இயற்கை பொருட்களை கொண்டு வீட்டில் எளிதாக தயாரிக்க கூடிய சில கொசு விரட்டிகள்!

இயற்கை பொருட்களை கொண்டு வீட்டில் எளிதாக  தயாரிக்க கூடிய சில கொசு விரட்டிகள்!

மழைக்காலத்தை தொடர்ந்து, கொசுக்களின் தொல்லை ஆரம்பமாகும் காலம் இது. இரவில் கடிப்பதைவிட பகலில் கடிக்கும் கொசுக்கள் தான் நோய் கிருமியை அதிகம் பரப்புகிறது. தண்ணீரைத் தேங்க விடாமல் சுற்றுப்புறத்தை வைத்துக்கொள்ள வேண்டும், குளிர் சாதன பெட்டியின் பின்னால் உள்ள தட்டில் தேங்கும் தண்ணீரில் கூட கொசுக்கள் முட்டையிட்டு வளருகிறது என்று தற்சமயம் சமூக வளைத்தளங்களின் வாயிலாக நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறனர். பயந்துபோய் கொசு விரட்டும் லிக்விட்களை வாங்கி மாட்ட ஆரம்பித்து விட்டீர்களா? அதனால், கொசு(mosquito) போகிறதோ இல்லையோ கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற உபாதைகள்தான் தோன்றும். 

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு கொசுவை எப்படி விரட்டுவது (natural repellent) என்று பார்க்கலாம்.

1. வேப்பந்தலை

Shutterstock

நம்ம ஊரில் எளிதில் கிடைக்கக் கூடியது வேப்பிலை. இந்த வேப்பந்தலைகளை வெயிலில் காயவைத்து வைத்துக்கொள்ளுங்கள். காய்ந்ததும் எரித்து அந்தப் புகையை வீடு முழுவதும், மூலைகளில் எங்கெல்லாம் கொசுக்கள் அண்டுமோ அங்கெல்லாம் புகையை பரப்புங்கள். வேப்பிலை புகையினால் கொசுக்கள் உடனடியாக இறந்துவிடும்.

2. லெமன் க்ராஸ் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய்

ஜோஜோபா எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யோடு, லெமன் க்ராஸ் எண்ணெய், மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். இதை உங்கள் உடலில் தடவிக்கொள்ளலாம். லெமன் க்ராஸ் மற்றும் ரோஸ்மேரி ஆகிய இரண்டு எண்ணெய்களிழும் கொசுவை விரட்டும் காரணிகள் உள்ளன.

3. தேங்காய் எண்ணெய்

Shutterstock

  • வேப்பெண்ணை : தேங்காய் எண்ணெய்யில் சிறிது வேப்ப எண்ணெய்யைக் கலந்து கை, கால்களுக்கு பூசிக்கொள்ளலாம். கொசுக்கள் கடிக்காது. வேப்பங்கொட்டையில் தயாரான இந்த எண்ணெயின் வலுவான வாசம் கொசுக்களுக்கு பிடிக்காது.
  • பெப்பர்மின்ட் எண்ணெய் : தேங்காய் எண்ணெய்யில் சிறிது பெப்பர்மின்ட் எண்ணெய்யைக் கலந்து கை, கால்களுக்கு பூசிக்கொள்ளலாம். பெப்பர்மின்ட் உள்ள மென்தால் கொசுக்களை விரட்டக்கூடியது. 
  • டீ ட்ரீ எண்ணெய் : தேங்காய் எண்ணெய்யில் சிறிது டீ ட்ரீ எண்ணெய்யைக் கலந்து கொசு கடிக்கும் இடங்களில் பூசிக்கொள்ளலாம். டீ ட்ரீ எண்ணெய்யில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-இன்பிலமேட்டரி தன்மைகள் கொண்டது. கொசுக்கடியினால் ஏற்பட்ட தடுப்புகளையும் சரி செய்து, கொசுக்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும்.

4. லெமன் யூக்கலிப்டஸ் எண்ணெய்

எலுமிச்சையின் புளிப்புத் தன்மை கொண்ட எந்தப்பொருளும் கொசுக்களுக்கு எதிரி. அப்படி லெமன் யூக்கலிப்டஸ் எண்ணெய் ஒரு பங்கு, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் 9 பங்கு சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை தடவினால், கொசுக்கள் அண்டாது. 

5. தேன் மற்றும் மெழுகு

Shutterstock

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு செய்யுங்கள். மற்றொரு சின்ன பாத்திரத்தில் தேன் மெழுகை வைத்து, கொதிக்கும் நீரில் வைத்து விடுங்கள். ஐந்து நிமிடங்களில் மெழுகு உருகிவிடும். இதோடு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொண்டு ஒரு சின்ன கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். ஆறியதும் திடமாகி விடும். கொசு கடிக்கும் இடங்களில் பயன்படுத்தினால் கொசு கடிக்காது.

6. ஆப்பிள் சிடர் வினீகர் மற்றும் எண்ணெய் ஸ்பிரே

எண்ணெய் தேய்த்தால் சிலருக்கு பிடிக்காது. பிசு பிசுவென இருப்பதாக உணர்வார்கள். அவர்களுக்காக இந்த ஆப்பிள் சிடர் வினீகர் ஸ்பிரே. ஆப்பிள் சிடர் வினீகருடன், சம பங்கு தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். அதோடு ஏதாவதொரு எண்ணெய் பத்து சொட்டு சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கொசு ஸ்பிரே பிசு பிசுப்பு இல்லாமல் ரெடி!

கொசு கடிக்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Shutterstock

1. தூங்கும்போது கொசுவலை பயன்படுத்தலாம். எந்த ஒரு சிரமும் இல்லாமல், நிம்மதியான தூக்கம் வரும். படிக்கும் குழந்தைகளுக்கு இந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தினால், கொசுவினால் தொந்தரவு இல்லாமல், நோய் பரவும் பயம் இல்லாமல் நன்றாக படிக்கலாம். 

2. மூன்று  வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த கொசு விரட்டிகளைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. ஏன்னெனில், அவர்கள் தவறுதலாக விரல்கள், கைகளை வாயில் வைக்க வாய்ப்புகள் அதிகம். 

3. உடலில் காயம் உள்ள இடங்களில் கொசு விரட்டுவானை பயன்படுத்தாதீர்கள். எரிச்சல் ஏற்படுத்தும்.

பழைய கொசு விரட்டும் லிக்விட் ரெபெல்லெண்ட் காலியானவுடன் நன்றாக சுத்தம் செய்து, அதில் மேலே கூறிய எண்ணெய் வகைகளை ஊற்றி பயன்படுத்தலாம். செயற்கை திரவங்கள் நிச்சயம் தீங்கு விளைவிக்கும். இப்படி இயற்கை முறையில் கொசுவிடம் இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.

 

மேலும் படிக்க - டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் : அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் !