மினுமினுப்பான தேகத்திற்கு மீன் எண்ணெய் மாத்திரை! ஆரோக்கியம் ப்ளஸ் அழகு கேரண்ட்டி!

மினுமினுப்பான தேகத்திற்கு மீன் எண்ணெய் மாத்திரை! ஆரோக்கியம் ப்ளஸ் அழகு கேரண்ட்டி!

மீன் எண்ணெய் மாத்திரையா அய்யே என முகம் சுளித்து ஓடுபவர்கள் சில நிமிடம் நிதானித்து இந்த பதிவை படித்து விட்டு செல்லுங்கள். அதன்பின்னர் உங்கள் வீட்டிலும் ஒரு அங்கமாக இந்த மீன் எண்ணெய் மாத்திரை மாறி விடும்.

நாம் சாப்பிடும் மீன்கள் அல்லாது கடலில் உள்ள சுறாக்கள் மற்றும் ட்யூனா சால்மன் போன்ற அரிய வகை மீன்களிடம் இருந்து எடுக்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரை நம் உடலுக்கு மேலும் பலம் சேர்க்கிறது. முக்கியமாக அட்லான்டிக் கடலில் வாழும் பண்ணா வகை மீன்கள் மூலம் எடுக்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரைகள் (codliver oil) உடலுக்கு அற்புத மாற்றங்களை செய்கிறது. மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிடுவது மிக மிக அவசியம்.

youtube

பொதுவாக மீன்களை உணவில் அதிகமாக சேர்த்து கொள்பவர்களுக்கு முகம் பொலிவாகவும் மாசு மரு அற்றும் இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆகவே மீன்களிடம் சருமத்தை பொலிவாக வைத்திருக்கும் தன்மை இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள். அழகிற்காக ஆயிரம் சிகிச்சைகள் மேற்கொள்வதை விட சில மாதங்கள் தொடர்ந்து மீன் எண்ணெய் மாத்திரை எடுத்து வந்தால் உங்கள் சருமம் ஒளிர்வது கண்கூடாக தெரியும்.

மீன் எண்ணெய்யில் இருக்கும் ஒமேகா 3 உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது. ஜப்பான் மக்களுக்கு இதய நோய்கள் வராமல் இருப்பதற்கான காரணமாக கூறப்படுவது அவர்கள் உணவில் மீன் அதிக அளவில் இருப்பதுதான் என ஆய்வுகளால் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே தினம் ஒரு மீன் எண்ணெய் மாத்திரை (codliver oil tablets) உங்கள் வாழ்வை அதிகரிக்கும்.

 

youtube

மீன் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் டி சத்துக்கள் உங்கள் நகர வாழ்க்கையின் மன அழுத்தங்களை கட்டுக்குள் கொண்டு வருகிறது. மூளையில் செரோட்டனின் அளவு குறைவாக இருப்பதாலேயே மன அழுத்தங்கள் உருவாகின்றன. இதனை மீன் எண்ணெய் மாத்திரை சரி செய்கிறது. மீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி சத்து மூளையில் செரட்டோனின் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்கிறது. நரம்புகளில் உண்டாகும் பாதிப்புகளை போக்கி மனதை அமைதியாக்கி படபடப்பு தன்மையை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளுக்கு எலும்புகள் சம்பந்தமாக ஏற்படும் நோயான ரிக்கெட்ஸ் நோயை போக்க மருத்துவர்கள் மீன் எண்ணெய் மாத்திரையை பரிந்துரை செய்கின்றனர். மேலும் மருத்துவர்கள் பரிந்துரையோடு குழந்தைகளுக்கு மீன் எண்ணெய் மாத்திரை கொடுத்து வந்தால் மூளை வளர்ச்சி மேம்படும். இதில் உள்ள நன்மை தரும் கொழுப்புகள் ரத்தத்தை தடையின்றி உடல் முழுதும் ஓட செய்கிறது. இதனால் மூளை சோர்வடையாமல் காக்கிறது. எப்போதும் சுறுசுறுப்பை தக்க வைக்கிறது.

 

youtube

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மீன் எண்ணெய் மாத்திரை உட்கொள்வது மிக நன்மை தரும். ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாகவே கண்பார்வை திறன் குறைகிறது.இதில் உள்ள வைட்டமின் ஏ கண்களில் திசு வளர்ச்சியை கட்டுப்படுத்தி கண்பார்வையை பாதுகாக்கிறது. நரம்புகளின் அழுத்தங்களால் ஏற்படும் கண் அழுத்த நோயையும் தொடர்ந்து மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் போக்கி விட முடியும்.

அல்சர் எனப்படும் வயிறு அழற்சியை சரி செய்ய மீன் எண்ணெய் மாத்திரைகள் உதவுகின்றன. ஆரம்பத்தில் வயிறு எரிச்சலுடன் காணப்படும் அல்சர் நோய் போக போக வாந்தி உணவே உள்ளே செல்ல முடியாத நிலைமை வரை கொண்டு சென்று விடுகிறது. தொடர்ந்து மீன் எண்ணெய் மாத்திரை உட்கொண்டால் உங்கள் வயிற்றில் உள்ள நாள்பட்ட புண்களை ஆற்றி உங்களுக்கு உணவின் சுவையை அறியும் தன்மையையும் அதிகரிக்கிறது.

பார்த்தீர்களா ! இத்தனை நன்மைகள் கொண்ட மீன் எண்ணெய் மாத்திரைகளை மருத்துவர் அனுமதியுடன் கூறப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொள்ளுங்கள். சிறப்பாக வாழுங்கள். மாத்திரை எதற்கு நேரடியாகவே மீன் சாப்பிடுகிறேன் என்பவர்களுக்கு இன்னும் சில எக்ஸ்ட்ரா பாராட்டுக்கள் ! தினமும் மீன் சாப்பிட முடியாது என்பதாலேயே மாத்திரையை உட்கொள்ள பரிந்துரைக்கிறேன்.

 

youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!