logo
ADVERTISEMENT
home / அழகு
கெமிக்கல் நிறைந்த கற்றாழை ஜெல் வேண்டாம்.. வீட்டிலே எளிமையாக தயாரிக்கலாம்!

கெமிக்கல் நிறைந்த கற்றாழை ஜெல் வேண்டாம்.. வீட்டிலே எளிமையாக தயாரிக்கலாம்!

கற்றாழை ஒர் ஆல் இன் ஆல் அழகு பொருள். சருமம் கூந்தல் என எல்லாவற்றிற்கும் அதனை பயன்படுத்தலாம். நமது சருமத்திற்கு மிகச் சிறந்த பொலிவை தருவதில் கற்றாழைக்கு நிகர் வேறேதும் இல்லை என்றே கூறலாம். கற்றாழை சருமத்தில் உள்ள கரும்புள்ளி, அலர்ஜி போன்றவற்றையும், முகப்பரு, தழும்புகளையும் போக்கும் தண்மை கொண்டது. 

மேலும் சரும நிறத்தையும் அதிகரிக்கச் செய்யும். சருமத்திற்கு மட்டுமல்ல, கூந்தலுக்கும் அற்புத நன்மைகளை தருகிறது. கூந்தல் வளர்ச்சியை தூண்டு, சிறந்த கண்டிஷனராகவும் இருக்கிறது. 

இத்தகைய காற்றாலை ஜெல்லை (aloe vera gel) நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துவது சிறந்தது. கற்றாழை ஜெல்லை எளிமையாக வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம். 

மேலும் படிக்க – கண் புருவத்தை த்ரெடிங் செய்யும் முன்னர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ADVERTISEMENT

pixabay

தேவையான பொருட்கள் : 

கற்றாழை இலை – 4,
விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 5, 
விட்டமின் சி கேப்ஸ்யூல் – 4.

ADVERTISEMENT

செய்முறை 

முதலில் கற்றாழை இலையை இரண்டாக பிரித்தெடுத்து அதிலிருக்கும் மஞ்சள் நிறம் போகும் வரை கழுவ வேண்டும். அதன் பின் ஒரு பீலர் கொண்டு தோலை உரித்துக் கொள்ளுகள். அதற்கு பிறகு ஒரு ஸ்பூன் கொண்டு வழவழப்பாக இருக்கும் ஜெல்லை தனியாக எடுக்க வேண்டும்.

உங்களுக்கு தேவையான கெல்லை எடுத்து கொள்ளுங்கள். ஒரு இலையிலிருந்து அரை கப் ஜெல்லை எடுக்கலாம். பின்னர் இந்த ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுள் விட்டமின் ஈ மற்றும் சி கேப்ஸ்யூலிருந்து எண்ணெயை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

youtube

இதனை ஒரு காற்றுப் புகா டப்பாவில் போட்டு ஃப்ரிஜில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும். அதன் பின் அதனை உபயோகிக்க ஆரம்பிக்கலாம். பயன்படுத்திய பின்னர் தொடர்ந்து  ஃப்ரிஜில் வைத்திருந்தால் இது (aloe vera gel) கெட்டுப் போகாமல் இருக்கும். இதனை சருமம் மற்றும் கூந்தலுக்கு தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் எந்த விதமான கெமிக்கல்களை கலக்காததால் பக்கவிளைவுகள் ஏற்படாது. 

மேலும் படிக்க – கழுத்தில் அசிங்கமாக இருக்கும் கருமை நிறத்தை நீக்க எளிமையான குறிப்புகள்!

  • இந்த கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள், தேன், பால், ரோஸ்வாட்டர்  சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். இதனை சுமார் 20 நிமிடங்கள் முகம், கழுத்தில் தேய்த்துக்கொள்ளலாம். பின்னர் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுகிவினால் வெயிலினால் உண்டான கருமை நீங்கி சருமம் பிரகாசமடையும். 
  • கற்றாழை ஜெல்லில் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் இருப்பதால் இவை பல்வேறு ஃபேஸ் பேக்குகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கற்றாழை சேர்த்துள்ள ஃபேஸ் பேக்குகள் சருமத்தை ஆரோக்கியத்துடனும் பிரச்சனையின்றி பாதுகாப்புடனும் வைத்துக் கொள்கிறது.

ADVERTISEMENT

pixabay

  • சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.
  • கற்றாழை ஜெல்லை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. கூந்தலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் கற்றாழையில் இருந்து கிடைப்பதால் கூந்தலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது. இதனால் சரியான பிஎச் அளவு  கிடைப்பதால் நீளமான கூந்தலை பெறலாம்.
  • கற்றாழை ஜெல்லுடன் (aloe vera gel) தேங்காய் எண்ணெய் சேர்த்து ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளித்தால் கூந்தல் பொலிவோடு இருப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகினால் என்னவாகும்? தாகத்தின் காரணங்களும் விளைவுகளும் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
27 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT