சாக்ஷிக்கு ஏற்ற கணவராக நடக்கிறேன்.. ஆம்.. சரி.. இதுவே சாக்ஷிக்கு பிடித்த வார்த்தைகள்-தோனி

சாக்ஷிக்கு ஏற்ற கணவராக நடக்கிறேன்.. ஆம்.. சரி.. இதுவே சாக்ஷிக்கு பிடித்த வார்த்தைகள்-தோனி

கிரிக்கெட் சிங்கம் தோனியை பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் பொக்கிஷம் இவர்தான் அல்லவா. தன்னுடைய கடினமான உழைப்பாலும் திட்டமிடுதல்களாலும் வெற்றிக்கோப்பையை இந்தியாவிற்கு பரிசாக்கியவர் தல மஹேந்திர சிங் தோனி.                                                    

இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வெற்றி பெற்றது. இந்நிலையில் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி சிங்கம் தோனி யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறி இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு வரை எல்லா ஆண்களுமே சிங்கம் தான் என்று தோனி கூறியிருக்கிறார்.

 

Youtube

அப்படியானால் திருமணத்திற்கு பிறகு.. இதனை அவரே சிரித்தபடி கூறுகிறார். 2010ல் எனக்கும் சாக்ஷிக்கும் திருமணம் ஆனது. அன்று முதல் அவருக்கு ஏற்ற கணவராகவே வாழ்ந்து வருகிறேன். வீட்டின் முழு நிர்வாகத்தையும் அவர்தான் பார்த்துக் கொள்கிறார். ஆகவே அவரை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது.

அவர் செய்யும் செயல்களுக்கு எல்லாம் நான் ஆம் சரி என்று சொன்னால்தான் அவர் சந்தோஷமாக இருப்பார். ஆகவே அதனையே நான் சொல்கிறேன். திருமணத்திற்கு முன்பு வரை எல்லா ஆண்களுமே சிங்கம் போலத்தான் இருப்பார்கள். அதன் பின்னர் எல்லாம் மாறி விடும் என்று கூறியிருக்கிறார் சிஎஸ்கே (csk) சிங்கம் தோனி.                                                             

Youtube

தல தோனிக்கே இந்த நிலைமை என்றால் நாமெல்லாம் பரவாயில்ல போல என்று சிங்கிள்கள் சந்தோஷமாக கூறி வருகிறார்கள். உண்மையில் மனைவி சந்தோஷத்துக்காக அவருக்கு பிடித்ததை செய்யும் மகேந்திர சிங் தோனி (mahendra singh dhoni) கிரிக்கெட்டில் மட்டும் அல்ல.. மனைவி சாக்ஷி இதயத்திலும் எப்போதும் கிங் தான்.                                                    

Youtube
Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                          

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!