குலதெய்வத்திற்கு எந்த விளக்கில் தீபம் ஏற்றினால் என்ன பலன் என்பதை அறிந்து ஏற்றுங்கள்

குலதெய்வத்திற்கு எந்த விளக்கில் தீபம் ஏற்றினால் என்ன பலன் என்பதை அறிந்து ஏற்றுங்கள்

எந்த தெய்வத்தின் அருள் நமக்கு கிடைப்பதற்கும் நமது குலதெய்வத்தின் அருள் பூரணமாக நமக்கு கிடைக்க வேண்டும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் மற்ற தெய்வங்கள் நமக்கு அருள் செய்யாமல் போய் விடலாம்.                     

குலதெய்வ வழிபாடு என்பது வருடம் ஒருமுறையாவது அவசியம் நடக்க வேண்டும். வருடத்தில் ஒரு நாள் உங்கள் வம்சத்தை காக்கும் குலதெய்வத்திற்காக ஒதுக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.              

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த குலதெய்வத்திற்கு எந்த விளக்கினால் நீங்கள் விளக்கேற்றினால் என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.                                                                                  

Youtube

பெரும்பாலும் வீடுகளில் வெள்ளி விளக்கு பித்தளை விளக்குகள் ஏற்றுவோம். கோயில்களில் அகல் தீபம் ஏற்றுவோம். அதை போல குலதெய்வம் கோயில்களில் நாம் ஏற்ற வேண்டிய தீபம் என்னவென்றால் மாவிளக்குதான்.

மாவிளக்கு என்பது பச்சரிசி மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்பட்ட உணவினால் ஆன விளக்கு. இதில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றினால் மட்டுமே குலதெய்வத்தின் மனம் குளிரும். உங்கள் குடும்பத்தை தனதருளால் என்றும் அந்த தெய்வம் காக்கும்.

மாவிளக்கு செய்ய பச்சரிசி ஊற வைத்து இடித்து அதன் பின்னர் சலித்து அதில் வெல்லம் ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாகினை ஊற்றி நன்கு பிசைய வேண்டும். சப்பாத்தி மாவை விட சற்று கெட்டியான பதம் வந்ததும் பிரட்டுவதை நிறுத்தி விடுங்கள்.

Youtube

உங்கள் மாவிளக்கு பூஜைக்கான (pooja) மாவு இப்போது தயார். இதனை ஒரு பாத்திரத்தில் வைத்து உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்லுங்கள். அங்கே இந்த மாவினை எடுத்து இரண்டு பங்காக பிரிக்கவும். இரண்டு விளக்கு போடுவதற்காகவே இப்படி பிரிக்கிறோம்.

அந்த இரண்டு பங்கை வட்ட வடிவமாக்கி அதன் நடுவே நன்கு குழியாக்கி அதில் பசுநெய் சேர்க்கவும். அதில் பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரி போட்டு விளக்கேற்றுங்கள். நெய் தீரும் வரை எரிய விட்டு பின்னர் அதனையே குலதெய்வ பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்து நீங்களும் சாப்பிடுங்கள்.

இந்த விளக்கை தரையில் வைக்காமல் வாழை இலையில் வைக்க வேண்டும். மாதாமாதம் பௌர்ணமி அன்று குலதெய்வம் அருகில் இருப்போர் சென்று ஏற்றி வரலாம். தூரமாக இருப்பவர்கள் வருடம் ஒருமுறை முக்கிய நாட்களில் சென்று வழிபாட்டு முறைகளை செய்து வாருங்கள்.

இதனால் குடும்பம் விருத்தியாகும். குடும்ப சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பிறக்கும். சண்டைகள் நிற்கும். குழந்தைகள் குடும்பத்தோடு ஒன்றிணைந்து இருப்பார்கள். பேரும் புகழும் கிடைக்கும். தீராத பிரச்னைகளை எல்லாம் தீர்த்து வைப்பது உங்கள் குலதெய்வ அருள்தான். நோய் நீங்கி ஆரோக்கியமான குடும்பத்தை நீங்கள் பெற விரும்பினால் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!