சமீபத்திய வருடங்களில் ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது. ஆப்பிள் சாற்றில் பழச் சர்க்கரைகளை ஆல்கஹாலாக மாற்றுகின்ற ஈஸ்ட் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவதே ஆப்பிள் சீடர் வினிகராகும்.
பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த ஆப்பிள் சீடர் வினிகர் கூந்தல் முதல் பாதம் வரை அழகுச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடிய இந்த வினிகரை பயன்படுத்தி உங்கள் அழகை மெறுகேத்துவது எப்படி என்பது குறித்து இங்கு பாப்போம்.
- ஆப்பிள் கன்னங்களுக்கு : ஆப்பிள் சீடர் வினிகரைக் (apple cider vinegar ) கொண்டு தினமும் முகத்திற்கு சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் ஆப்பிள் போன்ற கன்னங்களைப் பெறலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி புத்துணர்ச்சி கிடைக்கும்.
pixabay
- சுருக்கங்கள் மறைய : முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்க, ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த நீரில் சிறிது சந்தனத்தூள் கலந்து பேக் போட வேண்டும். சிறிது நேரம் உலர்ந்தவுடன் கழுவினால் சுருக்கங்கள் மறையும்.
- கைகள் சுத்தமாக : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து கொண்டு, அதில் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகரை கலக்க வேண்டும். அதில் சிறிது நேரம் கை, கால்களை ஊறவைத்து அலம்பினால் நக இடுக்குகளில் இருக்கும் அழுக்குகள், கிருமிகள் போய்விடும்.
- பருக்களை நீக்க : ஆப்பிள் சீடர் வினிகர் இயற்கையாகவே முகப்பருக்களுக்கு எதிராக செயல்படக்கூடியது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், ஆண்டி ஆக்சிடென்டுகள் முகப்பருவால் ஏற்படும் தொற்றுகளை நீக்கி பருக்கள் மேலும் வராமல் தடுக்கிறது. இதனால் நீங்கள் பொலிவான சருமத்தை பெறலாம்.
- இளமையான தோற்றத்திற்கு : அனைத்து வித சருமத்திலும் ஆப்பிள் சீடர் வினிகர் செயலாற்றுகிறது. வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் பத்து நிமிடங்களுக்கு பிறகு கழுவி விட வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் இளமையான தோற்றம் தக்கவைக்கப்படும்.
மேலும் படிக்க – முகத்தை பளபளப்பாக்கும் அதிசய நன்மைகள் தரும் அவகேடோ!
pixabay
- கருமை மறைய : ஒரு கிணத்தில் பாதி அளவு நீரை நிரப்பி அதில் ஒரு டீ ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்க்கவும். இதனுடன் பேக்கிங் சோடா, தேன், எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதனை சருமத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவி விழுந்தால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் வெயிலால் ஏற்படும் கருமையும் மறைந்துவிடும்.
- பொலிவான சருமத்திற்கு : ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மிதமான சூடு தண்ணீரை நிரப்பி, அதில் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகரை கலக்க வேண்டும். வாரம் ஒரு முறை இந்த தண்ணீரில் ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள கிருமிகள் மற்றும் இறந்த செல்கள் வெளியேறி கன்னங்கள் நன்கு அழகாக காணப்படும்.
pixabay
- கரும்புள்ளிகள் நீங்க : ஒரு பௌலில் 2 டீஸ்பூன் அரிசி கழுவிய நீரை எடுத்து அத்துடன் 4-5 துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் (apple cider vinegar) சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில அப்ளை செய்த பின்பு 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
- சரும நிறத்தை அதிகரிக்க : ஒரு பௌலில் பூசணிக்காய் கூழ் எடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் தேன், பாதாம் பால், ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து (apple cider vinegar) நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு 20 நிமிடம் ஊற வைத்து உலர்ந்தவுடன் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சரும நிறம் அதிகரிப்பதை கண்கூடாக காணலாம்.
வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் தயாரிக்கும் முறை
pixabay
தேவையான பொருட்கள்:
ஆர்கானிக் ஆப்பிள் – 6,
தேன் – 2 கப்,
சர்க்கரை – 2 கப்,
தண்ணீர் – தேவையான அளவு.
செய்முறை:
ஆப்பிள்களை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போடவும். சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொள்ளவும். சர்க்கரை கரைசலை கண்ணாடி பாத்திரத்தில் ஆப்பிள்கள் மூழ்கும் வரை ஊற்றவும். அதில் தேனையும் சேர்த்து கொள்ளவும். பின்னர் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து அந்த பாத்திரத்தைகட்டி மூடவும்.
பிளாஸ்டிக் பேப்பரில் சில ஓட்டைகள் போடவும். இதனை ஒரு இருட்டான காற்று புகாத பகுதியில் இரண்டு வாரம் வைத்திருக்க வேண்டும். இதன் பின்னர் ஆப்பிள்கள் நொதித்து தன் நிறம் இழந்து சக்கையாக காட்சியளிக்கும்.
அதனை எடுத்து அப்படியே வடிகட்டி அந்த வடிகட்டிய நொதித்த தண்ணீரை வேறு கண்ணாடி பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இந்த பாத்திரத்தை ஒரு மெல்லிய துணியால் காற்றுப் புகாமல் மூடி ஆறு வாரங்கள் இருட்டான அறையில் வைத்தால் ஆப்பிள் சீடர் வினிகர் ரெடி !
மேலும் படிக்க – அப்போதுதான் பூத்த பூக்கள் போல எப்போதும் பிரெஷ் லுக் வேண்டுபவர்க்கு சில ரகசிய குறிப்புகள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!