எதிர்பார்த்ததை விட வேகமாக கடலில் மூழ்க போகும் சென்னை, மும்பை! இன்னும் 30 வருடங்களே மிச்சம்

எதிர்பார்த்ததை விட வேகமாக கடலில் மூழ்க போகும் சென்னை, மும்பை! இன்னும் 30 வருடங்களே மிச்சம்

புவி வெப்பமயமாதல் பனி வேகமாக உருகுதல் அதனால் கடல் நீர் மட்டம் அதிகமாதல் (global heat belt) இதன் காரணமாக சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட ஏழு நகரங்கள் இன்னும் 100 வருடங்களுக்குள் கடலில் மூழ்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.                                              

இதனை ஆராய்ந்து கூறிய நிறுவனம் கிளைமேட் சென்ட்ரல் எனும் அமெரிக்க நிறுவனம் ஆகும். மூன்று கோடிக்கும் மேலான இந்தியர்கள் ஆபத்தில் இருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த ஆராய்ச்சி மேலும் தொடர்ந்தது. தற்போது கடல் நீரால் மூழ்க போகும் நாடுகளில் 75 சதவிகிதம் ஆசியாவை சேர்ந்தது எனும் அதிர்ச்சி தகவலை கூறியிருக்கின்றனர்.                                               

Youtube

இதை விட அதிர்ச்சியான தகவலாக அவர்கள் கூறியிருப்பது எதிர்பார்த்ததை விட வேகமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்னும் 30 வருடங்களில் 30 கோடி மக்கள் ஆபத்தில் சிக்க போவதாக தெரிவித்திருக்கின்றனர்.       

இந்தியா, சீனா, வியட்னாம், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய 6 நாடுகள் இந்த கொடிய வெள்ளத்தில் சிக்கும் அபாயங்கள் அதிகமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இப்போது கடலோர நகரங்களான சென்னை, மும்பை, கல்கத்தா உள்ளிட்ட ஏழு நகரங்கள் வருகின்ற 2050குள் முழுமையாக கடலில் மூழ்கும் என கூறப்படுகிறது.                                      

Youtube

இதற்கான காரணமாக அவர்கள் கூறுவது அதிகப்படியான கார்பன் உமிழ்வதுதான் என்கிறார்கள். கார்பன் உமிழ்வதை குறைத்தால் இதில் இருந்து சென்னை உள்ளிட்ட  நகரங்களை காப்பாற்றி கொள்ள முடியும் என்கிறார்கள்.             

அதிகமான மரம் நடுதல் இதற்கு நல்லதொரு தீர்வாக இருக்கலாம். அதைப்போலவே கார்பன் உமிழும் வாகனங்களை குறைப்பது இயற்கையை அதன் எல்லை மீறாமல் காக்கும்.                                               

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!