கண் புருவத்தை த்ரெடிங் செய்யும் முன்னர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

கண் புருவத்தை த்ரெடிங் செய்யும் முன்னர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

கண்கள் அழகிற்கு முக்கியத்துவம் குடுக்கும் பெண்களுக்கு புருவ அழகு என்பது முக்கியம். ஏனெனில் அவர்களின் முகத்தினை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டும் பணிகளை புருவங்கள் செய்கின்றன. 

மேலும் புருவத்தினை த்ரெடிங் செய்யும் போது மெல்லியதாக செய்வதை விட கொஞ்சம் முடிகள் இருக்கும் வண்ணம் அடர்த்தியாக த்ரெடிங் செய்வது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். த்ரெடிங் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு விரிவாக காண்போம். 

 • புருவத்தை சீர்படுத்தி ஒரு வடிவாக வளரச் செய்வது தான் த்ரெடிங் (threading) முறையின் முக்கிய நோக்கம். மேலும் இந்த முறையில், அதிகமாக முடி வளர்ந்து முக அழகைக் கெடுப்பதை மாற்ற பெரிதும் உதவுகிறது. 
 • த்ரெட்டிங் முறையால் புருவங்களை வில் போன்று வளைத்து புருவ முடிகளை சீராக வளரச் செய்து, நல்ல அழகிய வடிவத்தை பெறலாம்.
 •  ஒருமுறை புருவத்தை த்ரெட்டிங் செய்து விட்டால் பொதும், மீண்டும் மீண்டும் திரெட்டிங் செய்ய வேண்டாம் என சிலர் விட்டு விடுவார்கள். ஆனால் அது தவறு. ஒருமுறை திரெட்டிங் செய்தால், முடி அதிகமாக வளரும் போதெல்லாம் மீண்டும் திரெட்டிங் செய்வது அவசியம்.
pixabay

 • த்ரெட்டிங் செய்யும் முன் முகத்தை நீரினால் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஏனெனில்  நீர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கிவிடும். முகத்தை நீரில் கழுவியப் பின், சுத்தமான காட்டன் துணியால் முகத்தை ஒற்றி எடுக்க வேண்டும்.
 • முதல் முறை த்ரெட்டிங் (threading) செய்யும் போது சிலருக்கு கண்களில் வீக்கம் உண்டாகும். இந்த வீக்கம் சிலருக்கு வலியுடன் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும். எனினும் அச்சம்கொள்ள தேவையில்லை.
 • த்ரெட்டிங்கிற்கு பிறகு க்ரீம் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவினால் எரிச்சல், வலி கட்டுப்படும். புருவத்தின் வலி ம்ற்றும் எரிச்சலைப் போக்க வெண்ணெய், பாதாம் அல்லது பாதாம் எண்ணெயும் பயன்படுத்தலாம்.
 • திரெட்டிங் செய்து கொண்ட பின்னர் கண்களை சுற்றி எண்ணெயால் மசாஜ் செய்வதால் புருவம் அழகிய வில் போன்ற வடிவம் பெற உதவுவதோடு, புருவம் அடர்த்தியாக வளரவும் வழிசெய்யும். 
pixabay

 • வில் போன்ற புருவம் எல்லோருக்கும் பொருந்தாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் முகத்துக்கு தக்கப்படி புருவத்தை வடிவமைத்து கொண்டால் மட்டுமே, உங்கள் முகத்தின் அழகு மெருகூட்டப்படும். 
 • நீள்வட்ட முகமாக இருப்பவர்கள் அடர்த்தியான புருவத்தை விட மெலிதான புருவங்கள் வைத்துகொள்வது முகத்தின் வசீக ரத்தைத் தூக்கி காட்டும். 
 • நீளமான முக அமைப்பில் இருந்தால் வளைந்த புருவத்தைக் காட்டிலும் வளைக்காமல் வைத்திருப்பது மிக அழகாக இருக்கும்.
 • வட்டமுகம் கொண்டிருக்கும் பெண்கள் நீளமான புருவத்தை வைத்தால் அழகான முகமாக இருக்கும். 

த்ரெடிங் - எச்சரிக்கை

 • த்ரெடிங் (threading) என்பது மிகவும் கவனமாக செய்ய வேண்டிய ஓர் அழகு சிகிச்சை. இல்லாவிட்டால் பல பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. பெரும்பாலான அழகு நிலையங்களில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை த்ரெட்டிங் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அடிக்கடி புருவத்தை த்ரெடிங் செய்ய கூடாது. 
 • அடிக்கடி த்ரெடிங் செய்வதால் புருவங்களை சுற்றியுள்ள தசைகளை தூண்டிவிடும். இதனால் கண்கள், கண்களைச்சுற்றி இருக்கும் தசைகள், தலையின் பின்புறம் வலி போன்ற உபாதைகளையும் உண்டாக்கிவிடும்.
 • புருவ அழகுக்கு செய்யும் மசாஜ் எதையும் கவனமாக செய்ய வேண்டும். புருவங்களில் தடவும் எண்ணெய், களிம்பு, கிரீம் போன்றவைகள் கவனக்குறைவாக கூட கண்களில் பட்டுவிடக்கூடாது. இதனால் ஏராளமான பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது. 
pixabay

 • சிலருக்கு ஒவ்வாமையினால் தோல் சிவந்து புண்கள் வரும். சிலருக்கு அரிப்பு ஏற்பட்டு எக்ஸிமா என்ற தோல் நோய்கூட வரலாம். இதனால் புண் ஆறியவுடன் அந்த இடம் கறுத்துப் போகவோ அல்லது வெண்ணிறமாகவோ ஆகிவிடும். 
 • வெளிப்படையாகத் தெரியாத வெண்புள்ளி நோய் த்ரெட்டிங் செய்வதால் மற்ற இடங்களுக்கும் பரவக்கூடும். சொரியாசிஸ் உள்ளவர்களின் சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும் என்பதால் த்ரெட்டிங் செய்யும்போது மிக வேகமாக முகம் முழுவதும் சொரியாசிஸ் பரவக்கூடும்.
 • அழகு நிலையத்தில் த்ரெட்டிங் செய்து விடுபவர்களின் கைகளில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தால் அவர்களிடமிருந்து செய்து கொள்பவர்களுக்கு பரவலாம். அதனால் த்ரெட்டிங் செய்யும் முன் சம்பந்தப்பட்ட அழகு நிலையம் சுகாதாரமானதா என்பதையும், தகுதியானவர்கள் தான் த்ரெட்டிங் செய்கிறார்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
 • குறிப்பாக, கர்ப்பிணிகள் த்ரெட்டிங் செய்து கொள்வது ஆபத்தானது என்பதால் தவிர்த்து விடுவது நல்லது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!