சுபமங்களகரமான கார்த்திகை மாதத்தில் பிரகாசமான பவுர்ணமி திதியில் கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்து வருவதால் மகா தீப திருநாளானது பெரிய கார்த்திகை என்றும் அண்ணாமலை தீபம் என்றும் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது நடைமுறையில் உள்ள பழக்க முறையாகும்.
ஆனால் கார்த்திகை மாதம் முழுவதுமே விளக்கு ஏற்றி வழிப்பட்டால் அனைத்து வித நன்மைகளும் நமக்கு வந்து சேரும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் தீபத்திருநாளில் மட்டுமல்ல தினந்தோறும் மாலை நேரத்தில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.
- கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும் அதிகாலையில் நீராடி பூஜைகள் செய்து வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால் குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.
- கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி (deepam) வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.
pixabay
- தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
- கார்த்திகை மாதத்தில் ஆலயத்தில் திபம் (deepam) ஏற்றி வைப்பதும், தினமும் இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
- விளக்கு ஏறும்போது கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
- திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனம், அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். நிலம், நீர்,காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன. இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
- விளக்கு ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.
- பஞ்சுத்திரி கொண்டு விளக்கு ஏற்றினால் சுகங்கள் அதிகரிக்கும்.
- கார்த்திகை மாதம் முழுவதும் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். இதனால் முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
pixabay
தீப எண்ணெய்களின் நன்மைகள்
விளக்கு ஏற்றும்போது நெய் தீபம் ஏற்றினால் செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்.
- நல்லெண்ணெய் தீபம் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
- தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும்.
- இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்ற சகல காரிய வெற்றி கிடைக்கும்.
- விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் தரும்.
- கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது.
விளக்கு ஏற்றிய பின்னர் அது தானாக அணையக்கூடாது. கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூவை கொண்டு விளக்கை குளிர்விக்க வேண்டும்.
விளக்கு ஏற்ற வேண்டிய நேரம்
- தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும், மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை உள்ள காலமாகும்.
- தினம் தினம் மாலை வேளையில் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடலாம். மாலையில் 4.30-6 மணி இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டால் சகல சவுகரியமும் கிடைக்கும்.
- பிரதோஷ நேரத்தில் தீபமேற்றினால் (deepam)திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.
pixabay
விளக்கின் மகத்துவங்கள்
நாம் ஏற்றும் ஒவ்வொரு விளக்கும் தனித்தனி நன்மைகள் வழங்க வல்லது.
- வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும்.
- பஞ்ச லோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும்.
- வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும்.
- இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.
- மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு ஏற்றினால் பீடை விலகும்.
16 தீபங்களின் தரிசனம்
தீபங்களில் 16 வகையான தீபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப தீபம் என பதினாறு வகையான தீபங்கள் உண்டு.
ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுகின்றனர். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசித்தால் 16 பேறுகள் கிடைக்கும் அந்த தேவர்களின் அருளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!