ஹை ஹீல்ஸ் அணியும் பெண்கள் கவனத்திற்கு : ஆபத்துக்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!

ஹை ஹீல்ஸ் அணியும் பெண்கள் கவனத்திற்கு : ஆபத்துக்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்களுக்கு அழகான தோற்றத்தை தரக்கூடிய பொருட்களில் ஒன்று ஹை ஹீல்ஸ். ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் (high heels) செருப்புகளில் சரணடைகிறார்கள்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் புதிய டிசைங்களுடன் ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது.  ஆனால் ஹை ஹீல்ஸ் அணிவது ஆரோக்கியமானது அல்ல என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஹை ஹீல்ஸ் அணிவதால் உண்டாகும் ஆபத்துக்கள்

 • முதுகெலும்பு நகர்வு, மூட்டிணைப்பு இடம் நகர்வு போன்ற உடல் தோற்ற பிரச்சினைகளுக்கு ஹை-ஹீல்ஸ் காரணமாக அமைகிறது.
 • எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து விரிசல்கள், முறிவுகள் ஏற்படலாம். மேலும் நரம்புகளை கிள்ளும் உணர்வால் அதிகபட்சவலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. 
 • காலை உயர்த்திய நிலையிலேயே வைத்திருப்பது குறுகிய கால்தசைநார் வலியை உருவாக்கலாம். இதனால் சிறிது நாட்களுக்கு பின்னர் தட்டையான காலணிகளை அணிய முடியாமல் போகலாம். 
pixabay

 • ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிப்பதால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. இதனால் முதுகு வலியும் ஏற்படுகிறது. 
 • ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். 
 • அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும். மேலும் பிக் பக்கம் அதிக எடை போடும் வாய்ப்பும் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 
 • சிலநேரங்களில் இறுக்கமான `ஹை ஹீல்ஸ்’ அணியும்போது கால் விரல்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் விரைவில் கால் விரல்கள் உணர்வுகளை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. 
 • தற்போது பெண்கள், ஹை ஹீல்ஸ் (high heels) அணிவதால் உண்டாகும் வலியை போக்க பாத பகுதியில் `டெர்மல் பில்லர் இன்ஜெக்ஷன்களை’ போட்டுக் கொள்கின்றனர். அது இன்னும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 
pixabay

 • காலணியின் உயரம் தொடர்ந்து உயர்த்தப்படும்போது  `ஆச்சிலஸ்’ இழை போன்றவை சுருங்குகின்றன. இதனால் காலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். 
 • ஹீல்ஸ் அணிவதால் பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் வரும் ஆபத்து அதிகம் உள்ளது.
 • உடல் எடையை காலனியின் கூரான முனைகளே தாங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால் கொஞ்சம் பிசகினாலும் தசைப்பிடிப்பு, கீழே விழுந்து அடிபடும் நிலை ஏற்படலாம்.
 • உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் ஹை ஹீல்ஸ் அணிவதை அறவே தவிர்த்து விடவேண்டியது நல்லது. 
 • ஹை ஹீல்ஸ் அணிவதால் பாத மூட்டுக்கும், கால்விரல்களுக்கும் இடையே உள்ள எலும்புகள் தங்களுக்கு இடையே செல்லும் நரம்புகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் நரம்புகள் பாதிக்கும் அபாயமும் உண்டாகிறது. 
pixabay

ஹீல்ஸ் அணிவோர் கவனிக்க வேண்டியவைகள் 

 • ஹீல்ஸ் (high heels) அணிவதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள்.
 • சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.
 • ஹீல்ஸ் அணியும் போது காலில் வலி, வீக்கம் அதிகமானால் காலணிகளை கழற்றிவிட்டு அமருங்கள். 
 • ஹீல்ஸ் செருப்புகளை உபயோகப்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் அவற்றை மிக நீண்ட நேரம் எல்லாம் பயன்படுத்துவது கூடாது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                       

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!