பணம் நதிநீர் போல உங்களைத் தேடி வந்தடைந்துகொண்டே இருக்கும்.. எந்த ராசிக்கு இந்த யோகம் !

பணம் நதிநீர் போல உங்களைத் தேடி வந்தடைந்துகொண்டே இருக்கும்.. எந்த ராசிக்கு இந்த யோகம் !

இன்று வெள்ளிக்கிழமை த்ரிதியை திதி மூல நட்சத்திரம். கார்த்திகை மாதம் 13ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

இந்த நாளை இரண்டு பாகமாக பிரித்துக் கொண்டால் முதல் பாகம் மிக உயர்வாக முன்னேற்றம் அடையக்கூடிய விதமாக இருக்கும். இரண்டாம் பாகம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டி வரலாம். த்யானம் மனநிம்மதிக்கு உதவும்.

ரிஷபம்

ஒவ்வொரு அடியும் கவனமாக வைக்க வேண்டிய நாளாக இன்று அமைந்திருக்கிறது. ஆன்மிக ரீதியில் செலவுகள் ஏற்படும். இதனால் குடும்ப அதிருப்தி அடைவார்கள். அவர்களுக்கு விளக்கமுடியாமல் மனம் வருந்தலாம். மருத்துவ செலவுகள் வரவிருப்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு பணம் எடுத்து வையுங்கள்.

மிதுனம்

உங்கள் எண்ணங்கள் உயர்வானவையாக இருப்பதால் வாழ்க்கை நிலை நேராக நிலையாக முன்னேறியபடி இருக்கும். பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிப்பீர்கள். ஒட்டுமொத்த மகிழ்ச்சி குடியிருக்கும் நாளில் சில நிமிட சங்கடங்களால் வீணாக்கி விட வேண்டாம். உங்கள் நட்சத்திரங்கள் சொல்வதை கேளுங்கள். அதன்படி நடக்கவும்.

கடகம்

நட்சத்திரங்கள் உடல் நலம் மற்றும் மன ஆரோக்கியத்தை சொல்கின்றன. முயற்சிகளில் உண்மையிருந்தால் நிச்சயம் வெற்றியடையும். வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைவார்கள். மதியத்திற்கு பின்னர் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் இணக்கமாக இருப்பார்கள்.

சிம்மம்

நீண்ட நாள்களாக இருந்த வழக்கு விபரங்கள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நிவர்த்தியாகும். வியாபார உயர்வுகள் எதிரியை வெற்றி காண வைக்கும். நாளின் இரண்டாம் பாகம் பணவிரயங்கள் மற்றும் அவமானங்களை தர இருப்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

கன்னி

சோர்வான நாள். மனம் குழப்பத்திலும் கலக்கத்தில் ஆழ்ந்து கிடைக்கும். மன அழுத்தங்களால் வருத்தம் கொள்ள வேண்டாம். உடன் இருப்பவர்களை சந்தேகிக்காமல் இருங்கள். உங்கள் சமூக வாழ்க்கையில் அவமானங்கள் நேராமல் இருக்க விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

துலாம்

அமைதியான நிதானமான நாள். சிக்கல்கள் இருக்காது. ஷாப்பிங் செல்லுங்கள். எதிலிருந்தோ ஒளிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இந்தப் பைத்தியக்காரத்தனம் சந்தோஷம் தரும். பணம் நதி நீர் போல குறையாமல் உங்களை வந்தடைந்தபடியே இருக்கும். உறவுகள் நிம்மதி தருவார்கள். உடல்நலம் மேம்படும்.

விருச்சிகம்

வியாபாரத்தை விரிவுபடுத்தும் யோசனை எழலாம். செலவாகும் பணம் அர்த்தமுள்ளதாக இருக்கும், நாளைய மூலதனமாக மாறும். புதிய ஆரம்பங்கள் இப்போது வேண்டாம். பங்குதாரர்களிடம் விவாதம் வேண்டாம். வெளிநாட்டில் இருந்து சுப செய்தி வரலாம்.

தனுசு

நாள் முழுதும் விருந்து கேளிக்கை என உற்சாகமாக செல்லும். ஆனாலும் உங்கள் மனம் எதனாலோ கோபம் கொண்டிருக்கும். அதில் இருந்து வெளியே வந்த அந்தந்த கணங்களின் சந்தோஷங்களை அனுபவிக்க பழகிக்கொள்ளுங்கள். பணவிரயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களிடம் நிதானம் கடைபிடிக்கவும்.

மகரம்

மனசோர்வினால் நடப்பதெல்லாம் கெடுதலாகவே உங்களுக்கு தோன்றலாம், வேலைக்கு விடுமுறை போடுவது இன்னும் சிறப்பான முடிவு. ஆரோக்கியமான உணவு உங்கள் நாளை பலமாக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள். பிள்ளைகள் கேள்விகள் உங்களை அயர்ந்து போக வைக்கும்.

கும்பம்

நட்சத்திரங்களின் சேர்க்கை குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கை செய்கிற நாள். ஒரு நிமிடம் சந்தோஷ செய்தி வரும் அடுத்த நிமிடமே மனவேதனை நிகழ்வொன்று நடக்கலாம். உடல் பலம் இழந்து இருப்பதால் பதட்டம் அதிகரிக்கும். மாலை நேரம் எல்லாம் சரியாகும். மகிழ்வாகும்.

மீனம்

பயணிப்பதற்கு சரியான நாள். கொடுத்த கடன்கள் திரும்ப வரலாம். பணம் கிடைப்பது உங்களுக்கு நன்மையை தரும். வியாபார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். பெரும் லாபங்களை வியாபாரத்தில் பார்க்க கூடிய நாள். உல்லாச பயணம் போக திட்டமிடுங்கள்.

predicted by astro asha shah

 

 

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்