின்றது. கடவுள் வழிபாட்டிற்கும் இந்த மரத்திற்கும் பெரிய தொடர்பு உள்ளது.

  6. ஆலமரம் நீரை உற்பத்தி செய்யுமா?

  பிற மரங்கள் போல இல்லாமல், ஆலமரம் நிலத்தடி நீரை தக்க வைத்துக் கொள்ள உதவும். அதிக அளவு ஆலமரத்தை ஒரு நிலப்பரப்பில் வளர்க்கும் போது, அந்த பகுதியில் நிலத்தடி நீரின் அளவு மிக அதிகமாகவும், தெளிவான நீராகவும் இருக்கும்.

  7. ஆலமரத்தின் பலன்கள் எப்படி இருக்கும்?

  இந்த மரத்தின் பழங்கள் சிறிய அத்திப்பழத்தை போல இருக்கும். இந்த பலன்கள் இனிப்பாகவும், சுவையாகவும். சிவந்த நிறத்தில் மிருதுவாக இருக்கும்.

   

  மேலும் படிக்க - மகத்துவம் நிறைந்த கரிசலாங்கண்ணி மூலிகையின் ஆரோக்கிய மற்றும் கூந்தல் வளர்ச்சி நன்மைகள்!

  பட ஆதாரம்  - Shutterstock 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!