தமிழ்நாட்டில் எத்தனை மலை வாசஸ்தலங்கள் இருந்தாலும் இன்றும் அதிகளவு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகின்ற ஊட்டிதான். ஊட்டி கண்களுக்கு அழகான செயல்பாடுகளாலும், பயணிகளின் மகிழ்ச்சியையும் நிறைவு செய்கிறது இடமாக விளங்குகிறது.
ஊட்டியில் அமைந்துள்ள இடங்களை பார்வையிட திட்டமிடும் செயல் கடினமாக இருந்தாலும், கண்களுக்கு விருந்தளிக்ககூடிய காட்சிகளையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஊட்டியில் சுற்றி பார்க்க இருக்கும் அழகான இடங்கள் குறித்த தொகுப்பை இங்கு காண்போம்.
ஊட்டி ஏரி
ஊட்டிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது ஊட்டி ஏரி. இந்த செயற்கை ஏரி 1824ல் 65 ஏக்கர் பரப்பளவில், ஜான் சல்லிவன் என்பவரால் கட்டப்பட்டது. மழை காலத்தில் மலையிலிருந்து கீழே பாயும் நீரை சேகரிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஏரியில் படகுச் சவாரி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்த படகுச் சவாரி மூலம் ஏரியின் கண்ணுக்கு அழகை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் படகு போட்டி நடைபெறுகிறது.
மேலும் படிக்க – தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயணத்திற்கான குறிப்புக்கள்!
பொடானிக்கல் கார்டன்
பொடானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா 22 ஹெக்டேர் பரப்பளவில், ஊட்டியில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா மலை சரிவுகளில் விரிந்துள்ள இந்த பூங்கா பசுமையான கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. தற்போது 117 குடும்பங்களை சேர்ந்த 2000 தாவரங்கள் உள்ளன.
மேலும் 350 வகை ரோஜாக்கள், 60 வகை டேலியா, 30 ரக கிளாடியோலை உட்பட ஏராளமான மர வகைகளும் பாதுகாக்கப்படுட்டு வருகிறது. மேலும் செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பொன்சாய் வகைத் தாவரங்கள் உள்ளன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் வருகிறார்கள். பூங்கா வளாகத்தில், குறைந்தது 20 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிற ஒரு மரத்தின் தண்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.
தொட்டபெட்டா சிகரம்
கடல் மட்டத்தில் இருந்து 2,623 மீ உயரத்தில் தொட்டபெட்டா சிகரம் உள்ளது. தென்னிந்தியாவில் உயரமான சிகரமான தொட்டபெட்டா சிகரம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தமிழ்நாடு சுற்றுலா கழகம் சார்பில் காட்சிமுனை அமைக்கப்பட்டு டெலஸ்க்கோப் நிறுவப்பட்டுள்ளன. தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து சாமுண்டி மலையை தெளிவாக பார்க்க முடியும்.
தொட்டபெட்டா மலைச் சிகரம் உச்சியில் இருந்து குல்குடி, கட்ல்தடு மற்றும் ஹெகுபா உள்ளிட்ட சிகரங்கள் தெரியும். இந்த மூன்று சிகரங்களும் ஊட்டிக்கு நெருக்கமாக அமைந்துள்ளன. அதன் உச்சியில் உள்ள தட்டையான வளைவே தொட்டபெட்டாவின் சிறப்பாகும். ஊட்டி – கோத்தகிரி (ooty) சாலையில் ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் தொட்டபெட்டா சிகரம் உள்ளது.
வென்லாக் டவுன்ஸ்
வென்லாக் டவுன்ஸ ஊட்டியின் அருகில் படப்பிடிப்புகளுக்குப் பெயர் போன ஒரு அழகான இடம். திரண்டிருக்கும் மலைகள், பச்சைப் பசேல் வயல்கள், திறந்த வெளிகள் என முடிவில்லாமல் பரந்திருக்கும் பசுமை உங்கள் இதயத்தை நிரப்பும்.
மேலும் படிக்க – இன்னொரு தாய்லாந்தாக மாறும் சென்னை.. சைல்டு செக்ஸ் paedophileகளின் கூடாரம் ஆகிறதா சென்னை ?
வென்லாக் டவுன்ஸ் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் கம்பீரமாக நிற்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் மத்தியில் உள்ளது. சுதந்திர இந்தியாவில் வேட்டை தடை செய்யப்பட்ட இடம். இப்போது இந்த இடத்தில் கோல்ப் மைதானம் மற்றும் அரசு ஆடு பண்ணை கொண்ட ஜிம்கானா கிளப் உள்ளது.
முக்கூர்த்தி தேசிய பூங்கா
நீலகிரியின் மேற்குப் பகுதியில் முக்கூர்த்தி தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்கா ஊட்டி மலையின் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த இடத்தில் ஒரு தேசிய பூங்கா அமைக்கப்பட முக்கிய காரணம், நீலகிரியின் தார் வகையை பாதுகாக்கவே. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக இருப்பதால் இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையமாகத் திகழ்கிறது. பூங்காவில் கொல்லரிபெட்டா , முக்கூர்த்தி மற்றும் நீலகிரி சிகரம் சிகரங்களும் உயர்ந்துள்ளன.
ஊட்டி ரோஜாத்தோட்டம்
ரோஜாக்களை பெரியளவில் உற்பத்தி செய்யக்கூடிய இடமாக அமைந்துள்ளது. இங்கு வளரும் ரோஜாக்கள் விரும்பக்கூடியதாக இருப்பதால் சந்தையில் அதிக விலையை பெற்றுள்ளது. பல்வேறு வகையான ரோஜாக்கள் இங்கு இருப்பதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதைக் காண வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் இங்கு மலர் கண்காட்சி (ooty) நடைபெறுகிறது. 150 வகையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுவதால் இந்த மலர் கண் காட்சி மிகவும் பிரபலமாக உள்ளது.
க்ளென்மார்கன்
ஊட்டியில் (ooty) இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கண்ணுக்கினிய க்ளென்மார்கன் கிராமம் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த கிராமத்தில் சிறப்பு தேயிலை தோட்டங்கள் உள்ளன. க்ளென்மார்கன் கிராமத்தில் ஒரு பிரபலமான ஈர்ப்பு மின் நிலையத்திலிருந்து ஒரு கயிற்றுப்பாதை உள்ளது.
மேலும் படிக்க – குளிர்காலத்திற்கு ஏற்ற 12 சிறந்த ஸ்வெட்டர்ஸ் மற்றும் ஜாக்கெட் ரகங்கள்!
3 கி.மீ. நீண்டுள்ள இந்தக் கயிற்றுப்பாதை 980 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இது ஜேர்மன் பாயிண்ட் என அழைக்கப்படும் பகுதியில் 41 டிகிரி சாய்வுடன் உள்ளது. தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த அற்புதமான காட்சியால் இந்த இடம், உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
பைக்காரா ஏரி
முதுமலை தேசிய பூங்காவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைக்காரா ஏரி, இயற்கையின் அளவில்லா அழகுக்கு ஒரு சிறந்த உதாரணம். இந்த ஏரி காண்பதற்கு ஒரு அற்புதமான அழகாக பச்சை தண்ணீருடன் உள்ளது. வென்லாக் டவுன்ஸ் என்ற ஒரு பரந்த பசுமையான புல்வெளி இந்த ஏரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏரியில் ஒரு படகு இல்லத்தைப் பராமரிக்கிறது. உள்ளே ஒரு உணவகம் கொண்ட இந்த படகு இல்லம், பார்வையாளர்கள் ஏரியை சுற்றிப் பயணம் செய்ய உதவுகிறது. இங்கு காலை 8.30- 5.00 வரை படகு சவாரி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!