பெண்கள் வெள்ளி நகைகள் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பாதுகாக்கும் முறைகள்!

பெண்கள் வெள்ளி நகைகள் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பாதுகாக்கும் முறைகள்!

நகைகள் அணிவது நமது பாரம்பரித்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உடலின் ஒரு சில முக்கிய பகுதிகளுக்கென தனித்தனியான நகைகள் உள்ளன. இவை அழகிற்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்காகவும் அணியப்படுகின்றன. அந்த வகையில் வெள்ளி நகைகளை அணிவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து இங்கு பாப்போம். 

 • இந்தியாவில் வெள்ளிக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். இதனால் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் வெள்ளி நகைகள் அணிந்து கொள்வது நல்லது. 
 • வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. 
 • பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படும். இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம். இதற்காக தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கொலுசு (silver) அணிவிக்கப்படுகிறது.
pixabay

 • வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. 
 • மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.
 • கருப்பைக்கான முக்கிய நரம்புகள், கால் விரல்களிலேயே இருக்கிறது. இது கருப்பை நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெற்றுள்ளது. இதன் காரணமாக தான் திருமணத்திற்கு பின்னர் மெட்டி அணிய வேண்டும் என பெண்களை அறிவுறுத்துகின்றனர். 

எப்படி வேகம் குறைந்த குழந்தையை ஊக்கவித்து விரைவாக வேலைகளை செய்ய வைப்பது?

 • இதேபோல உடலின் நடுப்பகுதியான இடுப்பில் அரை நாண் அணியும் முக்கிய நோக்கமே உடலில் ரத்த சுற்றோட்டத்தை பேணுவதற்கு தான். ரத்த ஓட்டம் சீராகவும், சமநிலையுடனும் இருக்கவே அரை நாண் கொடி பயன்படுகிறது.
 • ஆண், பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.
pixabay

 • விரல்களில் அணியும் மோதிரம் டென்ஷனை குறைக்கவும், அழகான குரல் வளத்திற்கும் உதவுகிறது. 
 • வெள்ளி மோதிரம் (silver) அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கும். இதய கோளாறுகள் ஏற்படும் என்பதால் சுண்டு விரலில் மோதிரம் அணிவது தடுக்கப்படுகிறது.

ஒரு பாதுகாப்பான நிதியை உருவாக்குவது எப்படி? பெண்களுக்கான சில பயனுள்ள நிதி குறிப்புகள்

வெள்ளி நகைகள் - பாதுகாப்பு

 • வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல் மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் பளபளப்பாக  இருக்கும். 
 • நகைகளை தனித்தனிப் பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அப்போது தான் அதில் கல் போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும். 
 • வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைதத் தவிர்க்கலாம்.
 • குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
pixabay

 • புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல்  இருக்கும்.
 • வெள்ளி நகைகளை (silver) ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்து துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். 
 • வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில்  சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போது மானது.
 • அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டு சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும். 
 • வெள்ளி கொலுசுகளின் பளபளப்பு  மங்கி விட்டால் வெள்ளி கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்து  கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.

அனைத்து சிறப்பு நிகழ்சிகளுக்கும் மற்றும் சூழலுக்கும் பெண்கள் தேர்வு செய்ய சில ஆடை குறிப்பு

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!