இரண்டாவது திருமணத்தை இனிதே முடித்தார் மைனா நந்தினி - புகைப்படங்கள்

இரண்டாவது திருமணத்தை இனிதே முடித்தார் மைனா நந்தினி - புகைப்படங்கள்

சரவணன் மீனாட்சி தொடரில் ரக்ஷிதாவின் தோழியாக அறிமுகமானவர் மைனா நந்தினி. இவரது படபடப்பாக நகைச்சுவை பேச்சு அனைவரையும் கவரவே தற்போது பலர் இவரது நடிப்பிற்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.                                                                      

அவசரமாக செய்த முதல் திருமணம் தோல்வியில் முடிவடைந்த போதும் தன்னுடைய நகைச்சுவை திறமையை விட்டு கொடுக்காமல் மிக தைரியமான பெண்ணாகவே இருந்தார் மைனா நந்தினி (maina nandhini). கணவர் தற்கொலை செய்து இறந்த சில மாதங்களிலேயே அதிலிருந்து மீண்டார்.                                                              

Youtube

மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். மீடியாக்கள் மற்றவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் வழக்கம் போல தன்னுடைய சந்தோஷமான முகத்தையே அனைவரிடமும் காட்டி வந்தார். அதனோடு உடன் நடிக்கும் நடிகர் யோகேஷ் மீது நெருக்கம் காட்டினார்.

அதனை விடீயோக்களாக வெளியிட்டு டப்ஸ்மேஷ் செய்து தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இதனை அடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் எழுந்தன. அதை பற்றி எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து வந்தார் மைனா நந்தினி .

View this post on Instagram

Congrats @yogeshwaram_official @myna_nandhu #Happymarriedlife

A post shared by Tamil Serials (@tamilserialsexpress) on

தற்போது அந்த வதந்திகள் உண்மை என்பது போல இவர்கள் இருவருக்கும் தற்போது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இதனை அடுத்து வரவேற்பும் சக நடிகர்களுடன் பிரம்மாண்டமான முறையில் மிக சந்தோஷமாக நடந்து முடிந்திருக்கிறது.

இரண்டாவது திருமணம் என்றாலும் அதனை சிறப்பாக நடத்தி தன்னுடைய அடுத்த வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கும் மைனா நந்தினி அவர் போன்ற பல பெண்களின் வேதனையான வாழ்விற்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்கிறார். வாழ்த்துக்கள்.

View this post on Instagram

Congrats @yogeshwaram_official @myna_nandhu #Happymarriedlife

A post shared by Tamil Serials (@tamilserialsexpress) on

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                       

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!