உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் சில பழமொழிகள் (List Of Tamil Proverbs In Tamil)

உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் சில பழமொழிகள் (List Of Tamil Proverbs In Tamil)

நாம் நம் அன்றாட வாழ்க்கையில் பெரியவர்களும், மற்றவர்களும் அடிக்கடி ஏதாவது ஒரு பழமொழியை உதாரணமாக கூரிக்கொண்டிருப்பதை பார்த்திருப்போம். இந்த பழமொழிகள் பேச்சு வாக்கில் சுவரசியதிர்க்காக மட்டும் பயன்படுத்தப்படுபவை அல்ல, அவற்றுள் எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன. இன்னும், கூறப்போனால், பழமொழியை (proverb) நன்கு புரிந்து கண்டு ஒருவர் தன் வாழ்க்கையில் அதனை பின்பற்ற எண்ணினால், நிச்சயம் நல்ல நெறிகளோடு வாழ ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மேலும் சில புதுமையான பழமொழிகளை (tamil pazhamozhi) தெரிந்து கொள்ளவும், இங்கே உங்களுக்காக ஒரு சுவாரசியமான தொகுப்பு!

Table of Contents

  பொதுவான தமிழ் பழமொழிகள் (Common Tamil Proverbs)

  1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
  கருகு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதில் இருக்கும் காரம் குறையாது. அதன் பலன் என்னவோ அதை குறையாமல் தரும். அது போன்றே, யாரையும் சிறியவன் என எண்ணி ஒதுக்கிவிடக் கூடாது. அவராலும் பல நேரங்களில் மிகுந்த பலன் கிடைக்கலாம்.

  2. ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்
  ஒரு விடயத்தை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பார்த்த பின்னரே செய்யத் தொடங்க வேண்டும். அப்படி செய்யாமல் தொடங்கினால் அது மிகுந்த துயரத்தை கொடுத்து விடக் கூடும்.

  3. ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்
  பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்கு செய்யும் போது அவரால் எதிர்த்து போராட முடியாமல் மனம் நொந்து அழ நேரிடும். அப்படி மனம் நொந்து அழுத கண்ணீர் தீங்கிழைத்தவர் எப்படிப்பட்டவர் இருந்தாலும், அது அவரை நிச்சயம் அழித்து விடும்.

  4. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்
  வைக்கோல் போன்றவற்றை ஒன்றாக கூட்டி வைத்திருப்பதை ‘வைக்கோல் போர்’ அலல்து போர் கூறுவார்கள். அப்படி சேர்த்து வைத்திருக்கும் வைக்கோலில் சிறு நெருப்பு பட்டாலும் நன்கு காய்ந்து இருக்கும் போர் எளிதில் நெருப்பு பிடித்து விடும். அப்படி பற்றிய தீயை அணைக்க வேண்டும் என்றால் அதை கடுகளவும் மிச்சம் வைக்காமல் அணைத்துவிட வேண்டும். இல்லையென்றால், தீ மறுபடியும் எங்கிருந்தாவது மீண்டும் தொடரும்.

  5. ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
  படித்த அறிஞர்கள் ஒன்று சேர்ந்து கலந்து உரையாடி விவாதம் செய்யும் இடத்திற்கு அம்பலம் என்று கூறுவார்கள். அந்த இடத்தில் எப்படி பணம் இருப்பவர்களை மட்டும் மதிக்கிறார்களோ, அந்த இடத்தில் பணம் இல்லாதவன் பேச்சு செவி கொடுத்தான் கேட்கப்படாது.

  6. சருகைக் கண்டு தணலஞ்சுமா
  சருகு என்பது உலர்ந்த இலை. தணல் என்றால் தீ. உலர்ந்த இலையின் மீது தீக்கணல் எளிதில் பற்றி எரித்து விடும். எனவே அதைக்கண்டு தணல் அஞ்சுவதில்லை. அது போன்றே எளியவரைக்கண்டு ஒரு வீரன் அஞ்சி ஓடமாட்டான் என்பது பொருளாகும்.

  7. எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்
  இது மருத்துவம் சார்ந்த பழமொழி. எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கும். கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிழக்கி.. அதே போலவே இந்த கடுக்காய் பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும் வகையில் இருக்கும். .

  8. பந்திக்கு முந்து, படைக்கு பிந்து
  சாப்பிடுவதற்க்கு நம் வலது கை முந்தும். அது போன்று போருக்கு செல்லும் அல்லது போர் புரியும் நேரத்தில் இடக்கையில் வில்லை ஏந்தி வலது கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலது கை செல்கின்றதோ அந்த அளவிற்கு அம்பு வேகமாகச் செல்லும்.

  9. சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
  பேறு பார்க்கும் மருத்துவ பெண்ணுக்கு - மருத்துவச்சி குழந்தை பிறந்தாலும், அலல்து ஒரு வேலை இறந்தே பிறந்தாலும், கண்டிப்பாக கூலி கொடுத்து விட வேண்டும். இது அவர் பேரு பார்த்ததற்கான கூலியாகும்.

  10. கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம்.
  எந்த உடல் உழைப்பும் இல்லாமல் இருந்த இடத்திலேயே ஒருவருக்கு சோறு கிடைக்குமானால் அது அவருக்கு சொர்க்கமாக தெரியும்.

  ஊக்கவிக்கும் தமிழ் பழமொழிகள் (Motivating Tamil Proverbs)

  Shutterstock

  11. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்
  அடி என்பது இறைவனின் திருவடியைக் குறிக்கும். அதனை சரண் புகுபவர்களுக்கு, இறைவன் உதவியாக இருப்பது போல ஒருவரின் சொந்த அண்ணனோ, தம்பியோ உதவ மாட்டார்கள்.

  12. அடாது செய்தவன் படாது படுவான்
  பல அநியாய தர்மமற்ற செயல்களை செய்பவன், ஒரு கட்டத்தில் தனது செயல்களுக்கான பலனை நிச்சயம் அனுபவிப்பான்.

  13. அப்பன் அருமை செத்தால் தெரியும்
  ஒரு குடும்பத்தில் தந்தை இறந்த பின்பு அக்குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். அதுபோல ஒரு விடயத்தை நாம் இழக்கும் வரை அதன் அருமையை நாமக்கு தெரிவதில்லை.

  14. கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்
  எந்த இடமானாலும், விடயமானாலும் ஒரு சிறிய முயற்சி கூட செய்யாதவன் மிகப்பெரும் முயற்சியில் நான் வெற்றியடைவேன் என்று கூறுவது சாத்தியப்படுமா?

  15. அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம்
  குணத்தால் பிறருக்கு தீங்கு நினைப்பவர்கள், வெளி தோற்றத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள்.

  16. அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா
  ஒரு பொருளை பல கடினங்களுக்கு மத்தியில் உருவாக்குகின்ற அருமை, அதை சாதரனமாகவோ அல்லது துச்சமாகவோ நினைப்பவநுக்கு தெரியாது.

  17. இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லை
  இது ஒருவன் ஒரு விடயத்தை பற்றி நன்றாகவும், முழுமையாகவும் தெரிந்து கொள்ளாமல், இது இப்படி தான் என்ற ஒரு தீர்மானத்திற்கு வருவது தவறு.

  18. குடிப்பதோ கூழ் கொப்பளிப்பதோ பன்னீர்
  ஒரு சிலர் தங்கள் வறட்டு கௌரவத்திற்காக தங்களிடம் எதுவும் இல்லையென்றாலும், அனைத்தும் இருப்பது போலவும், செல்வந்தர் போலவும் தங்களை காட்டிக் கொள்ள முயற்சி செய்வார்கள்.

  19. அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாள்
  ஒரு விடயத்தை அல்லது செயலை பற்றி எதுவுமீ தெரியவில்லை என்றாலும், அதை பற்றி தனுக்கு அனைத்தும் தெரியும் என்று காட்டிக் கொள்வதை குறிக்கும்.

  20. கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை
  எப்போதும் தீய குணம் மற்றும் தீய நடத்தை கொண்டவனை, எந்த சொந்தமும், அவன் தன்னுடைய உறவு என்று சொல்லிக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.

  சுவாரசியமான அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள் (Interesting Tamil Proverbs)

  21. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்
  இது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு நிச்சயம் எங்காவது ஒரு தீர்வு இருக்கும் என்பதை கூறுகின்றது.

  22. இருகினால் களி இளகினால் கூழ்
  எந்த விடயமாக இருந்தாலும், அதில் நிச்சயம் ஏதாவது ஒரு பலன் கிடைக்கும். அதனால், எதையும் உதாசீனம் செய்யக் கூடாது.

  23. சங்கரா சங்கர என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?
  எந்த முயற்சியும் எடுக்காமல், வெறும் வாய் பேச்சில் மட்டும் அந்த விடயத்தை சிறப்பாக முடித்து விட முடியுமா?

  24. ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல
  வறட்டு பிடிவாதம் கொண்டவர்கள் தங்களுக்கு என்ன தெரிந்ததோ அல்லது தெரியுமோ, அது மட்டுமே உண்மை மற்றும் சரி என்று பிடிவாதம் செய்வார்கள்.

  25. உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன் இலை தேடுவான்
  ஒருவனுக்கு தன்னுடைய காரியம் வெற்றிகரமாக முடிந்து விட்டால் அதற்கு அடுத்தபடியாக இருக்கும் காரியங்களை மேற்கொள்வான். ஒருவேளை அந்த காரியம் நடக்காமல் இருந்தால், அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பான்.

  26. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
  ஒரு விடயம் நடக்க இருக்குமானால், அது குறித்த அறிகுறிகள் நடப்பதற்கு முன்பே நமக்கு தெரிய வரும்.

  27. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
  இது தன்னிடம் ஒரு விடயம் இல்லை என்று தெரிந்தாலும், அது தன்னிடம் இருப்பது போல காட்டிக் கொள்ளும் வீண் முயற்சியை கூறுகின்றது.

  28. ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க
  எவ்வளது கடினமாக உழைத்தாலும், ஒரு விடயத்தி நோக்கி தேடுதலை செய்தாலும், அது நமக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்தால் மட்டுமே அது கிடைக்கும். இல்லையென்றால் கிடைக்காது.

  29. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
  பணம் அதிகம் இருந்தால், மனிதனுக்கு குணம் இல்லாமல் போய் விடுகின்றது. இது மனிதனின் உயர்வான குணங்களை மதிக்க தவறும் செயலாகும்.

  30. தேரை இழுத்து தெருவில் விட்டது போல
  மிக உயர்வான மற்றும் மதிப்புள்ள ஒரு விடயத்தை, அல்லது பொருளை அதன் மதிப்பு தெரிந்தும் தெரியாதது போல் செய்யும் செய்யலை போல், அந்த பொருளை தாழ்த்தி நடத்தும் செயலாகும்.

  நண்பர்களுடன் பகிர தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs For Friends)

  Shutterstock

  31. இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லை
  பிறருக்கு தன்னால் முடிந்த உதவிகள், தானம் மற்றும் தர்மம் செய்ததால் அழிந்தவர்கள் இல்லை. அது போன்று அவற்றை வழங்காதவர்கள் வாழ்ந்ததாக சரித்திரமும் இல்லை.

  32. கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான்
  தனது திறமை மீதும், தன்னம்பிக்கை மீது நம்பிக்கை இல்லாதவன், பிறர் மீது எப்போதும் குறைக் கூறிக் கொண்டே இருப்பார்.

  33. உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது
  உறவினர்கள் வீட்டிற்கு அவ்வப்போது செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. அது போன்று கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை எப்போதும் திரும்பிப் பெற முடியாது.

  34. ஊதாரிக்கு பொன்னும் துரும்பு
  எந்த ஒரு கவலையும் இன்றி சேமிப்பதை பற்றி சிந்திக்காமல் செலவு செய்பவன் எந்த ஒரு பொருளின் மதிப்பையும் பற்றி அறிய மாட்டான்.

  35. ஏணி கழிக்கு கோணல் கொம்பு வெட்டலாமா
  எந்த ஒரு விடயமாக இருந்தாலும், அதற்கு சரியாக திட்டமிட வேண்டும். அப்படி இல்லாமல் செய்யும் காரியம் தோல்வியிலேயே சென்று முடியும்.

  36. செக்கை வளைய வரும் எருதுகள் போல
  இது தனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும், நல்ல மாற்றங்களைப் பெற வேண்டும் என்று எந்த ஒரு உத்வேகமும் இல்லாமல் வாழ்பவர்கள், தங்கள் வாழ்க்கையில் ஒரே செயலை புதுமை இன்றி மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பார்கள்.

  37. சேர இருந்தால் செடியும் பகை
  யாராக இருந்தாலும், எந்த உறவாக இருந்தாலும், அவருடன் அதிக நெருக்கத்தோடு பழகினால், அங்கே நிச்சயம் ஒரு நாள் பகை உண்டாகும்.

  38. தழைத்த மரத்திற்கு நிழல் உண்டு
  தன் வாழ்க்கையில் பக்குவம் பெற்ற ஒருவர் எப்போதும் பிறருக்கு உதவியாகவும், நன்மை செய்பவராகவும் இருப்பார்.

  39. துணை போனாலும் பிணை போகாதே
  ஒருவர் எந்த கட்டத்திலும், எந்த சூழலிலும் யாருக்கும் துன்பம் / தொந்தரவு தருபவராக இருந்து விடக் கூடாது.

  40. நெடும்பகலுக்கும் உண்டு அஸ்தமனம்
  இந்த உலகத்தில் வாழும் அனைவரும், எல்லாவற்றிற்கும் என்றாவது ஒரு நாள் முடிவு வந்தே தீரும். முடிவில்லாதது என்று எதுவும் இல்லை.

  வாட்ஸ் ஆப்பில் பகிர தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs For Whatsapp)

  41. கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்
  எந்த ஒரு போருல்லாக இருந்தாலும், அதனை அதற்கான முறையில் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே பயன் தரும்.

  42. கர்மத்தினால் வந்தது தர்மத்தினால் தொலைய வேண்டும்
  நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த ஒரு தீய செயலை / தீவினையை, தர்மம் போன்ற நற்செயல்களால் மட்டுமே ஈடு செய்து அதில் இருந்து விடு பட முடியும். மேலும், எந்த தீங்கும் செய்யாமலும் இருக்க வேண்டும்.

  43. கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?
  ஒரு விடயம் செய்யும் போது, அதில் எந்த பயனும் இல்லை என்று தெரிந்த பின்னரும், பின்னர் எந்த பலனும் எதிர் பார்த்த படி கிடைக்கவில்லை என்று வருந்துவது அர்த்தமற்ற செயலாகும்.

  44. நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
  ஒருவர் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் மேன்மை பெற்று விட்டால் மீண்டும் அவர் அந்த பழைய நிலைக்கு திரும்ப செல்ல விரும்ப மாட்டார்.

  45. மிதித்தாரை கடியாத பாம்புண்டோ
  ஒரு செயலை செய்து விட்டு, அதற்கான எதிர்வினையை பெறாமல் தப்பிக்க யாராலும் முடியாது. தான் செய்த வினைக்கு தக்க எதிர்வினையை நிச்சயம் பெற்றே தீருவார்கள்.

  46. சொல் அம்போ வில் அம்போ?
  ஒரு வில்லில் இருந்து செல்லும் அம்பை விட, ஒருவர் வாயில் இருந்து வெளியே வரும் சொல் மிகவும் ஆபத்தானது. அது வில்லை விட அதிக தாக்கத்தையும் தரக் கூடியது.

  47. உப்பிட்டவரை உள்ளளவும் நினை
  நீங்கள் வாழ்க்கையில் கஷ்ட்டப்படும் காலத்தில், அல்லது பெரிய அளவு நம்பிக்கையில் இழந்து நிற்கும் காலத்தில் உங்களுக்கு ஒருவர் யாரும் உதவாத தருணத்தில் உதவி செய்தாரானால், அவரை உயிர் உள்ளவரை மறக்கக் கூடாது. இறுதி வரையிலும் அவருக்கு நன்றியோடு இருக்க வேண்டும்.

  48. எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை
  பழுக்க காய்ச்சிய இரும்பை கூட கையால் பிடித்து விடுபவரும் இந்த உலகத்தில் உண்டு. ஆனால், தன் செயலில் ஈகைக் குணம் கொண்டு ஒருவரை மட்டும் இந்த உலகத்தில் காண்பது மிகவும் அறிது. இது அருஞ்செயல் ஆற்றுபவர்கள் இந்த உலகத்தில் மிகக் குறைவே என்பதை உணர்த்துகின்றது.

  49. வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி
  ஒருவர் தன் மனதில் கடவுளை எப்படி உருவகப்படுத்தி வணங்குகின்றார் என்பதை குறிக்கும். ஒருவரி மாட்டு சாணியை கடவுள் என்று நம்பி பிடித்து வைத்தால் அது கடவுள், அப்படி இல்லாமல், அதனை சாணியாகவே பார்த்தால், ஏது அங்கு கடவுள். இது ஒருவர் கடவுளை தன் மனதில் எப்படி ஏற்று நினைகின்றார் என்பதை பற்றி கூறும்.

  50. எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும்
  இது ஒரு திருடன் எங்கு சென்று திருடினாலும், தன் வீட்டில் மட்டும் திருட மாட்டான். மேலும் தன் திருட பயன் படுத்தும் பொருளையும் வீட்டில் பத்திரமாக வைத்துக் கொள்வான். இது எப்படி பட்ட தீயவராக இருந்தாலும், இந்த உலகத்தில் அவர் போற்ற நிச்சயம் ஒரு பொருள் இருக்கும் என்பதை குறிக்கும்.

  குறுஞ்செய்தி அனுப்ப தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs For SMS)

  Shutterstock

  51. எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?
  இது கடினமாக வேலை செய்பவர்கள் மத்தியில், எந்த வேலையும் செய்யாமல், யாருக்கும் உதவியாகவும் இருக்காமல் எதற்காக அவர்கள் மத்தியில் உலவ வேண்டும்.

  52. ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.
  இது ஒரு தாய் குருவி தேடி இறை எடுத்து வர அதனை கூட்டில் இருக்கும் ஒன்பது குஞ்சுகளும் வாய் திறந்து உணவை கவ்வி உண்ணும். அதாவது பல குழந்தைகள் இருக்கும் ஒரு குடும்பத்தில் தந்தை ஒருவன் கடினமாக உழைத்து தனக்கு கிடைக்கும் ஊதியத்தில் தனகென்று எதையும் வைத்துக் கொள்ளாமல், அனைத்தையும் தன் குடும்பத்திற்கே செலவழிப்பான் என்பதை குறிக்கும்.

  53. இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.
  இது நெல்லை இடித்து, புடைத்து அரிசியாக்கி, சோறு சமைத்து ஒருத்தி உண்ண காத்திருக்க, அதனை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் வந்து உண்டு விட்டு சென்றால் என்பதை விளக்கும். கடினமாய் உழைப்பது ஒருவர், எந்த உழைப்பும் இல்லாமல் பலன் கிடைக்கும் போது அதனை தட்டிச் செல்பவர் வேறோருவர்.

  54. இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.
  இது ஒரு நிறுவனத்தில் கடினமாக அந்த நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்து அதன் முன்னேற்றத்திற்கு உழைத்தவர்கள் இருக்க, அவர்களை எல்லாம் விட்டு விட்டு, புதிதாக இப்போது வந்தவர்களுக்கு அதிக சம்பளமும், சலுகைகளையும், பழைய ஊழியர்கள் முன்னிலையில் கொடுப்பது, அவர்களை அவமதிப்பதோடு, அவர்கள் செய்த நன்றியை மறப்பதாகவும் இருக்கும்.

  55. உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்.
  இது உறவினர்களும், நண்பர்களும் அளவுக்கி மீறிய தொல்லைகளை தரும் போது, பாதிக்கப்பட்டவர் மனதில், இப்படி பட்ட சொந்தங்களுக்கு மத்தியில் வாழ்வதை விட, இறந்து போய் விடுவதே நல்லது என்ற எண்ணம் தோன்றும்.

  56. தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
  ஒழுக்கமும், நன்னெறியும் ஒருவனுக்கு தானாக வர வேண்டும். அதனை தடி கொண்டு அடித்தோ, கடுமையான வார்த்தைகளால் கண்டித்தோ ஒருவனுக்கு அந்த நல்ல பழக்கங்களை கொண்டு வர முடியாது.

  57. கோல் ஆட, குரங்கு ஆடும்.
  எவ்வவலு தான் ஒரு குரங்குக்கு கற்றுக் கொடுத்து, வெறுமனே வாயில் ஆடு என்று சொன்னால் ஆடாது. ஒரு கோல் கொண்டு சொன்னால் மட்டுமே ஆடும். அது போல, ஒருவனுக்கு வாயால் மட்டும் நன்னெறியை கற்றுக் கொடுத்தால் மட்டும் போதாது. கண்டிப்பும் காட்டினால் மட்டுமே அவனுக்கு அந்த நெறி புரிந்து தன் வாழ்க்கையில் அதனை செயல்படுத்துவான்.

  58. கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ?
  நன்றாக பானையில் கடந்த போது திரளாத வெண்ணை, லேசாக கிண்டும் போது மட்டும் வந்து விடுமா?இது திருமணத்திற்கு முன் தன் தாய் தந்தையை நேசிக்காக ஒரு பிள்ளை, மணமான பின், குழந்தைகள் பெற்ற பின் எப்படி அன்போடு அந்த உறவுகளை மட்டும் நேசிக்கும்.

  59. மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன்
  இது ஒருவன் தனுக்கு கழுதை மட்டுமே மேய்க்கத் தெரியும், அதனால் வேறு பிராணிகளை மேய்க்க மாட்டேன். அப்படி இல்லையென்றால், யாத்திரை சென்று விடுகிறேன் என்று கூறுவது. அதாவது, வேறு நல்ல வேலை இருந்தாலும், எனக்குத் தெரிந்த வேலையை மட்டுமே செய்வேன். வேறு புதிய வேலையை கற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறுவது போல்.

  60. ஒற்றைக் காலில் நிற்கிறான்
  இது ஒருவன் எந்த சூழ் நிலையிலும், தான் எடுக்கும் முயற்சியில் இருந்து பின் வாங்க மாட்டேன் என்று உறுதியாக இருப்பதை குறிக்கும்.

  பகிர மேலும் சில பழமொழிகள் (Tamil Proverbs To Share)

  61. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
  62. பூமியைப்போலப் பொறுமை வேண்டும்
  63. காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
  64. மத்தளத்திற்கு இரு புறமும் இடி
  65. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு
  66. முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலிகொண்டு வெட்ட வேண்டும்
  67. கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
  68. இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!
  69. கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்
  70. கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்

  முகநூளில் தினமும் பகிர பழமொழிகள் (Tamil Proverbs For Facebook)

  Shutterstock

  71. சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?
  ஒரு குழந்தை பிறந்தது முதல் வளரும் சூழலிலும் ஒரு தொழில் அல்லது செயலை தொடர்ந்து கவனித்தும், செய்தும் வரும் போது, புதிதாக அதற்கு கற்றுக் கொடுக்கும் தேவை இருக்காது என்பதை குறிக்கும்.

  72. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
  இது கம்பம் வீட்டில் இருக்கும் தறியும் கவி பாடும் என்பதை கூறும். அதாவது, ஒருவர் நல்ல திறனோடும், நல்ல சிந்தனைகளோடும் வாழும் போது, அவரை சார்ந்து இருக்கும் நபர்களும், அதன் தாக்கம் பெற்று, அந்த நன்னெறிகள் தனக்குள் தானாகவே பெற்று விடும் என்பதை குறிக்கும்.

  73. ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
  இது தன் தந்தை செய்யும் தொழிலில் ஒருவன் ஈடுபாட்டோடு சிறு வயது முதல் கற்று செய்து வரும் போது, தானாகவே நேரம் வரும் போது, அவனுக்குள் இருக்கும் தனித்திறம் வெளிவரும்.

  74. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
  இது முன் பின் தெரியாத ஒருவருடன் நட்பு கொண்டு, எப்போதும் தன் கூடவே வைத்துக் கொண்டால், அவரால் நிச்சயம் ஒரு நாள் ஆபத்து நேரிடும்.

  75. கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
  ஒரு கழுதைக்கு எப்போது குட்டிசுவற்றின் அருகில் நின்று நாள் முழுவதும் இருந்தால், அது அதற்கு புனித யாத்திரை செய்வது போல இருக்கும். அது போல, எந்த ஒரு பெரிய குறிக்கோளும் இல்லாத ஒருவர், தான் செய்யும் பயனற்ற வேலையே அவருக்கு திருப்தி தருவதாக மகிழ்ச்சி அடைந்து கொள்வார்கள்.

  76. சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?
  தான் உண்ணும் சோற்றில் இருக்கும் கல்லைக் கூட எடுத்து விட்டு உண்ண நினைக்காதவன், எப்படி ஞானம் என்ற ஒன்றை பற்றி அறிந்து கொள்ள முயற்சிப்பான். அவனிடம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகள் என்று எதுவுமே இருக்காது.

  77. உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
  தான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊரில் ஒரு சிறு வேலையைக் கூட செய்ய முடியாதவன், எப்படி வேறு ஊருக்கு, அல்லது பெரிய நகரத்திற்கு சென்று பெரிய செயலை செய்து வாழ்க்கையில் சாதித்து காட்டுவான்.

  78. ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.
  இது ஒருவர் யாரும் செய்யத் தயங்கும் பெரிய செயலையே சுலபமாக செய்து காட்டிய பின், எந்த ஒரு சிறிய செயலும் அவர் முன் ஒன்றும் இல்லை. எந்த செயலையும் சுலபமாக முடித்து விடுவார்.

  79. ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.
  திருமணம் செய்து கொள்ளாமல், பிரம்மச்சாரியாக வாழும் ஒருவனது வாழ்க்கை என்பது, வண்டி ஓட்டுபவன் வாழ்க்கை போன்றது. இருவருமே ஒரு இடத்தில் நிலையாக தங்க மாட்டார்கள்.

  80. தனி மரம் தோப்பாகாது
  இது என்னதான் ஒருவர் தான் தனியாக நின்று எதையும் சாதித்து விட முடியும் என்று பெருமிதத்தோடு கூறினாலும், அவரால் கடைசி வரை பிறருடைய உதவி இல்லாமல் செய்து முடிக்க முடியாது என்பது உண்மை. மேலும் இறுதி வரை தனியாகவே வாழ்ந்து விட முடியாது. பிறர் அண்டி வாழ்வதே மனித வாழ்க்கை.

  மேலும் படிக்க - உங்கள் வாழ்க்கையில் ஊக்கத்தோடு இருப்பது எவ்வளவு முக்கியம்? இங்கே உங்களுக்காக சில வரிகள்!

  பட ஆதாரம்  - Shutterstock 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!