நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் (ganesh venkatraman) அபியும் நானும் மூலம் அறிமுகம் ஆனார். ஆனால் உன்னை போல் ஒருவன் திரைப்படம் அவருக்கு தனி பெயரை பெற்று கொடுத்தது. அதன் பின்னும் வாய்ப்புகள் இல்லாமல் காத்திருந்த கணேஷிற்கு பிக் பாஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்தி கொண்டார். ரன்னர் அப் வரை வந்தார். இவரது மனைவி நிஷா (nisha) சீரியல்கள் நடித்திருந்தார். கனா காணும் காலங்கள், தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, மஹாபாரதம் போன்ற தொடர்களில் நடித்திருந்தாலும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் இவருக்கு பிரேக் கொடுத்தது.
இரண்டாவது திருமணத்தை இனிதே முடித்தார் மைனா நந்தினி - புகைப்படங்கள்
அதன் பின்னர் கதைப்படி தன்னுடைய கதாபாத்திரத்தின் போக்கு தன்னுடைய குணத்திற்கு எதிராக இருந்ததால் எதிர்மறை கேரக்டரில் நடிக்க விரும்பாமல் அதில் இருந்து விலகி விட்டார். புகழ் கிடைத்தாலும் மனதிற்கு ஒப்புதல் தரும் விஷயங்களை செய்து வாழ்கின்றனர் இவர்கள் இருவரும்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே நிஷா கர்ப்பம் என தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து வெளியில் வந்த சில மாதங்களில் மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் கணேஷ் வெங்கட்ராமன்.
அம்மாவும் அப்பாவும் பிரிந்தது நல்லதுதான்.. கமல்ஹாசன் சரிகா பற்றி ஸ்ருதி ஹாசன்
கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி இந்த தம்பதி ஒரு அழகிய பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். இதனையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் கணேஷ் வெங்கட்ராமன். மருத்துவமனை மருத்துவர் குழுவோடு புகைப்படம் எடுத்து அவர்களுக்கும் நன்றி கூறியிருந்தனர்.
இந்நிலையில்தான் குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் ஆன சமயத்தில் ஒரு போட்டோ ஸூட் நடத்தி இருக்கிறார் கணேஷ் வெங்கடராமன். இம்முறை குழந்தையின் அழகிய முகத்தை முதல் முறையாக உலகிற்கு காட்டி இருக்கின்றனர் நிஷா கணேஷ் ஜோடி.
பாதி நிஷா மீதி கணேஷ் என இவர்கள் இருவர் ஜாடையில் இவர்களின் பெண் குழந்தை சமைராவின் அழகு பார்க்கும் நம் கண்களை கொள்ளையடிக்கிறது.
அப்போதுதான் பூத்த பூக்கள் போல எப்போதும் பிரெஷ் லுக் வேண்டுபவர்க்கு சில ரகசிய குறிப்புகள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!