சரும அழகை அதிகரிக்கும் ஒயின்.. பெண்கள் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா !

சரும அழகை அதிகரிக்கும் ஒயின்.. பெண்கள் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா !

நண்பர்களும் ஒயினும் பழையதாக இருப்பதே நல்லது என்று ஒரு பழமொழி உண்டு. திராட்சை ரசத்தை புளிக்க வைத்து அருந்துவதே ஒயின் எனப் படுகிறது. மதுபானம் என்று இது அழைக்கப்பட்டாலும் ஒரு மருந்திற்கான அத்தனை குணங்களையும் ஒயின் (wine) கொண்டுள்ளது.                                  

தொடர்ந்து தினமும் ஒரு டம்ளர் அளவில் பெண்கள் ஒயின் சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவாக மாறும். ரத்தம் சுத்தமடைவதால் நிறம் மேம்படும். நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் இருப்பதால் முதுமையை உங்கள் பக்கம் வர விடாது.                             

Pinterest

ரெட் ஒயினை தினமும் ஒரு டம்ளர் அளவில் (140ml) எடுப்பவர்களுக்கு இதய நோய் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. புற்று நோயை எதிர்க்கும் தன்மை இதில் அதிகமாக இருக்கிறது. திராட்சையை தோலுடன் சேர்த்து செய்யப்படுவது தான் ரெட் ஒயின் இதுவே உடல் நலத்திற்கு நல்லது.

ரெட் ஒயினில் அதில கலோரிகள் இல்லாததால் மற்ற மது பானங்கள் அருந்துவது போல இதில் தொப்பை ஏற்படுவதில்லை. மற்ற பானங்களை அருந்துபவர்களை விட ரெட் ஒயின் அருந்துபவர்கள் உடல் 10 பவுண்ட் குறைந்த எடையுடன் இருக்குமாம்.                                                                                      

 

Pinterest

நமது டி என் ஏ வை சரி செய்யும் ஆற்றல் ரெட் ஒயினுக்கு இருக்கிறது. ரெஸ்வெஸ்டரால் எனப்படும் இந்த தன்மையால் உடலில் கட்டிகள் இருந்தாலும் அதனை தானாகவே கரைக்கின்ற ஆற்றல் பெற்றது. பாதிக்கப்பட்ட நரம்புகளை குணப்படுத்துகிறது. தினமும் ஒரு டம்ளர் ஒயின் உங்கள் வாழ்வை நீட்டிக்கும்.

ரெட் ஒயினில் மெலடோனின் அதிகம் சுரப்பதால் ஆழ்ந்த அமைதியான உறக்கம் உங்களுக்கு வரும். சிவப்பு திராட்சையில் தயாரிக்கப்படும் ஒயின் உங்களுக்கு நல்ல தூக்கத்தை தரும். உறங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு இதனை பருக வேண்டும்.                                                                                   

 

Pinterest

புற ஊதாக் கதிர்கள் மூலம் சருமத்திற்கு ஏற்படும் காயங்களை தடுப்பதில் ரெட் ஒயின் சிறந்தது. தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் சாப்பிடுவதால் உங்கள் இளமைத்தன்மை குறையாமல் காக்கலாம். முதுமை வருவதை தள்ளி போடலாம். சருமம் மினுமினுப்பாக இருக்கும். அதனால் தான் நயன்தாரா போன்ற நடிகைகளும் இதனை அருந்துகின்றனர்.

புகைப்பிடிக்கும் பழக்கம் இப்போது இரு பாலினத்தாருக்கும் ஏற்படுகிறது. அப்படி பழக்கத்தை நிறுத்த விரும்புபவர்கள் தினமும் ஒயின் சாப்பிட்டு வந்தால் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் நீங்கும்.

ரெட் ஒயின் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது. அமெரிக்க நீரிழிவு அமைப்பு இதற்கான நிரூபணத்தை தந்திருக்கிறது. ரெட் ஒயின் சாப்பிடும் அன்று 24 மணி நேரத்திற்குள் ரத்த சர்க்கரை அளவு குறைவதாக நிரூபித்திருக்கிறது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக் கூடாது.

 

Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!