1980களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் எட்டாவது ஆண்டாக சந்திப்பு : வைரல் புகைப்படங்கள்!

1980களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் எட்டாவது ஆண்டாக சந்திப்பு : வைரல் புகைப்படங்கள்!

தென்னிந்திய திரையுலகம் 1980-களில்தான் பெரிய வளர்ச்சி கண்டது. அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் அறிமுகமானவர்கள் முன்னணி கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் கொடி கட்டி பறந்தார்கள்.  

அப்போதைய நடிகர்களைத்தான் ஒவ்வொரு மொழியிலும் இன்றைக்கும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 1980-களில் கொடிகட்டிப் பறந்த தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர். மகாபலிபுரம் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.  இரவு 7 மணிக்கு தொடங்க இருந்த நிகழ்வுக்கு காலையிலேயே நடிகர் (actor) – நடிகைகள் வரத் தொடங்கிவிட்டனர். 

twitter

நடிகைகள் சுஹாசினியும், லிசியும் அவர்களை வரவேற்றனர். நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பூ, நடிகர் ராஜ்குமார் சேதுபதி அவர்களுக்கு உதவியாக இருந்தனர். இந்த வருடம் ஊதா நிறம்தான் அனைவரின் உடை வண்ணமாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

   மேலும் படிக்க - என் காதல் பயணம்.. சாக்லேட் பாய் மேடி மாதவன் சொல்லும் காலம் தோறும் கசக்காத காதல் சீக்ரட் !

எனவே நிகழ்வு நடைபெற்ற இடமும் ஊதா நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், பாக்யராஜ், ராஜ்குமார், அர்ஜுன், நரேஷ், பானுசந்தர், சுமன், சுரேஷ், ரகுமான் ஆகிய 12 நடிகர்களும், சுஹாசினி, குஷ்பூ, ராதிகா சரத்குமார், 

அம்பிகா, ராதா, ஜெயசுதா, பூனம் திலோன், பூர்ணிமா பாக்யராஜ், ரம்யா கிருஷ்ணன், பார்வதி ஜெயராம், சுமலதா, லிசி, ரேவதி, மேனகா, ஷோபனா, நதியா ஆகிய 16 நடிகைகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அனைவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து இருந்தனர். 

twitter

ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், கட்டிப்பிடித்தும் நலம் விசாரித்தனர். பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

1960 மற்றும் 70களில் வெளியான மெல்லிசைப் பாடல்களை ரேவதி, குஷ்பூ, சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், சுமலதா, நரேஷ், ராதிகா சரத்குமார் ஆகியோர் பாடினர். நன்றாகப் பாடியதற்காக ரேவதி மற்றும் குஷ்பூவுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் ஆண்கள் (actor) மற்றும் பெண்களுக்கான ராம்ப் வாக்கும் நடைபெற்றது. இதில், சிரஞ்சீவி தலைமையிலான ஆண்கள் அணி வெற்றி பெற்றது. பூனம், ஜாக்கி ஷெராஃப், பாக்யராஜ், வெங்கடேஷ், சுரேஷ் ஆகியோரின் பாடல்களைப் பாடகர் ஸ்ரீராம் பாட, சம்பந்தப்பட்டவர்கள் அந்தப் பாடல் தொடர்பான சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். 

                           மேலும் படிக்க - அப்படியே அம்மா எமி ஜாக்சனை உரித்து வைத்திருக்கும் மகன் ஆண்ட்ரியாஸ் ! வைரல் புகைப்படம்!

இரண்டாவது நாளாகத் தொடர்ந்த இந்த சந்திப்பில் ஆன்மீகம் உள்ளிட்ட சில தலைப்புகளை விவாதித்தனர். இந்த நிகழ்ச்சிக்குப்பின் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. அப்போது நடிகர்-நடிகைகள் (actor) அனைவரும் நடனம் ஆடி மகிழ்ந்தார்கள். 

 
 
 
View this post on Instagram
 
 

All about #80sParty 🎀 Hosted by #megastarchiranjeevigaru😍

A post shared by Konidela SivaSankaraVaraPrasad (@megastar_chiranjeevi) on

பின்னர் அனைவரும் விடைபெற்று சென்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 1980-களில் திரையுலகில் கொடிகட்டிப்பறந்த நடிகர், நடிகைகளுக்கு இடையே இத்தனை வருடங்கள் கழிந்தும் ஒரு நல்ல நட்புறவு தொடர்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க - நித்யானந்தாவுடன் இருக்கும் புகைப்படம் உண்மையானது இல்லை : பாடகி சின்மயி விளக்கம்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!