திருமணத்திற்கு தயாரான நடிகை காஜல் அகர்வால் : அஜ்மீர் தர்ஹாவில் சிறப்பு தொழுகை!

திருமணத்திற்கு தயாரான நடிகை காஜல் அகர்வால் : அஜ்மீர் தர்ஹாவில் சிறப்பு தொழுகை!

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடிகை காஜல் அகர்வால் இருக்கிறார். 2008ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  

தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். 

twitter

இந்த படத்தில் 85 வயது பெண்மணியாக அமிர்தவல்லி என்ற கேரக்டரில் நடித்து  வருகிறார். எப்போதும் துறுதுறுவென இருக்கும் காஜல் தனது குறும்புத்தனத்தால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் கூட குழந்தைகள் விளையாடும் குதிரை பொம்மையில் சவாரி செய்து, கத்தி சண்டை போடுவது போன்ற வீடியோ க்ளிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரல் ஆனது. 

 
 
 
View this post on Instagram
 
 

#idomyownstunts (thematic old western music as back ground score🎵)

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on


மேலும் அந்த பதிவுடன் I Do My Own Stunts என்ற கேப்ஷனை கொடுத்துள்ளார். இதுதான் உங்க ஸ்டன்ட்டா? ஜான்சி ராணி என்றும், க்யூட் என்றும் அவரது ரசிகர்கள் புகழ்ந்தனர். இந்நிலையில் அஜ்மீர் தர்காவில் நடிகை காஜல் அகர்வால்  சிறப்பு தொழுகை நடத்தி இருக்கிறார்.

twitter

காஜல் அகர்வால் அவருடைய அம்மா மற்றும் குடும்பத்தினருடன் சென்று ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தியுள்ளார். தலையில் பூ கூடையை சுமந்து சென்று அஜ்மீர் தர்காவில் வழிப்பாடு செய்த காஜலை அங்குள்ள மூத்த அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். மேலும் தர்கா சார்பில் அவருக்கு வெல்வெட் போர்வையும், பிரசாதமும் வழங்கி கவுரவித்துள்ளனர். 

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த தொழுகை காஜலின் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்கிற வேண்டுதலோடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் காஜலின் ரசிகர்கள் பலர் இவருடைய வேண்டுதல் நிறைவேற தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே காஜல் அகர்வாலின் திருமணம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது. 

twitter

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிலளித்த காஜல் அகர்வால், நல்ல மாப்பிளை கிடைத்தால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது வருங்கால கணவர் மீதான எதிர்பார்ப்பு குறித்து ஒரு பெரிய லிஸ்டையே கூறியிருந்தார். 

பொதுவாக ஒரு நடிகை திருமணம் செய்து கொண்டால் சினிமாவில் அவரது மார்க்கெட் குறைந்துவிடும். ஆனால் காஜலுக்கு தற்போது 34 வயது ஆவதால் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். 

இவருடைய குடும்பத்தினரும், காஜலுக்கு ஏற்ற போல் ஒரு மாப்பிளையை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதனால் கண்டிப்பாக அடுத்த வருடத்தில் காஜலை மாலையும் கழுத்துமாக ரசிகர்கள் பார்க்கலாம் என்பது உறுதியாகியுள்ளது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                       

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!