நீ மட்டும் தனியாக வா .. ஆசைக்கு அழைத்த சூப்பர் ஸ்டார் நடிகர்.. அதிர்ந்த இஷா கோபிகர்!

நீ மட்டும் தனியாக வா .. ஆசைக்கு அழைத்த சூப்பர் ஸ்டார் நடிகர்.. அதிர்ந்த இஷா கோபிகர்!

நடிகை இஷா கோபிகரை மறக்க முடியுமா.. தீண்டாய் மெய் தீண்டாய் பாடல்கள் மூலம் நம் உள்ளங்களை தீண்டிய அழகிய நடிகை. காதல் கவிதை, என் சுவாச காற்றே, நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா போன்ற படங்களில் நடித்தவர் இஷா கோபிகர். பாலிவுட் நடிகையான இவர் அங்கும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.                                      

நடிப்புக்கு ஓய்வளித்து திருமணம் செய்து கொண்ட இஷா கோபிகர் (isha koppikar) இப்போது மீண்டும் இரண்டாவது முறையாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த இஷா கோபிகர் தன்னை சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தது பற்றி பல ரகசியங்களை வெளியிட்டிருக்கிறார்.                                                                

Youtube

தான் நடிக்கவிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை அணுகி இந்தப் படத்தில் நீங்கள் நடிப்பதால் ஹீரோவின் குட்புக்கில் நீங்கள் இடம்பிடிக்க வேண்டியது அவசியம். ஆகவே அவருக்கு நீங்கள் போன் செய்து அதன் பின்னர் போய் நேரில் பாருங்கள் என்றாராம்.

அந்த ஹீரோவுக்கு போன் செய்த இஷாவிற்கு தான் எந்தெந்த நேரம் என்னென்ன செய்வேன் என்பது பற்றிய விபரங்களை அந்த சூப்பர் ஸ்டார் நடிகர் கூறியிருக்கிறார். பின்னர் இஷா யாருடன் அவரை பார்க்க வருவார் என்று கேட்டிருக்கிறார் அந்த நடிகர். இஷா டிரைவருடன் வருவதாக சொல்ல ட்ரைவர் வேண்டாம் நீ மட்டும் ரகசியமாக வா என்றாராம் சூப்பர் ஸ்டார் நடிகர்.                            

Youtube

அதன் பின்னர் கோபமடைந்த இஷா தான் பிரீயாக இல்லை என்றும் தன்னால் அங்கு வர முடியாது என்றும் கூறி அந்த நடிகரின் போனை கட் செய்திருக்கிறார். அதன்பின்னர் தயாரிப்பாளருக்கு போன் போட்ட இஷா கோபிகர் சரமாரியாக திட்டிவிட்டு வாய்ப்புக்காக இந்த வேலையை நான் செய்ய மாட்டேன் என்று கூறி போனை கட் செய்து விட்டாராம்.                                                                        

இதனாலேயே பட வாய்ப்புகளை இழந்ததாக இஷா கோபிகர் கூறி இருக்கிறார். தான் ஒப்பந்தம் ஆகும் படங்களில் எல்லாம் சிபாரிசுடன் வரும் வேறு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு தான் விலக்கப்பட்டு விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒருபுறம் பாலிவுட் மற்றும் சினிமா வட்டாரமே யார் அந்த சூப்பர் ஸ்டார் என்று யோசித்துக் கொண்டிருக்க மறுபுறம் ரசிகர்கள் மி டூ சமயத்தில் ஏன் வாய் திறக்காமல் இப்போது பேசுகிறீர்கள் என்று இஷாவை கேள்வி கேட்டு வருகின்றனர்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!