அச்சுறுத்தும் வெங்காய விலையேற்றம் : வெங்காயம் இல்லாமலும் சமைக்க கூடிய சிம்பிள் ரெசிபிகள்!

அச்சுறுத்தும் வெங்காய விலையேற்றம் : வெங்காயம் இல்லாமலும் சமைக்க கூடிய சிம்பிள் ரெசிபிகள்!

வெங்காய விலையேற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வெங்காயம் விலை (onion) ஏறிக்கொண்டே செல்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் மிக முக்கியமானது  பருவமழை. 

போதிய அளவு வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனை சேமித்து வைக்க முடியாத நிலை மற்றும் கள்ளச்சந்தை காரணமாக ஆண்டுதோறும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கிலோ ரூ. 130க்கு வெங்காயம் விற்பனையாகிறது. 

இதனால் காய்கறிக்குக் கடைக்குப் போனாலே கண்ணீர் வருகிறது.  ‘எப்படியிருப்பினும் வெங்காயம் இல்லாத உணவு ருசிக்குமா’ என்பதே பெரும்பாலானவர்களின் கேள்வி.  வெங்காயமே (onion) இல்லாமல் சமைக்கக்கூடிய ரெசிபிக்களை நாம் இங்கு காண்போம்.

கத்தரிக்காய்  கொத்சு

தேவையான பொருட்கள் : 

பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் - 2 கப் , 
கேரட் - 1 கப், 
பாசிப் பருப்பு - 1/4 கப், 
கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், 
சாம்பார் தூள் - 3/4 டீஸ்பூன், 
பச்சை மிளகாய் - 1, 
பெருங்காயம் - 1 சிட்டிகை, 
புளி - சிறிய எலுமிச்சை அளவு, 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், 
வெல்லம் - 1/2 டீஸ்பூன், 
கடுகு - 1/4 டீஸ்பூன், 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு, 
கறிவேப்பிலை - சிறிது.

youtube

செய்முறை : 

முதலில் பாசிப் பருப்பு, கடலைப் பருப்பை தண்ணீரில் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து கொள்ளவும். புளியை வெந்நீரில் ஊற வைத்து 1 கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, காய்கறிகளை (onion) சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கி உப்பு, சாம்பார் தூள், மஞ்சள் தூள், புளித் தண்ணீர் சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். பின்னர் அதில் ஊற வைத்த பருப்பைப் போட்டு, குக்கரை மூடி விடவும். 3 விசில் வரும் வரை வேக வைத்து அத்துடன் வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிட்டு கிளறவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு இறக்கி சூடாக இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

        மேலும் படிக்க - சுவையான பவர்ச்சி மட்டன் ஹைதிராபாதி பிரியாணி செய்வது எப்படி?

முட்டைகோஸ் பக்கோடா

தேவையான பொருட்கள் : 

பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் - 1 கப், 
கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன், 
அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், 
வெண்ணெய் - 1 டீஸ்பூன், 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு, 
பெருங்காயம் - 2 சிட்டிகை.

youtube

செய்முறை : 


ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டைக்கோஸ், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயம் அனைத்தையும்  போட்டுக் கலந்து, சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு மிதமான தீயில் இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்தால் முட்டைகோஸ் பக்கோடா ரெடி. 

ஜவ்வரிசி உப்புமா

தேவையான பொருட்கள் : 

ஜவ்வரிசி - 1 கப், 
கேரட் - 1, 
குடை மிளகாய் - 1/4 துண்டு,
பச்சை மிளகாய் - 1, 
கடுகு - 1/4 டீஸ்பூன், 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு, 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், 
கறிவேப்பிலை - சிறிது, 
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன். 

youtube

செய்முறை : 

ஜவ்வரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு, பொடியாக நறுக்கிய கேரட், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். பின்னர் ஊற வைத்த ஜவ்வரிசியை கடாயில் போட்டுக் கிளறவும். தீயை மிதமாக வைத்து ஜவ்வரிசி கண்ணாடி மாதிரி ஆகும் வரை கிளறவும். ஜவ்வரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து கறிவேப்பிலை, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறவும்.

சிக்கன் கைமா

தேவையான பொருட்கள் : 

சிக்கன் ½ கிலோ,
பூண்டு - 6 பல், 
இஞ்சி - ஒரு துண்டு, 
பச்சைமிளகாய் - 3, 
கொத்துமல்லி, புதினா- கைப்பிடி, 
மஞ்சள்தூள், மிளகுதூள் - 1 டீஸ்பூன், 
பட்டை, லவங்கம், சோம்பு- 1 டீஸ்பூன், 
எலுமிச்சைச்சாறு - 1 டேபிள் ஸ்பூன், 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, 
பிரெட்தூள் - 1 கப். 

செய்முறை : 

முதலில் சிக்கனை சிறிது உப்பு சேர்த்து கழுவி வைத்து கொள்ள வேண்டும். பின்னர் எலும்பை நீக்கிவிட்டு மிக்ஸியில் ஒரு சுத்து அரைக்கவும். கடாயில் எண்ணெய்யை காய வைத்து பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, புதினா, கொத்துமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிய பிறகு மசாலாத்தூள் கலந்து மீண்டும் வதக்கவும். அடுத்து சிக்கன், பிரெட் தூள், உப்பு, எலுமிச்சை சாறு கலந்து கிளறவும். சூடான சிக்கன் கைமா தயார்!

     மேலும் படிக்க - அரிசி நீரின் 8 சிறந்த பயன்பாடுகளும் அதை தயாரிப்பதற்கான வழிகளும்!

துவரம் பருப்பு மசியல்

தேவையானவை : 

துவரம் பருப்பு – 1/2 கப், 
வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன், 
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன், 
தக்காளி – 2,
பச்சை மிளகாய் – 3, 
புளி – 50 கிராம், 
காய்ந்த மிளகாய் – 2, 
கடுகு, பெருங்காயத்தூள் –  கால் டீஸ்பூன், 
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

youtube

செய்முறை : 

குக்கரில் துவரம் பருப்பு, வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் புளி தண்ணீரை சேர்க்கவும். அது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் வேக வைத்து மசித்த துவரம்பருப்புக் கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வாசனை வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

                              மேலும் படிக்க - பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த யோகார்டின் ஆரோக்கிய மற்றும் சரும பாதுகாப்பு நன்மைகள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!