மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

தற்போது பல்வேறு மாநிலங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மழை, வெள்ளம், புயல் போன்றவற்றால் மக்கள் பாதிக்காத வண்ணம் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எனினும் வருடந்தோறும் ஏதேனும் ஒரு மின் விபத்து நடந்த வண்ணம் தான் இருக்கிறது. 

இதனை தவிர்க்க மழைக்காலங்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது பற்றிய விழிப்புணர்வு வேண்டும். மின் விபத்துக்களில் இருந்து காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலே போதுமானது. மழைக்காலத்தில் பின்பற்றவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.

 • வீடுகளில் இருக்கும் எல்லாவித மின்சார உபகரணங்களுக்கும் 'எர்த்திங்' எனப்படும் நில இணைப்பு கொடுக்க வேண்டும். 
 • வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனேயே உலர்ந்த ரப்பர் காலணியை அணிந்து, மின் (electric) மெயின் சுவிட்ச்சை அணைக்க வேண்டும். 
 • மழைக்காலங்களில் மின்சாரப் பெட்டிகள், மின் கம்பிகள், மின் இழுவை கம்பிகளுக்கு அருகில் செல்லக் கூடாது.
pixabay

 • இடி, மின்னலின்போது டி.வி., மிக்ஸி மற்றும் கிரைண்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்களை உபயோகப்படுத்தக் கூடாது.  
 • மின் கம்பங்கள் அறுந்துகிடந்தால், அவற்றை மிதிக்காமலும், தொடாமலும் இருக்க வேண்டும். இதுகுறித்து உடனே அருகில் இருக்கும் மின் வாரியத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும்.
 • மின் கம்பங்களிலோ, மின் இழுவை கம்பிகளிலோ கயிறு கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. 
 • கட்டடங்களுக்கும், மின் பாதைக்கும் இடையில் போதிய இடைவேளி இருக்குமாறு கட்டடங்களை அமைக்க வேண்டும். 
 • ஐந்து கிலோ வாட்ஸ்க்கு அதிகமான மின் இணைப்புப் பெறும்போது, எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் பொருத்தப்பட வேண்டும்.

எப்படி வேகம் குறைந்த குழந்தையை ஊக்கவித்து விரைவாக வேலைகளை செய்ய வைப்பது?

pixabay

 • மழைக்காலத்தில் தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்ய கூடாது. உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி, கரியமில வாயு தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
 •  மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அதிகாரிகளை அணுக வேண்டும். 
 • மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலர்த்தக் கூடாது.
 • வீடுகளில் இருக்கும் எல்லாவித மின்சார உபகரணங்களுக்கும் 'எர்த்திங்' எனப்படும் நில இணைப்பு கொடுக்க வேண்டும். அப்போது தான் மழைக்காலத்தில் மின் கசிவு (electric) இல்லாமல் இருக்கும்.
pixabay

 • மழை, காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லாதீர்கள். இதுகுறித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுங்கள்.
 • கனரக வாகனங்களை மின் மாற்றிகள், மின் கம்பங்கள் அருகில் நிறுத்திப் பொருள்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. 

எதிர்பார்த்ததை விட வேகமாக கடலில் மூழ்க போகும் சென்னை, மும்பை! இன்னும் 30 வருடங்களே மிச்சம்

 • மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அதிகாரிகளை அணுக வேண்டும். 
 • மின்விபத்துகளை தவிர்க்க மின்கம்பிக்கும் கட்டிட உச்சிக்கும் 2.4 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கட்டிடத்திற்கு பக்கவாட்டில் வயர் சென்றால் 1.219 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். 
pixabay

 • சில இடங்களில் வீடுகளுக்கு மிக அருகே மின்கம்பிகள் சென்று கொண்டிருக்கும். அவை தொடும் தூரத்தில் இருந்தால் அவற்றை கைகளாலோ, கம்புகளாலோ தொடக் கூடாது.
 • வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும்போது தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை மின்சுவிட்சை ஆப் செய்த பிறகுதான் பரிசோதிக்க வேண்டும்.
 • துண்டான வயர்களை “டேப்’’ கொண்டு ஒட்டிப் பயன்படுத்துவது, தரமற்ற உபகரணங்களைப் பயன்படுத்துவது போன்றவை மழைநேரத்தில் மின்விபத்தை (electric) ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை. 

இன்னொரு தாய்லாந்தாக மாறும் சென்னை.. சைல்டு செக்ஸ் paedophileகளின் கூடாரம் ஆகிறதா சென்னை ?

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!