logo
ADVERTISEMENT
home / Food & Nightlife
சுவையான பவர்ச்சி மட்டன் ஹைதிராபாதி பிரியாணி செய்வது எப்படி?

சுவையான பவர்ச்சி மட்டன் ஹைதிராபாதி பிரியாணி செய்வது எப்படி?

தலப்பாகட்டின்னா நம்ம ஊரு பிரியாணி. அப்போ பவர்ச்சினா? அது ஹைதிராபாதி பிரியாணி! பிரியாணின்னு சொன்ன உடனே நாக்கு ஊறுகிறது இல்லையா? இப்போ தடுக்கி விழுந்தா பிரியாணி கடை ஒன்றை காணும் அளவிற்கு ஆகிவிட்டது! தற்போது வாரத்தில் ஒருமுறையேனும் பிரியாணி சாப்பிடாத ஆட்கள் இல்லை. புரட்டாசி முடிந்தது… தீபாவளி பண்டிகையும் முடிந்தது. இனி அசைவத்தில் ஒரு கை பார்க்க காத்திருக்கும் நண்பர்களுக்கு ஸ்பெஷலான பவர்ச்சி பிரியாணி எப்படி செய்வது என்று அறிந்து கொள்ளலாம் வாங்க.
சிக்கன், மட்டன், மீன், குஸ்கா என பல ரகங்களுக்கு பவர்ச்சி பிரபலம். மிகவும் ருசியான ஒரிஜினல் பவர்ச்சி மட்டன் ஹைதிராபாதி பிரியாணி (hyderabadi bawarchi biryani) எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மட்டன் – 2 கிலோ
கிராம்பு – ½  தேக்கரண்டி
ஜீரகம் – ½  தேக்கரண்டி
பொடித்த ஏலக்காய் – 1 தேக்கரண்டி
பட்டை – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது – ½  கப்
பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – ½ கட்டு
பொறித்த வெங்காயம் –  ½ கப்
பச்சை பப்பாளி விழுது – ½ தேக்கரண்டி

மட்டனை ஊறவைக்கும் முறை

ADVERTISEMENT

Shutterstock

  • மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். மசாலாக்கள் அனைத்தும் நன்றாக கலந்து, மட்டனில் ஊறுமாறு ஒரு அரைமணி நேரம் வைத்திருங்கள். பிறகு இந்தக் கலவையில், தயிர் – 1 கப் (கட்டியில்லாமல் உடைத்துக்கொள்ளுங்கள்) , எண்ணெய் – 1 கப் சேர்க்கவும்.
  • இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து மேலும் மட்டனை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். 
  • பின்னர், 1 கப் போல கொதிக்கும் தண்ணீரை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்குங்கள்.
  • மட்டனுக்கு மசாஜ் செய்வது போல செய்து கொள்ளுங்கள்.இதற்கு நீங்கள் ஒரு கை உரையைப் பயன்படுத்தலாம்.

 

பவர்ச்சி மட்டன் பிரியாணி செய்முறை (bawarchi mutton biryani recipe)

இப்போது, அரிசியை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.கொதிக்கும் தண்ணீரில் கீழ் காணும் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

அரிசியை  வேக வைக்க தேவையான பொருட்கள் :

ADVERTISEMENT

ஜீரகம் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – சிறிது
பட்டை – ½  தேக்கரண்டி
கிராம்பு – ½  தேக்கரண்டி
பாஸ்மதி அரிசி – 4 கிலோ
உப்பு – தேவையான அளவு 
குங்குமப்பூ – சிறிது

செய்முறை : 

  1. அரைமணி நேரம் ஊறவைத்த பாசுமதி அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்கவும். 
  2. இப்படி மசாலா தண்ணீரில் அரிசியை வேக வைப்பதால், சாதத்தில் அந்த ருசி ஏறி விடும். 
  3. அரிசி ஒரு கொதி வந்தவுடன், மசாலா தடவிய மட்டன் மீது பரவலாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை வடித்து பாதி வெந்த சாதத்தை போட வேண்டும். 
  4. ஒரு நிமிடம் கழித்து மேலும் அடுத்த அடுக்கு தண்ணீரை வடித்த சாதத்தை போட வேண்டும்.(இப்படி செய்வதால் அதிகம்  வெந்த சாதம் மேலே இருக்கும். இதுதான் தம் போடுவதன் சூட்சுமம் போலும்)
  5. இப்படி அனைத்து சாதத்தையும் அடுக்கடுக்காக போட்டவுடன், நிறத்திற்காக, குங்குமப்பூவை பாலில் கரைத்து மேலே ஊற்றுங்கள். இது சில சாதங்களுக்கு வேறு ஒரு நிறத்தை தரும். 
  6. இந்தப் பாத்திரத்தின் வடும்பில் துணியை சுற்றி, மூடி போட்டு அடுப்பில் வைத்து 30 நிமிடங்கள் வேக வைத்தால் சுவையான ஹைதிராபாதி பிரியாணி பவர்ச்சி ஸ்டைலில் ரெடி!

ரெஸ்ட்டாரெண்ட்களில் கிடைக்கும் பிரியாணி இப்போது உங்கள் இல்லத்தில். தக்காளி இல்லை, மசாலா அரைகத் தேவை இல்லை. சூப்பரான வர்ணங்களில் சாதம் பொல பொலவென உதிரியாக ஒட்டாமல் இருக்கும். மேலும், மசாலாவில் ஊறிய கறி அற்புதமாக வெந்து சுவையோ அலாதியாக இருக்கும். குக்கரில் செய்த மட்டன் சுவையாக இருக்காது. ஏன்னெனில், அதில் மசாலா பிரிந்துவிடும். இனி இல்லத்தில் செய்யும் மட்டன் பிரியாணியில் இருந்து யாரும் கறியை ஒதுக்க மாட்டார்கள். மேலே, கொடுக்கப்பட்டுள்ள அளவில் 10 முதல் 15 பேர் சாப்பிடலாம்.  

ADVERTISEMENT

Shutterstock

பவர்ச்சி பிரியாணி செய்வதற்கான முக்கிய குறிப்புக்கள்

  1. பப்பாளி விழுது மட்டன் கறி நன்றாக வேக உதவும்.
  2. பெரிய வெங்காயத்தை எண்ணெயில் டீப் பிரை செய்து கொள்ள வேண்டும்.
  3. இஞ்சி பூண்டு தனியாக அரைத்துக்கொள்ளவும்.
  4. பச்சை மிளகாயை தனியாக அரைத்துக்கொள்ளவும்.
  5. அடுக்கடுக்காக வெந்து கொண்டிருக்கும் அரிசியை தூவுவது போல கறி மீது லேயர் லேயர் (layer) ஆக பரப்புவதுதான் இந்த பவர்ச்சி பிரியாணியின் ட்ரிக் போலும். 

 

மேலும் படிக்க – மனக்கும் பாரம்பரிய மீன் குழம்பு செய்வது எப்படி?

பட ஆதாரம்  – Shutterstock 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

01 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT